ரஷ்ய ஹாக்கர்கள் மற்றும் எப்பிஐ இயக்குநர் கோமே ஆகியோரே தனது தேர்தல் தோல்விக்கு காரணம் என அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஹிலரி கிளிண்டன் கூறினார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி கூறியதாவது:-
கடந்த வருடம் அக்டோபர் 27-ம் தேதி தேர்தல் நடந்திருந்தால், நான் அதிபராகியிருப்பேன். தேர்தலில் தோல்விக்கு நானே பொறுப்பேற்று கொள்கிறேன்.
எனது தேர்தல் வெற்றியை இரண்டு காரணிகள் மாற்றிவிட்டன. பிரசார குழு தலைவர் ஜான் டோடெஸ்டாவின் இமெயில்களை ரஷ்ய ஹாக்கர்கள் திருடி வெளியிட்டதும், வெளியுறவு அமைச்சராக இருந்த போது, தனியார் சர்வர்களை பயன்படுத்தியது தொடர்பாக விசாரணை செய்ய போவதாக எப்பிஐ இயக்குநர் ஜிம் கோமே கடிதம் எழுதியதும் பாதித்தது.
மேலும் ரஷ்ய அதிபர் புடின் இந்த தேர்தலில் தலையிட்டார். இதனால் எனது வெற்றியை பாதித்ததுடன், டிரம்ப் வெற்றி பெற உதவியது என அவர் கூறினார்.