Diabetes Diet: நீரிழிவு நோயை நிர்மூலமாக்கும் பிரியாணி இலை.... பயன்படுத்தும் சரியான முறை இதோ

Bay Leaf To Control Diabetes: நாம் அன்றாடம் பயன்படுத்தும், மசாலா பொருட்கள் பல, மருத்துவ குணங்கள் நிறைந்தது என்பதை மறுக்க முடியாது. அதில் ஒன்று பிரிஞ்சி இல்லை என்று அழைக்கப்படும் பிரியாணி இலை. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 15, 2024, 01:09 PM IST
  • கணையத்தில் போதுமான அளவு இன்சுலின் சுரக்காமல் இருக்கும் போது, சர்க்கரை நோய் ஏற்படுகிறது.
  • நாம் அன்றாடம் பயன்படுத்தும், மசாலா பொருட்கள் பல, மருத்துவ குணங்கள் நிறைந்தது.
  • சர்க்கரை நோயை குணமாக்க உதவும் இயற்கை மசாலா.
Diabetes Diet: நீரிழிவு நோயை நிர்மூலமாக்கும் பிரியாணி இலை.... பயன்படுத்தும் சரியான முறை இதோ title=

Diabetes Diet: உலக அளவில், சர்க்கரை நோய் என்னும் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலை அளிக்கும் ஒரு விஷயமாக உள்ளது. இந்தியாவில் மட்டும், சுமார் 8 கோடி பேர் சர்க்கரை நோய் என்னும் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக, தரவுகள் கூறுகின்றன. 

வாழ்க்கை முறை, மற்றும் உணவுப் பழக்கம் இதற்கு முக்கிய காரணமாக உள்ள நிலையில், நகரத்தில் வாழும் மக்களுக்குத் தான் பாதிப்பு அதிகம் இருந்து வந்தது. ஆனால் இப்போது கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கும், சர்க்கரை நோய் இருப்பதை காணலாம்.

சர்க்கரை நோய் எவ்வாறு ஏற்படுகிறது?

நாம் உணவு சாப்பிடும் போது, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இதனை சீர் செய்ய, கணையத்திலிருந்து இன்சுலின் என்னும் ஹார்மோனை சுரக்கிறது. எனவே சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க, கணையம் போதுமான அளவு இன்சுலினை சுரக்க வேண்டும். கணையத்தில் போதுமான அளவு இன்சுலின் ஹார்மோன் சுரக்காமல் இருக்கும் போது, சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

சர்க்கரை நோயை குணமாக்க உதவும் இயற்கை மசாலா (Best Masala To Control Blood Sugar Level)

நாம் அன்றாடம் பயன்படுத்தும், மசாலா பொருட்கள் பல, மருத்துவ குணங்கள் நிறைந்தது என்பதை மறுக்க முடியாது. அதில் ஒன்று பிரிஞ்சி இல்லை என்று அழைக்கப்படும் பிரியாணி இலை. இது நீரழிவு நோயை கட்டுப்படுத்த பெரிதும் உதவியாக இருக்கும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். சர்க்கரை நோயை கட்டுப்படுத்த, எகிறும் சுகர் லெவலை கட்டுக்குள் வைக்க, பிரிஞ்சி இலை என்னும் பிரியாணி இலையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க | இரத்த சர்க்கரை நோய் குறித்த சில கட்டுக்கதைகள்.... அவசியம் தெரிஞ்சுக்கோங்க

பிரியாணி இலை என்று அழைக்கப்படும் பிரிஞ்சி இலை ஆங்கிலத்தில் Bay Leaf என அழைக்கப்படுகிறது. நீரழிவு நோயாளிகள் தினமும் பிரியாணி இலையை சேர்த்துக் கொள்வதன் மூலம், சர்க்கரை நோய் மட்டுமல்ல, கொலஸ்ட்ரால் அளவையும் சிறப்பாக கட்டுப்படுத்தலாம் என்று, பயோகெமிக்கல் நியூட்ரிஷன் என்னும் இதழில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

பிரியாணி இலையை பயன்படுத்தும் சரியான முறை

பிரியாணி இலையை, சமையலில் பயன்படுத்துவதன் மூலம், உணவின் சுவையும் மனமும் மேம்படுத்தப்படுகிறது. இதனை சேர்த்துக் கொள்வதால் மிகவும் நன்மை பயக்கும். இருப்பினும் சமையலில் சேர்ப்பதை தவிர, இதனை தேநீராக தயாரித்து அருந்தினால் ஆரோக்கிய பலன்களை முழுமையாக அடைந்து, ரத்த சர்க்கரை அளவை சிறப்பாக கட்டுப்படுத்தலாம்.

பிரியாணி இலை தேநீர் தயாரிக்கும் முறை

பிரியாணி இலை டீ தயாரிக்க, முதலில் பாத்திரத்தில் சிறிது நீரை சேர்த்து, அதனை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும். பின்னர் அதில் பிரியாணி இலையை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும். இதனை வடிகட்டினால் பிரியாணி டீ தயார். இதைத் தவிர, பிரியாணி இலைகளை, ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவில் ஊற வைத்து, பின்னர் அதனை சூடாக்கி வடிகட்டி குடிப்பதும் நன்மை பயக்கும்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | நீரிழிவு நோயாளியா நீங்கள்? மறந்தும் கூட இந்த பழங்களை சாப்பிட வேண்டாம்... ஜாக்கிரதை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News