அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்நாட்டு செய்தியாளர் ஒருவரிடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!
அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடைப்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் CNN தொலைகாட்சி செய்தியாளரிடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். இதனையடுத்து வெள்ளை மாளிகையில் அந்த செய்தியாளருக்கு செய்தி சேகரிப்பதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர் சந்திப்பின் போது CNN தொலைக்காட்சியின் செய்தியாளர் அகோஸ்டா, ஆயுதங்கள் இல்லாமல் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குள் வருபவர்களை எப்படி ஊடுருவல்காரர்கள் என்று கூற முடியும் என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த டிரம்ப், தன்னை அமெரிக்காவை ஆட்சி செய்ய விடுங்கள் என செய்தியாளரிடம் தெரிவித்தார். அதன் பின்னர் செய்தியாளர் கேள்வி எழுப்ப முயன்றார். ஆனால் செய்தியாளரின் தொடர் கேள்வியால் கோபமடைந்த டிரம்ப், பொய் செய்திகளை மக்களுக்கு தெரியப்படுத்தி வரும் நீங்கள் தான் பொதுமக்களின் எதிரி என குறிப்பிட்டு செய்தியாளரை பேசவிடாமல் தடுத்துள்ளார்.
President Trump snarled at CNN reporter Jim Acosta, telling the journalist 'that's enough, put down the mic,' and calling him 'the enemy of the people.' pic.twitter.com/YQHe1WKyv1
— Reuters Top News (@Reuters) November 7, 2018
மேலும் கேள்வி எழுப்பியது போதும் அமறுங்கள் என செய்தியாளர் அகோஸ்டாவை டிரம்ப் அதிகாரத்துடன் வலியுறுத்தினார். ஆனால் அகோஸ்டா தொடர்ந்து கேள்வி கேட்க முயன்றதால் ஒரு கட்டத்தில் பதில் அளிக்க மறுத்து டிரம்ப் நகர்ந்து சென்றார்.
இந்த விவகாரம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த விவகாரத்தினை அடுத்து CNN தொலைக்காட்சி செய்தியாளர் அகோஸ்டாவிற்கு வெள்ளை மாளிகையில் செய்தி சேகரிப்பதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது!