எடையை குறைக்க உடற்பயிற்ச்சி செய்யும் நடிகை சினேகா :வீடியோ

தென்னிந்திய திரைப்பட நடிகையான சினேகா உடற்பயிற்ச்சி செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. 

Last Updated : Mar 19, 2018, 01:11 PM IST
எடையை குறைக்க உடற்பயிற்ச்சி செய்யும் நடிகை சினேகா :வீடியோ title=

தென்னிந்திய திரைப்பட நடிகையான சினேகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர். "இங்கனே ஒரு நீல பாக்ஷி" என்ற மலையாள பட மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். 2001-ம் ஆண்டு "என்னவளே" என்ற படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த போது, அவருடன் நடித்த நடிகர் பிரசன்னா-வை காதலித்து 2012-ம் ஆண்டு மே 11-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு "பிரசன்னா விகான்" என்ற ஒரு மகன் இருக்கிறான்.

தமிழக பட்ஜெட்டை புள்ளி விவரத்தோடு அலசிய மய்யம் கமல்ஹாசன்

திருமணத்திற்கு பிறகு சினிமா துறையில் இருந்து சற்று ஒதுங்கி இருந்தார். விளம்பரங்களில் மட்டும் நடித்து வந்தார். தற்போது அவர் மீண்டும் சினிமா நடித்து வருகிறார். சமீபத்தில் "வேலைக்காரன்" படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சினிமா வாய்ப்புகள் தேடி வருவதால், தந்து உடம்பை ஃபிட்டாகவும், அழகாவும் வைத்துகொள்ள ஜிம்மில் உடற்பயிற்ச்சி செய்து வருகிறார். அவருக்கு உறுதுணையாக அவரது கணவர் நடிகர் "பிரசன்னா" உதவி செய்து வருகிறார்.

நடிகர் சினேகா ஜிம்மில் உடற்பயிற்ச்சி செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.

வீடியோ:-

 

 

beginning of a new journey have a looooong way to go

A post shared by Sneha Prasanna (@realactress_sneha) on

 

Trending News