எச்சரிக்கை!! இன்னும் 100 ஆண்டுகளில் பூமி அழியலாம்- ஸ்டீஃபன் ஹாக்கிங்கின்

Last Updated : May 4, 2017, 02:13 PM IST
எச்சரிக்கை!! இன்னும் 100 ஆண்டுகளில் பூமி அழியலாம்- ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் title=

உலகின் மிக மிகவும் பிரபலமான விஞ்ஞானி இங்கிலாந்தின் ஸ்டீபன் ஹாக்கிங். இவர் உலகில் ஏற்படும் மாற்றங்களை குறித்து ஆய்வு செய்து வருகிறார்.

இவர் உலக மக்களுக்கு ஒரு எச்சரிக்கை தந்துள்ளார். அதாவது, அடுத்த நூற்றாண்டுக்குள் மனிதர்கள் வேறொரு கிரகத்தை கண்டறிந்து அங்கே குடியேற வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார். இது உலக மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

உலகம் அழிவதை பற்றி ஏற்கெனவே ஒரு முறை ஸ்டீஃபன் ஹாக்கிங்  குறிப்பிட்டிருந்தார். அப்போது 1000 ஆண்டுகளில் பூமி மனிதர்களால் அழியும் என்றார். ஆனால் இப்பொழுது வெறும் 100 ஆண்டுகள் போதும். ஆபத்து எந்த நேரமும் பூமியை தாக்கலாம். அதற்குள் வேறு கிரகம் கண்டறிந்து அங்கே குடியேற வேண்டியிருக்கும் எனக் கூறியுள்ளார். 

இதற்கு காரணம், உலகின் பருவ நிலை மாற்றம், குளோபல் வார்மிங் நாளுக்கு நாள் தீவிரமான பிரச்னையாக மாறிக்கொண்டே வருகிறது. வறட்சி, அணு ஆயுதங்களினால் நடைபெறவிருக்கும் அழிவு, மக்கள் தொகை அதிகரிப்பு, தொற்று நோய்கள் உள்ளிட்ட பிரச்னைகள் அதிகரித்துக் கொண்டே செல்வது தான்.

Trending News