முழு அடைப்பு போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில் ஒசூரில் இருந்து பெங்களூருவிற்கு பேருந்துக்கள் இயக்கப்பட்டன!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டம் காரணமாக பல இடங்களில் ரயில்கள், பேருந்த போக்குவரத்துக்கள் தடைப்பட்டன.
முன்னதாக நேற்றைய தினம், தமிழகத்தில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழகத்திற்கு வரும் கர்நாடக பேருந்துக்களை நிறுத்திவைத்தனர். இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம் அனுசரிக்கப்பட்டது. இந்த போராட்டத்திற்கு தமிழக போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் உள்பட பெரும்பான்மை தொழிளாலர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்தனர்.
இன்று மாலை 6 மணி வரை அனுசரிக்கப்பட்ட இந்த போராட்டத்தால், தமிழகத்தின் பேருந்துக்கள் காலை முதல் இயக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது முழு அடைப்பு போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில் தமிழகத்தின் எல்லைப் பகுதியான ஒசூரில் இருந்து பெங்களூருவிற்கு பேருந்துக்கள் இயக்கப்பட்டது!
Bus services resume between Karnataka & Tamil Nadu after the #CauveryManagementBoard protest in Tamil Nadu ended. Karnataka State Road Transport Corporation (KSRTC) had stopped its services in the morning today. pic.twitter.com/jW0JMo3QUg
— ANI (@ANI) April 5, 2018