Viral Video: ‘வேண்டாம்…..விட்டுடு’ என வடிவேலு style-ல் அழும் சீன வீரர்கள்!!

சீன வீரர்களின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, அதில் அவர்கள் அழுவதைக் காண முடிகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 23, 2020, 04:09 PM IST
  • எல்லையில் இந்திய ராணுவத்தின் வலிமையைக் கண்டு சீன வீரர்கள் திகிலடைந்துள்ளனர்.
  • வீடியோ வீரர்கள் புயாங் ரயில் நிலையத்திற்கு பயணிக்கும் போது பேருந்தில் படமாக்கப்பட்டுள்ளது.
  • லடாக்கில் உள்ள இந்திய இராணுவம் தொடர்ந்து சீனாவுக்கு பொருத்தமான பதிலை அளித்து வருகிறது.
Viral Video: ‘வேண்டாம்…..விட்டுடு’ என வடிவேலு style-ல் அழும் சீன வீரர்கள்!! title=

பெய்ஜிங்: எல்லையில் இந்திய ராணுவத்தின் வலிமையைக் கண்டு சீன வீரர்கள் திகிலடைந்துள்ளனர்.  நிலைமை என்னவென்றால், எல்லைக்கு போக வேண்டும் என்ற நினைப்பே அவர்களை கண்ணீர் விட வைக்கிறது. சீன வீரர்களின் (Chinese Soldiers) வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, அதில் அவர்கள் அழுவதைக் காண முடிகிறது. இந்த வீரர்கள் இந்திய எல்லையில் தாங்கள் பணியமர்த்தப்பட்டதால் வருத்தத்தில் உள்ளனர் என கூறப்படுகிறது.

இந்த வீடியோ முதலில் சீன சமூக ஊடகமான WeChat-ல் வெளியிடப்பட்டது.  ஆனால் பின்னர் அது அகற்றப்பட்டு விட்டது என்று தைவான் செய்தி தெரிவித்துள்ளது. இந்த வீடியோ வீரர்கள் புயாங் ரயில் நிலையத்திற்கு பயணிக்கும் போது பேருந்தில் படமாக்கப்பட்டுள்ளது. இராணுவத்தில் சேர்க்கப்பட்ட இந்த வீரர்கள், பயிற்சியின் பின்னர் இந்தியாவின் எல்லையில் பணியில் சேர அனுப்பப்பட்டனர்.

அழுதபடியே பாடல்

இந்த வீடியோவில், சீன ராணுவ வீரர்கள் PLA-ன் 'க்ரீன் ஃப்ளவர்ஸ் இன் த ஆர்மி' என்ற பாடலைப் பாடுவதைக் காண முடிகிறது. தைவான் நியூசின் படி, இந்த வீடியோ முதலில் ஃபுயாங் சிட்டி வீக்லியின் WeChat பக்கத்தில் வெளியிடப்பட்டது.  ஆனால் பின்னர் இது விரைவாக அகற்றப்பட்டது.

ALSO READ: இந்தியாவின் எல்லையில் கேபிள்கள் பதிப்பதாக வெளியாகும் செய்திகளை மறுக்கும் China

இனி மோதலை விரும்பவில்லை

லடாக்கில் உள்ள இந்திய இராணுவம் தொடர்ந்து சீனாவுக்கு பொருத்தமான பதிலை அளித்து வருகிறது. சமீபத்தில், சீன துருப்புக்களின் ஊடுருவலுக்கான முயற்சியையும் இந்திய ராணுவம் (Indian Army) முறியடித்தது. இந்த சம்பவத்திற்குப் பிறகு சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது வீரர்கள் மீது கோபமடைந்ததாகவும் செய்திகள் வந்தன. இந்திய வீரர்களைப் பார்த்து சீன இராணுவம் ஏன் பின்வாங்கியது என்று Xi Jinping கோவமடைந்ததாகத் தெரிகிறது. பேங்கோங் ஏரியின் (Pangong Lake) தெற்குப் பகுதியில், இந்திய இராணுவம் பல செயலுத்தி ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த சிகரங்களைக் கைப்பற்றியுள்ளது என்று அறியப்படுகிறது. நமது ராணுவத்தின் வலிமை காரணமாக, சீன வீரர்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே சீன படைகள் நேருக்கு நேர் மோதலைத் தவிர்த்து வருகின்றன. 

ALSO READ: சீன அதிபர் Xi Jinping-ஐ கோமாளி என கூறிய நபருக்கு 18 ஆண்டுகால சிறை தண்டனை!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News