பொருளாதாரத்தில் இந்தியா முன்னேறும்: ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை!!

பொருளாதாரத்தில் இந்தியா விரைவில் முன்னேற்றம் அடையும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Last Updated : Apr 11, 2018, 06:49 AM IST
பொருளாதாரத்தில் இந்தியா முன்னேறும்: ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை!! title=

பொருளாதாரத்தில் இந்தியா விரைவில் முன்னேற்றம் அடையும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் அரசு முறைப்பயணமாக  6 நாட்கள் ஆப்ரிக்க நாடுகளுக்கு சென்றுள்ளார், அதன்படி, கடந்த 7-ம் தேதி கினியா சென்ற அவர், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். இதன்பின் அங்கிருந்து சுவாசிலாந்து சென்றார். 

இந்நிலையில், சுவாசிலாந்து பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ராம்நாத் உரை நிகழ்த்தினார். இதன்மூலம் சுவாசிலாந்து பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தும், முதல் இந்திய ஜனாதிபதி என்ற பெருமையை அவர் பெற்றார். பின்னர் அங்கிருந்து ஜாம்பியா நாட்டிற்குச் சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
 
பின்னர், ஜாம்பியா நாட்டிற்கு சென்ற ராம்நாத் கோவிந்த் லுசாகா நகரில் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசியது, தற்போதை சூழ்நிலையில் இந்தியா பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் நிச்சயமாக பொருளாதாரத்தில் இந்தியா முன்னேற்றம் அடையும் என்றார்.

Trending News