கொரோனா பரவலுக்குப் பிறகு உலகில் நடக்கவிருக்கும் தொடர்ச்சியான வினோதமான நிகழ்வுகளில், கேள்விப்படாத ஒரு கதை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தடுப்பூசிகள் தொடர்பாக மக்களிடையே பல குழப்பங்களும் கேள்விகளும் இருக்கின்றன. அதில் முக்கியமானது இரண்டு டோஸ் தடுப்பூசி போதுமானதா, வெவ்வேறு நிறுவனங்களின் தடுப்பூசிகளை ஒருவர் போட்டுக் கொள்ளலாமா, ஒரு டோஸ் மற்றும் போட்டால் அது பயனுள்ளதாக இருக்குமா என்பது தடுப்பூசிகள் தொடர்பான பல கேள்விகளில் முதன்மையானவை.
ஆனால் இதுபோன்ற தடுப்பூசி தொடர்பான கேள்விகளுக்கும் ஒரு இத்தாலிய பெண்ணின் அனுபவங்கள் பதிலை கொடுக்கலாம். 23 வயதான இத்தாலிய பெண்மணி ஒருவர் சமீபத்தில் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியின் (Pfizer-BioNTech vaccine) ஆறு டோஸைப் போட்டுக் கொண்டார் என்ற செய்தி இத்தாலியில் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தார். அதிலும் அவர் அனைத்து தடுப்பூசிகளையும் ஒரே நேரத்தில் போட்டுக் கொண்டார் என்பது தான் ஹைலைட்!
Also Read | தொற்றுநோய் காலத்தில் பெற்றோர் உதவி செய்யவில்லை, என்று குற்றம் சுமத்தும் ஸ்ருதி ஹாசன்
இத்தாலி பெண்ணுக்கு தவறாக போட்டுக் கொண்டதாக AGI செய்தி நிறுவனம் திங்களன்று தெரிவித்துள்ளது. அதிர்ஷ்டவசமாக, தடுப்பூசியின் ஆறு டோஸ்களை போட்ட பிறகும் அந்தப் பெண்ணுக்கு எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படவில்லை.
இது முதல்முறையாக நடைபெற்ற விஷயம் என்பதால் உலக அளவில் முக்கியத்துவம் பெறுகிறது. ஆறு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட இத்தாலி பெண்ணுக்கு பாராசிட்டமால் மற்றும் பிற மருந்துகள் கொடுக்கப்பட்டன.
இந்தத் தவறு எப்படி நடந்தது என்ற கேள்வியும் எழுகிறது. உண்மையில் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டிருந்த செவிலியர் தடுப்பூசியின் முழு குப்பியையும் தவறாக செலுத்திவிட்டார். ஒரு குப்பியின் அளவு ஆறு தடுப்பூசிகளுக்கு சமம்.
Also Read | நீருக்கடியில்உடற்தகுதி குறித்த விழிப்புணர்வைப் பரப்பும் இளைஞன்
இதுபோல் இதுவரை நடந்ததாக தகவல் இல்லை. இதுவரை ஒருவருக்கு நான்கு டோஸ்கள் போடப்பட்டதாக பதிவாகியுள்ளது.
இந்த விஷயம் குறித்து நாட்டின் medicine regulatorக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக AFP தெரிவித்துள்ளது. இஸ்ரேல், ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் ஃபைசர் தடுப்பூசி அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"பயோஎன்டெக்கின் (BioNTech) தற்போதைய COVID-19 தடுப்பூசியால் எந்த பிரச்சனையும் இல்லை. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. தற்போதைய நிலைமையை சமாளிக்க தடுப்பூசியை போடுவது அவசியம்" திங்களன்று ஃபைசர் (Pfizer) அறிவித்தது.
இந்த தடுப்பூசி தற்போது உலகம் முழுவதும் 90 நாடுகளில் பயபடுத்தப்படுகிறது. விரைவில், நிறுவனம் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்திற்கான அதன் தலைமையகமாக அடையாளம் கண்டுள்ள சிங்கப்பூரில் தடுப்பூசிகளை தயாரிக்கத் தொடங்கும்.
Also Read | ஜூஸ் பவுடரில் 2.5 கிலோ தங்கத் துகள்கள் கடத்தல்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR