சமீபத்தில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அன்னிய முதலீடு தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குவைத் நாட்டு நிதிதுறை அதிகாரிகளும், பாகிஸ்தான் அதிகாரிகளும் கலந்துக் கொண்டார்கள்.
இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு பின்னர் அனைவரும் விருந்துக்காக வெளியே சென்றனர். அப்போது அங்கிருந்த பாகிஸ்தான் நிதித்துறை செயலாளர் சுற்றும் முற்றும் பார்த்து யாரும் இல்லையென உறுதி செய்து, குவைத் நாட்டு அதிகாரிகள் அமர்ந்திருந்த மேஜை மீது இருந்த பர்ஸை திருடிச்செல்கின்றார்.
இச்சம்வத்தை அடுத்து குவைத் அதிகாரி தன் பர்ஸை காணவில்லை என புகார் அளித்ததாக தெரிகிறது. புகாரை அடுத்து அங்கிருந்த அதிகாரிகள் பர்ஸை தேடியும் கிடைக்கவில்லை.
Grade 20 GoP officer stealing a Kuwaiti official's wallet - the official was part of a visiting delegation which had come to meet the PM pic.twitter.com/axODYL3SaZ
— omar r quraishi (@omar_quraishi) September 28, 2018
இதனையடுத்து அதிகாரப்பூர்வமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது, இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படை சோதனையை மேற்கொண்டு CCTV காட்சியை ஆய்வு செய்துள்ளது. அப்போது பர்ஸை திருடியது பாகிஸ்தான் முதலீட்டுத்துறை செயலாளர் ஜரார் ஹைதர் கான் என்பது தெரியவந்துள்ளது.
ஜரார் ஹைதர் கான் திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்ட காட்சிகள் தற்போது வெளியாகி அந்நாட்டு மக்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பான செய்தியை பாகிஸ்தானின் உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டதை அடுத்து சமூக வலைதளங்களில் பாக்கிஸ்தான் மீது பலதரப்பு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.