‘Baby Shark’ ‘Despacito’ வை ஓவர்டேக் செய்த ரகசியம் தெரியுமா?

‘Baby Shark’ YouTube வீடியோ பாடல் ‘Despacito’ வை ஓவர்டேக் செய்த ரகசியம் தெரியுமா? 'Despacito' தான் இதற்கு முன்னர், அதிகமானவர்கள் பார்த்த யூடியூப் வீடியோ வாக இருந்தது.  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 6, 2020, 05:42 PM IST
  • 2019-ம் ஆண்டு ஜனவரியில் பில்போர்டு ஹாட் 100 பட்டியலில், 32 வது இடத்தை பிடித்தது பேபி ஷார்க்.
  • இங்கிலாந்தின் சிறந்த 40 பாடல்கள் பட்டியலிலும் இடம் பிடித்தது.
  • யூடியூப் ஸ்ட்ரீம்களிலிருந்து மட்டும் சுமார் 38.66 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது பேபி ஷார்க்...
‘Baby Shark’ ‘Despacito’ வை ஓவர்டேக் செய்த ரகசியம் தெரியுமா? title=

புதுடெல்லி: மிகவும் பிரபலமான மற்றும் பரவலாக விரும்பப்படும் குழந்தைகளின் பாடல் ‘பேபி ஷார்க்’ ஒரு புதிய மைல்கல்லை உருவாக்கியுள்ளது! தென் கொரிய நிறுவனமான பிங்க்ஃபோங் (Pinkfong) பதிவுசெய்த மனதை மயக்கும் மெல்லிசை, யூடியூப்பில் இதுவரை அதிகம் பார்த்திராத வீடியோவாக சாதனை படைத்துள்ளது. 7.04 பில்லியனுக்கும் அதிகமானவர்கள் இந்த வீடியோ பாடலை பார்த்துள்ளனர்.  

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்த பேபி ஷார்க் வீடியோ, பிரபலமான அமெரிக்க கேம்ப்ஃபயர் பாடல் ஆகும். இந்தப் பாடல் பலமுறை  பல்வேறு விதமாக மறு உருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. 10 வயதான கொரிய-அமெரிக்கப் பாடகர் ஹோப் செகோயின் பாடிய இந்தப் பாடலின் ஆங்கில பதிப்பின் வீடியோ, 2016-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்டது.

2019-ம் ஆண்டு ஜனவரியில் பில்போர்டு ஹாட் 100 பட்டியலில், 32 வது இடத்தை பிடித்தது பேபி ஷார்க். மேலும், இங்கிலாந்தின் சிறந்த 40 பாடல்கள் பட்டியலிலும் இடம் பிடித்தது. யூடியூப் ஸ்ட்ரீம்களிலிருந்து மட்டும் சுமார் 38.66 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது பேபி ஷார்க் பாடல்.  
முதலில் தென்கிழக்கு ஆசியாவிலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலும் வைரலாகிய இந்தப் பாடல், கொரோனா வைரஸ் பரவலின்போது, கை கழுவுவதை ஊக்குவிக்கும் விதமாகவும் மாற்றியமைக்கப்பட்டு சக்கைபோடு போடுவதுடன், உலக சாதனையும் பதிவு செய்துள்ளது.

‘Baby Shark’ YouTube வீடியோ பாடல் லூயிஸ் ஃபோன்ஸி மற்றும் டாடி யாங்கியின் 'டெஸ்பாசிட்டோ'வை ('Despacito') விஞ்சி பரவலாக அனைவராலும் பார்க்கப்படுகிறது. 'Despacito' தான் இதற்கு முன்னர், அதிகமானவர்கள் பார்த்த யூடியூப் வீடியோ வாக இருந்தது.  

2 நிமிடங்களுக்கும் அதிக நேரம் செல்லும் இந்த வீடியோவில் "‘Baby Shark’, “mommy shark,” “daddy shark” என்று பாடல் பாடும்போது மீண்டும் மீண்டும் "டூ டூ டூ டூ டூ டூ" பாடல் வரிகள் இடம்பெறுகின்றன. 
கொரோனா நோய்தொற்றுக்கு மத்தியில், இந்த பாடலின் தயாரிப்பாளர்கள் கொரோனா வைரஸை எதிர்கொள்ள “உங்கள் கைகளை கழுவவும் என்ற சிறிய ஆனால் ஆக்கப்பூர்வமான விஷயத்தை அறிமுகப்படுத்தியது தனிப்பட்ட சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு கற்பிக்கிறது. இதுவே இந்த பாடல் மிகவும் பிரபலமானதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.

அனைவருக்கும் பிடித்தமான விஷயமாக இருந்தாலும், அதை காலத்திற்கு ஏற்றாற்போல் மாற்றி புத்தாக்கம் செய்தால் பழையதே புதிய சாதனைகளை படைக்கும் என்பதற்கான அண்மை எடுத்துக்காட்டு  பேபி ஷார்க்

இந்த பாடல் தென் கொரியாவில் மிகவும் பிரபலமாக உள்ளது, ரெட் வெல்வெட், கேர்ள்ஸ் ஜெனரேஷன் மற்றும் பிளாக்பிங்க் (Red Velvet, Girls’ Generation, Blackpink) போன்ற இசைக்குழுக்கள் இந்தப் பாடலை தங்கள் இசை நிகழ்ச்சிகளில் பாடுகின்றன. 

“நர்சரி ரைம்கள் எப்போதுமே மெதுவானவை, மிகவும் அழகாக இருக்கின்றன. உங்கள் குழந்தைகள் தூங்குவதற்கு உதவும் ஒன்று.பிங்க்ஃபோங்கின் Baby Shark மிகவும் நவநாகரீகமானது மற்றும் வேடிக்கையான நடன நகர்வுகளை கொண்டுள்ளது. இந்த பாடலுக்கு செய்யப்பட்டுள்ள அனிமேஷன் மிகவும் அருமையாக இருக்கிறது. அடுத்த தலைமுறைக்கான இதை நாங்கள் கே-பாப் (K-Pop) என்று அழைக்கிறோம், ”என்று பிங்க்ஃபாங்கின் மார்க்கெடிங் இயக்குநர் ஜேமி ஓ (Jamie Oh) தெரிவிக்கிறார்.

 கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News