Netflixக்காக சீரியல் தயாரிக்கும் அமெரிக்க முன்னாள் அதிபர் Barack Obama!

Netflix-க்காக அமெரிக்க முன்னாள் அதிபர் Barack Obamaவும் அவரது மனைவியும் சீரியல் தயாரிக்கப் போகிறார்கள். அது அடுத்த ஆண்டு வெளிவரும். நம்ப முடியவில்லையா? இது கதையல்ல நிஜம்... 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 3, 2020, 10:10 PM IST
Netflixக்காக சீரியல் தயாரிக்கும் அமெரிக்க முன்னாள் அதிபர் Barack Obama!  title=

Netflix-க்காக அமெரிக்க முன்னாள் அதிபர் Barack Obamaவும் அவரது மனைவியும் சீரியல் தயாரிக்கப் போகிறார்கள். அது அடுத்த ஆண்டு வெளிவரும். நம்ப முடியவில்லையா? இது கதையல்ல நிஜம்... 

அமெரிக்க முன்னாள் அதிபர் Barack Obamaவும் அவரது மனைவி மிச்சேல் ஒபாமாவும், நெட்ஃபிலிக்ஸ் பொழுதுபோக்கு ஊடகத்திற்காக அனிமேஷன் சீரியல்களை தயாரிக்கப் போகிறார்கள். அந்த சீரியலின் பெயர் ‘Ada Twist, Scientist’. இது குழந்தைகளுக்கான வெப் சீரிஸ் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Netflixக்காக ஒபாமாவும் அவரது மனைவியும் தயாரிக்கும் மற்றும் ‘அடா ட்விஸ்ட், சயின்டிஸ்ட்’ என்ற அனிமேஷன் சீரியல் 2021 இல் ஒளிபரப்பாகும்.

Doc McStuffins மற்றும் Vampirina உட்பட பல சீரியல்களை உருவாக்கி, பல விருதுகளை பெற்ற Chris Nee, முன்னாள் அதிபரின் அனிமேஷன் தொடருக்காக பராக் ஒபாமா மற்றும் மிச்சேல் ஒபாமாவுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.

ஆக்கப்பூர்வமான அனுஷ்காவின் செய்தி | ஆண் குழந்தையே வேண்டும் என்பது குறுகிய பார்வை: அடித்து தூள் கிளப்பும் அனுஷ்கா

பிரபல எழுத்தாளர் ஆண்ட்ரியா பீட்டி (Andrea Beaty) மற்றும் illustrator David Roberts ஆகியோர் தயாரிப்பில் வெளியாகி சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கும் புத்தகத் தொடரின் அடிப்படையில் ‘அடா ட்விஸ்ட்’ (‘Ada Twist’) சீரியல் எடுக்கப்படுகிறது. அறிவியல் கண்டுபிடிப்பு, ஒத்துழைப்பு மற்றும் நட்பு மூலம் மக்களுக்கு உதவும் ஒரு இளம் கருப்பு விஞ்ஞானியின் கதை ‘Ada Twist’.

இளம் பார்வையாளர்களை ஊக்குவிக்கும் வகையில், இந்த கற்பனைத் தொடரில் உண்மையான விஞ்ஞானிகளும் இடம் பெறுவார்கள்.  

Netflix நிறுவனத்துடன் ஒபாமாவும் அவரது மனைவியும் 2018 மே மாதத்தில் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டனர். இந்த லட்சியத் தம்பதியினர் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி திட்டங்களின் மூலம் மக்களின் ரசனையை, ஆக்கப்பூர்வமாக மாற்றி  அமைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News