2024-ல் பெரிதும் ஏமாற்றிய 2 தமிழ் படங்கள்! ஒன்னு கங்குவா..இன்னொன்னு எது தெரியுமா?

Tamil Cinema 2024 Big Movies That Disappointed Fans : இந்த ஆண்டு வெளியான சில படங்கள் பெரும் வெற்றியை பெற்றிருந்தாலும், ஒரு சில படங்கள் ரசிகர்களை ஏமாற்றியதாக இருக்கிறது. அவை என்னென்ன தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Nov 21, 2024, 09:45 AM IST
  • 2024ல் ரசிகர்களை ஏமாற்றிய 2 படங்கள்
  • ஒன்னு கங்குவா..
  • இன்னொரு படம் எது தெரியுமா?
2024-ல் பெரிதும் ஏமாற்றிய 2 தமிழ் படங்கள்! ஒன்னு கங்குவா..இன்னொன்னு எது தெரியுமா? title=

Tamil Cinema 2024 Big Movies That Disappointed Fans : இந்த 2024ஆம் ஆண்டில், பல தமிழ் படங்கள் வெளியானது. ஆனால், முதல் 6 மாதங்களில் சிறிய பட்ஜெட் படங்களும், பெரிதாக பிரபலமாகாத ஹீரோவின் படங்களும்தான் வெளியாகின. ஆனால், 6 மாதங்களுக்கு பின்னர் வெளியான பெரிய படங்களில் சில, ரசிகர்களை பெரிதும் ஏமாற்றி இருக்கின்றன.

ரசிகர்களை ஏமாற்றிய கங்குவா படம்:

சூர்யா நடிப்பில் நவம்பர் 14ஆம் தேதியான நேற்று பான்-இந்திய அளவில் வெளியானது. 10 மொழிகளில் வெளியான இந்த படத்தை, சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். ரூ.300 கோடி செலவில் உருவான இந்த படத்தை, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருந்தது. 

சூர்யா கடந்த 2 ஆண்டுகளில் ஹீரோவாக நடித்த படங்கள் அனைத்துமே ஓடிடியில் வெளியாகின. கேமியோவில் நடித்த படங்கள் மட்டும்தான் தியேட்டர்களில் வெளியிடப்பட்டன. இதனால், இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்தது. 

அது மட்டுமல்ல, பிரத்யேகமான கிராஃபிக்ஸ், சூர்யாவின் புதுவிதமான நடிப்பு, ஃபேண்டசி த்ரில்லர் உள்ளிட்ட அம்சங்களும் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் இருந்தது. படத்தின் டீசர் மற்றும் டிரைலர் எடிட் நன்றாக இருந்ததை தொடர்ந்து, படம் நன்றாக வந்துள்ளதாக ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், முதல் நாள் முதல் காட்சியிலேயே பலர் நினைத்ததும் பொய் என நிரூபனம் ஆனது. தமிழகம் மட்டுமன்றி, கேரளாவை சேர்ந்த ரசிகர்களும் கூட, இப்படத்தை பார்க்க பணத்தை செலவு செய்து விட்டதாக பேசினர். இரண்டு வருடமாக எதிர்பார்த்து காத்திருந்தவர்களை, இப்படம் ஏமாற்றி விட்டதாக பலர் கருத்துகளை தெரிவித்தனர். 

இந்தியன் 2:

கமல்ஹாசன் நடிப்பில் 1996ஆம் ஆண்டு உருவான படம், இந்தியன். இந்த படத்தின் இரண்டாம் பாகம், கிட்டத்தட்ட 28வருடங்கள் கழித்து, இந்த ஆண்டின் ஜூலை மாதம் 12ஆம் தேதி வெளியானது. இந்த படத்தை, இயக்குநர் ஷங்கர் கிட்டத்தட்ட 5 வருடங்களாக எடுத்து வந்தார். படப்பிடிப்பில் விபத்து, ரிலீஸ் தேதி தள்ளிப்போனது, படத்தில் நடித்த பலர் உயரிழப்பு என இந்தியன் 2 படத்திற்கும் ஆரம்பத்தில் இருந்து தடைக்கு மேல் தடை ஏற்பட்டது. 

பல பிரச்சனைகளை தாண்டி வெளியான இந்த படம், ரசிகர்கள் மத்தியில் நெகடிவ் விமர்சனங்களை பெற்றது. ஒரு சிலர், கதை சுமாராக இருப்பதாக கூறிய நிலையில், இன்னும் சிலர் பழைய கதை போன்ற உணர்ச்சியை இப்படம் கொடுப்பதாக கூறியிருந்தனர். இதில் இடம் பெற்றிருந்த வசனங்கள், சித்தார்த்தின் நடிப்பு என பல விஷயங்கள் இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டது. 

இரண்டு படங்களின் தோல்விக்கான காரணம் என்ன? 

இந்தியன் 2 திரைப்படம், விமர்சன ரீதியாக தோல்வியை தழுவினாலும், ரசிகர்களை ஏமாற்றினாலும், வசூல் ரீதியாக வெற்றியை பெற்றது. சுமார் 300 கோடி செலவில் உருவானதாக கூறப்படும் இந்த படம், ரூ.148 கோடியை மட்டுமே வசூலித்ததாம். இந்த படத்தின் வேலைகள் 5 ஆண்டுகளாக நடைப்பெற்றதும், கதை Out Of Date ஆனதும் இந்த தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. அது மட்டுமன்றி, படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் படத்தை பற்றி புகழ்ந்து பேசினர். ஆனால் ரசிகர்களுக்கு படம் பார்க்கும் போது அந்த புகழ்ச்சி ஏன் என்பதே தெரியவில்லை. இதனாலும் இப்படம் தோல்வி அடைந்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது. இதன் விளைவாக இந்தியன் 3 படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

மேலும் படிக்க | 2024-ல் வெளியான டாப் 5 தமிழ் திரைப்படங்கள்! முதல் இடத்தில் யார் தெரியுமா?

Tamil Movies

கங்குவா ஏமாற்றத்திற்கான காரணம்:

கங்குவா படத்தை, தோல்வி படம் என இவ்வளவு விரைவில் கூறிவிட முடியாது. இருப்பினும், படம் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திய எதிர்பார்ப்பு இதற்கு காரணமாக இருக்கலாம் எனக்கூறப்படுகிறது. போதாக்குறைக்கு பட தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா, “படம் 2000 கோடி வசூலிக்கும்” என்றெல்லாம் கூறி விட்டார். ஆனால் பாேகிற போக்கை பார்த்தால், படம் வெகு சில கோடிகளை மட்டுமே தாண்டும் போல தெரிகிறது. 

கங்குவா படத்தில், இரைச்சலான இசை பெரும் குறையாக பார்க்கப்படுகிறது. சுமாரான கதையை, சூப்பரான மேக்கிங்க கொண்டு எடுத்திருப்பதால் கங்குவா தேருவதாக, படம் பார்த்தவர்கள் கூறுகின்றனர். 

மேலும் படிக்க | 2024 Hit Movies : 2024ல் ரிலீஸான 124 படங்களில் 6 படங்கள் மட்டுமே ஹிட்! என்னென்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News