புத்த கயா குண்டு வெடிப்பு: 5 பேருக்கு ஆயுள் தண்டனை!!

புத்த கயா குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தேசிய புலனாய்வு அமைப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Last Updated : Jun 1, 2018, 05:45 PM IST
புத்த கயா குண்டு வெடிப்பு: 5 பேருக்கு ஆயுள் தண்டனை!! title=

புத்த கயா குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தேசிய புலனாய்வு அமைப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பீஹார் மாநிலம் புத்த கயா பகுதியில் கடந்த 2013ஆம் ஆண்டு, தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்டது. இந்த குண்டுவெடிப்பால் ஏராளமான புத்தமத துறவிகள்,பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் காயமடைந்த நிலையில், உமர் சித்திக்,அசாருதீன் குரேசி, இம்சியாஸ் ஆலம், ஹைதர் அலி மற்றும் முஜிபுல்லா அன்சாரி ஆகிய 5 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

மேலும் இவர்கள் அனைவருக்கும் இந்திய முஜாஹிதீன் அமைப்பில் தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இதுகுறித்த வழக்கை விசாரித்து வந்த தேசிய புலனாய்வு அமைப்பு சிறப்பு நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட 5 பேரும் குற்றவாளிகள் என அறிவித்து, 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

 

Trending News