புது தில்லி: இந்திய பிரபல தொழிலதிபரும் இன்ஃபோசிஸ் இணை நிறுவனருமான நாராயண மூர்த்தி தனது மருமகன் ரிஷி சுனக்கின் 10, டவுனிங் ஸ்ட்ரீட் பிரச்சாரத்தில் பங்கு வகித்ததாகவும் லண்டனின் அதிகாரத்தில் அவர் தலையிட்டதாகவும் UK கன்சர்வேடிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2021 இல் லண்டனின் அரசியலை உலுக்கிய பார்ட்டிகேட் ஊழல் தான் போரிஸ் ஜான்சனின் வீழ்ச்சி ஏற்பட்டது.
போரிஸ் ஜான்சனுடன் ஒருபோதும் ரிஷி சுனக் போட்டி போடவில்லை என்பதும், ஆனால், பிரதமர் வேட்பாளர்கள் என்று நம்பப்பட்ட பென்னி மோர்டான்ட் உட்பட பலரையும் தாண்டி பிரதமர் பதவியை வென்றார்.
ஜான்சன் தனது பிரதமர் பதவியின் பெரும்பகுதியில் ரிஷி சுனக்குடன் இணக்கமாகவே உணர்ந்தார். ஆனால், சுனக் இறுதியில் கருவூலச் செயலர் பதவியிலிருந்து (நிதி அமைச்சரைப் போன்றது) விலகியதும், ஜான்சன் அதிர்ச்சியடைந்ததாக தெரியவந்துள்ளது.
தி டெலிகிராப்பின் அரசியல் ஆசிரியரான பென் ரிலே-ஸ்மித் எழுதிய 'தி ரைட் டு ரூல்' என்ற புதிய புத்தகத்தில் ஜான்சன், ''Who the f--k does he think he is? என்று எழுதியுள்ள வரிகள் இப்போது வைரலாகிறது.
மேலும் படிக்க | பிரதமராக அல்ல... இந்துவாக வந்திருக்கிறேன்... ராமர் கதாகாலட்சேபத்தில் ரிஷி சுனக்!
பிப்ரவரி 2023 க்கு முன்பே, பார்ட்டிகேட் ஊழல் குறித்த சூ கிரேயின் ஆரம்ப விசாரணை கண்டுபிடிப்புகளில், ஜான்சன் தனது அதிகாரப்பூர்வ பிரதமர் இல்லத்தில் விருந்துகளை நடத்துவதற்காக கோவிட் கட்டுப்பாடுகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட சூழ்நிலையில் ரிஷி சுனக் தனது பிரதமர் பதவிக்கான முயற்சியைத் தொடங்கினார் என புதிய புத்தகம் வெளிப்படுத்துகிறது.
"2021 இலையுதிர்காலத்தின் பிற்பகுதியில், வடக்கு அயர்லாந்தின் அப்போதைய செயலாளரான பிராண்டன் லூயிஸின் சிறப்பு ஆலோசகர் வெஸ்ட்மின்ஸ்டர் பப்பில் அதிபரின் உள் குழு, சுனக் பிரீமியர்ஷிப்பின் வடிவத்தைப் பற்றி விவாதிப்பதைக் கேட்டபோது, சந்தேகம் வந்தது' என்று தகவலறிந்த நன்கு ஒருவர் கூறினார்," என்று புத்தகம் கூறுகிறது. இந்த புத்தகத்தின் ஒரு பகுதி தி டெலிகிராப்பில் வெளியிடப்பட்டது.
டிசம்பர் 23, 2023க்கு முன்னதாகவே சுனக்கின் பிரீமியர்ஷிப் தொடர்பான விவாதங்கள், 'ReadyforRishi' டொமைன் பெயர் ஆன்லைனில் பதிவுசெய்யப்பட்டபோதும், அவரது சாத்தியமான பிரீமியர் பதவிக்கான ஆதரவை கேன்வாஸ் செய்வதற்கான சுனக்கின் நோக்கத்தின் முந்தைய அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | வேருடன் அழிக்கப்படுவார்கள்... காலிஸ்தானி தீவிரவாதம் குறித்து ரிஷி சுனக்!
அந்த சமயத்தில் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சனுக்கு, சுனக், அடுத்த பிரதமராகலாம் என்ற சாத்தியங்கள் கவலையை ஏற்படுத்தியது. இங்கிலாந்து பிரதமராக சுனக்: நாராயண மூர்த்தியின் பங்கு குறித்து போரிஸ் ஜான்சன் என்ன நம்பினார் என்றும், போரிஸ் ஜான்சன் அரசியல் சதிகளில் நம்பிக்கை கொண்டவர் என்று புத்தகம் கூறுகிறது.
பிரிட்டிஷ் பிரதம மந்திரி போரிஸின் தலைமை ஆலோசகராகப் பணியாற்றிய பிரிட்டிஷ் அரசியல் வியூகவாதியைப் பற்றி குறிப்பிடுகையில், "சுனக்கின் மாமனார், இந்திய கோடீஸ்வரர் நாராயண மூர்த்தி அவரை பிரதமராக்க செல்வாக்கு செலுத்தினார் என்று அவர் சொல்வது ஆதாரமற்ற வதந்தி" என்று டோமினிக் கம்மிங்ஸ் கூறுவதாக புத்தகம் கூறுகிறது.
பார்ட்டிகேட் கிளர்ச்சி நடைபெற்றபோது, டவுனிங் ஸ்ட்ரீட்டில் கம்மிங்ஸ் உத்தியோகபூர்வமாக எந்த பதவியிலும் இல்லை. ஜான்சன் ஜூலை 2019 முதல் நவம்பர் 2020 வரை அவர் பிரதமரின் ஆலோசகராக இருந்தார். நவம்பர் 2020 இல் ஜான்சன் ராஜினாமா செய்தார், இப்போது சுனக்கின் அரசியல் செல்வத்தை உயர்த்துவதற்காக வேலை செய்கிறார் என்று நம்பினார்.
இந்த புத்தகத்தில், வேறு பல சுவராசியாமான செய்திகள் இருக்கும் என்று நம்பப்படுகிறது. பென் ரிலே-ஸ்மித் எழுதிய 'The Right to Rule: Thirteen Years, Five Prime Ministers and the Implosion of the Tories' Hachette UK பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. ஆசியா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் இந்த புத்தகம் எங்கு கிடைக்கும் என்பது தொடர்பான தெளிவான தகவல்கள் இல்லை.
மேலும் படிக்க | டைம் இதழின் டாப் 100 நிறுவனங்களில் இன்ஃபோசிஸ்! உலகப் பொருளாதரத்தில் ஆதிக்கம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ