பிரிட்டிஷ் அரசு உளவு சட்டத்தில் திருத்தம்.. இனி குழந்தைகளும் James Bond ஆகலாம்..!!!

உளவுச் சட்டத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு முக்கிய திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் இப்போது குழந்தைகளும் ஜேம்ஸ் பாண்டுகளாக மாறலாம். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 9, 2021, 09:12 PM IST
  • உளவுச் சட்டத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு முக்கிய திருத்தத்தை கொண்டு வந்துள்ளது.
  • இதன் மூலம் இப்போது குழந்தைகளும் ஜேம்ஸ் பாண்டுகளாக மாறலாம்.
  • பெற்றோர்களையும் குழந்தைகள் உளவு பார்க்கலாம்.
பிரிட்டிஷ் அரசு உளவு சட்டத்தில் திருத்தம்.. இனி குழந்தைகளும் James Bond ஆகலாம்..!!! title=

உளவுச் சட்டத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு முக்கிய திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் இப்போது குழந்தைகளும் ஜேம்ஸ் பாண்டுகளாக மாறலாம். பெற்றோர்களையும் குழந்தைகள் உளவு பார்க்கலாம்.

நிறுவனங்கள் உளவு வேலைக்கு குழந்தைகளைப் பயன்படுத்த  ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. காவல்துறையினர், MI5 Military Intelligence, Section 5 (ராணுவ உளவு அமைப்பு, பிரிவு 5) , MI6- Military Intelligence, Section 6 ( ராணுவ உளவு அமைப்பு, பிரிவு 6) , தேசிய குற்றவியல் நிறுவனம், சூதாட்ட ஆணையம், மாகாண மற்றும் மாவட்ட கவுன்சில், சுற்றுச்சூழல் நிறுவனம் மற்றும் உணவு தர நிர்ணய நிறுவனம் ஆகியவை குழந்தைகளை உளவு வேலைக்கு பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களில் அடங்கும்.

சில சூழ்நிலைகளில் பெற்றோருக்கு எதிராக உளவு பார்க்கவும் அனுமதி
பிரிட்டனில் (Britain) பெற்றோருக்கு எதிராக குழந்தைகளை உளவு பார்ப்பதைப் பொறுத்தவரை,  இரண்டு வகைகளாக இது பிரிக்கப்பட்டுள்ளது. 16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக உளவு பார்க்க முடியாது. இருப்பினும், இந்த வயதிற்கு மேலே உள்ள குழந்தைகள் சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் பெற்றோருக்கு எதிராக உளவு வேலை பார்க்கலாம்.

குழந்தைகள் ஆணையர் வெளியிட்டுள்ள ஆட்சேபணை
பிரிட்டனின் குழந்தைகள் ஆணையர் அன்னே லாங்ஃபீல்ட், ‘குழந்தைகளை உளவு வேலை பார்ப்பதை தடை செய்ய வேண்டும். குழந்தைகளை உளவு பார்க்க அனுமதிப்பதற்கு எந்தவிதமான நியாயமான காரணமும் இல்லை’ என்று கூறினார்.

ALSO READ | லடாக்கில் இந்திய ராணுவத்தினரிடம் சிக்கிய  சீன வீரர்.. ராணுவ அதிகாரிகள் விசாரணை.!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News