நவம்பர் 1 முதல் மாறும் விதிமுறை! LPG சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்படலாம்! மக்களே உஷார்

எல்பிஜி சிலிண்டர்களின் விநியோக முறை நவம்பர் 1 முதல் மாறவுள்ளது.  இந்த மாற்றங்கள் அனைத்தையும் கவனமாகப் படியுங்கள், ஏனெனில் அவை உங்கள் வாழ்க்கையை நேரடியாக பாதிக்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 27, 2020, 07:45 PM IST
  • எல்பிஜி சிலிண்டர்களின் விநியோக முறை நவம்பர் 1 முதல் மாற்றம்.
  • சிலிண்டர் டெலிவரி ஒன் டைம் கடவுச்சொல் (OTP) அடிப்படையில் இருக்கும்.
  • இண்டேன் கேஸ் நிறுவனம் முன்பதிவு எண்ணை மாற்றியுள்ளது.
நவம்பர் 1 முதல் மாறும் விதிமுறை! LPG சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்படலாம்! மக்களே உஷார் title=

1 நவம்பர் 2020 முதல் உங்கள் எல்பிஜி சிலிண்டரைப் பொறுத்தவரை பல விதிகள் மாறப்போகின்றன. இந்த விதிகளில் மிக முக்கியமானது உங்கள் எரிவாயு சிலிண்டர் (LPG Cylinders) விநியோகம் மற்றும் அதன் முன்பதிவு தொடர்பானது. எல்பிஜி சிலிண்டர்களின் விநியோக முறை நவம்பர் 1 முதல் மாறவுள்ளது. மேலும், சிலிண்டர் விநியோகம் செய்யும் ஏஜென்சியிடம் உங்கள் முகவரி மற்றும் மொபைல் எண்ணை நீங்கள் புதுப்பிக்கவில்லை என்றால், உங்களுக்கான கேஸ் விநியோகம் நிறுத்தப்பபடலாம். அதே நேரத்தில்,  இண்டேன் கேஸ் (Indane Gas) அதன் நுகர்வோருக்கான எரிவாயு முன்பதிவுகளின் எண்ணிக்கையை மாற்றியுள்ளது. இந்த மாற்றங்கள் அனைத்தையும் கவனமாகப் படியுங்கள், ஏனெனில் அவை உங்கள் வாழ்க்கையை நேரடியாக பாதிக்கும்.

நவம்பர் 1 முதல் என்ன மாற்றங்கள் இருக்கும்!!

1. எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தில் OTP முறை: 

எல்பிஜி சிலிண்டர் ஹோம் டெலிவரி (LPG Cylinder Home Delivery) இப்போது ஒன் டைம் கடவுச்சொல் (OTP) அடிப்படையில் இருக்கும். எரிவாயு சிலிண்டர் முன்பதிவுக்குப் பிறகு, வாடிக்கையாளரின் மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். இந்த OTP எண்ணை சிலிண்டர் டெலிவரி செய்ய வரும் ஊழியரிடம் பகிரப்பட வேண்டும். அந்த குறியீடு எண் கணினியுடன் பொருந்தினால் மட்டுமே சிலிண்டர் வழங்கப்படும். ஒரு வேலை உங்களிடம் OTP இல்லையென்றால், டெலிவரி ஊழியர் உங்களுக்கு சிலிண்டர் வழங்காமல் திரும்பி செல்ல முடியும்.

ALSO READ |  LPG மானியம் வங்கி கணக்கில் ஏறுகிறதா என்பதை சரிபார்ப்பது எப்படி?

2. உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைப் புதுப்பிக்கவும்

புதிய சிலிண்டர் விநியோக முறையில் முகவரி மற்றும் மொபைல் எண் புதுப்பிக்கப்படாத  வாடிக்கையாளர்களுக்கு சிரமத்தை அதிகரிக்கும். யாராவது வீட்டை மாற்றியிருந்தால் அல்லது மொபைல் எண்ணை மாற்றியிருந்தால், தயவுசெய்து உங்கள் ஏஜென்சியிடம் புதுப்பிக்கவும். முகவரி தவறாக இருந்தால் அல்லது மொபைல் எண் புதுப்பிக்கப்படாவிட்டால் எரிவாயு சிலிண்டரின் விநியோகம் நிறுத்தலாம். இருப்பினும், புதுப்பித்தவுடன், மீண்டும் டெலிவரி செய்யப்படும். அனைத்து எண்ணெய் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் தங்கள் பெயர், முகவரி மற்றும் மொபைல் எண்ணை புதுப்பிக்குமாறு அறிவித்துள்ளனர். புதிய விதி வணிக எல்பிஜி சிலிண்டருக்கு (Commercial LPG Cylinder) பொருந்தாது.

3. மாற்றப்பட்ட இண்டேன் எரிவாயு முன்பதிவு எண்!

இண்டேன் கேஸின் முன்பதிவு எண்ணிக்கை மாறிவிட்டது. உங்கள் எல்பிஜி சிலிண்டரை முன்பதிவு செய்ய வேண்டுமானால், நவம்பர் 1 முதல் புதிய எண்ணில் முன்பதிவு செய்ய வேண்டும். பழைய எண்ணில் எரிவாயு முன்பதிவு செய்ய முடியாது. இண்டேன் கேஸ் நிறுவனம் தனது எல்பிஜி வாடிக்கையாளர்களுக்கு பதிவுசெய்த மொபைல் எண்ணில் எரிவாயு முன்பதிவு செய்வதற்காக புதிய எண்ணை (SMS) அனுப்பியுள்ளது. இதன் மூலம், நீங்கள் கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்யலாம். எல்பிஜி முன்பதிவு செய்வதற்கு முன்னர் நாட்டின் பல்வேறு வட்டங்களுக்கு வெவ்வேறு மொபைல் எண்கள் இருந்ததாக இந்தியன் ஆயில் தெரிவித்துள்ளது. இப்போது நாட்டின் மிகப்பெரிய பெட்ரோலிய நிறுவனம் அனைத்து வட்டங்களுக்கும் ஒற்றை எண்ணை வெளியிட்டுள்ளது. இண்டேன் கேஸ் வாடிக்கையாளர்கள் நாடு முழுவதும் எல்பிஜி சிலிண்டர்களை முன்பதிவு செய்ய 7718955555 என்ற தொலைபேசி எண்ணில் மேற்கொள்ள வேண்டும். 

ALSO READ |  Whatsapp மூலம் கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான எளிய வழி இதோ!!

4. எல்பிஜி எரிவாயு சிலிண்டர் விலை மாறும்

நவம்பர் 1 முதல், நாட்டின் அரசு எண்ணெய் நிறுவனங்கள் எல்பிஜி சிலிண்டர்களின் விலைகள் மாற்றங்களை குறித்து அறிவிக்கும். சிலிண்டரின் விலை ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் நிர்ணயிக்கப்படுகிறது. அடுத்த மாதம் சிலிண்டர் மலிவானதாகவோ அல்லது விலை உயர்ந்ததாகவோ இருக்கும், இது 1 ஆம் தேதி மட்டுமே தெரியும். அக்டோபரில், எண்ணெய் நிறுவனங்கள் வணிக சிலிண்டர்களின் விலையை அதிகரித்தன.

Trending News