தமிழில் அறிமுகமாகி இந்தியில் பிரபலமானவர் தான் அதிதி ராவ் ஹைதாரி (Aditi Rao Hydari). இவர் ஐதராபாத்தை சேர்ந்தவர். இவர் நடித்த முதல் தமிழ் படம் 2007-ம் ஆண்டில் தமிழில் வெளிவந்த "சிருங்காரம்" எனும் திரைப்படம் ஆகும். இந்த படம் விமரசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுது. இந்த படம் மூன்று தேசிய விருதுகள் பெற்றது.
ஆனால் "சிருங்காரம்" திரைப்படத்திற்கு பின்பு தமிழில் நல்ல வாய்ப்பு அமையவில்லை. ஏற்கனவே 2016-ம் ஆண்டு "பிரஜாபதி" என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார். தென்னிந்தியாவில் வாய்ப்பு சரியாக கிடைக்கததால் பாலிவுட்டுக்கு சென்றார். 2009 ஆம் ஆண்டு டெல்லி 6" என்ற படம் மூலம் இந்தியில் அறிமுகமானார். கிட்டத்தட்ட 15 இந்தி படங்களில் நடித்துள்ளார். நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய "பத்மாவத்" படத்திலும் நடித்திருந்தார்.
2016-ம் ஆண்டு மணிரத்தனம் இயக்கத்தில் வெளியான "காற்று வெளியிடை" படத்தில் நடித்தார். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்க வில்லை. மீண்டும் மணிரத்தனம் இயக்கத்தில் "செக்க சிவந்த வானம்" படத்தில் நடிக்கிறார்.
தமிழ், இந்தி என நடித்து வரும் அதிதி ராவ் ஹைதாரி, சமூக வலைதளங்களில், அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்தவகையில், தற்போது அவர் இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள தலைகீழாக இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.