கோடீஸ்வரர் ஆன முன்னாள் தூய்மை பணியாளர்! பணக்காரர் ஆக, ‘இதை’தான் செய்தாராம்..

அதிர்ஷ்டம், எந்த இடத்தில் இருந்து யாருக்கு எப்படி கொட்டும் என்பது தெரியாது. அப்படி, ஒரு தூய்மை பணியாளர் பணக்காரர் ஆன கதை தெரியுமா உங்களுக்கு? இங்கு அது குறித்து பார்ப்போம்.   

Written by - Yuvashree | Last Updated : Apr 22, 2024, 03:46 PM IST
  • கோடீஸ்வரர் ஆன தூய்மை பணியாளர்
  • இவரது சொத்து ஆவணங்கள் மட்டும் 8 மில்லியன் டாலர்கள்
  • இவர் இவ்வளவு பணக்காரர் ஆனது எப்படி?
கோடீஸ்வரர் ஆன முன்னாள் தூய்மை பணியாளர்! பணக்காரர் ஆக, ‘இதை’தான் செய்தாராம்.. title=

நம்மில் சிலர், பங்குச்சந்தையில் முதலீடு செய்வோம். ஒரு சிலர் அது குறித்த சரியான புரிதல் இல்லாத காரணத்தால் “எதில் முதலீடு செய்வது, இதில் முதலீடு செய்தால் லாபம் வருமா? பணத்தை இழந்து விட்டால் என்ன செய்வது?” போன்ற பயங்களாலேயே அதற்கான முயற்சிகளை எடுக்காமல் இருப்பர். 

பங்குகள், வெளிப்படையாக விற்கப்பட்டு, வர்த்தகம் செய்யப்படுவதுதுதான் பங்கு சந்தை. இதில், ஷேர் மார்கெட் மற்றும் ஸ்டாக் மார்கெட் என இருவகை இருக்கின்றன. ஷேர் மார்கெட்டில் நாம் பங்குகளை வர்த்தகம் செய்ய பயன்படுத்திக்கொள்ளலாம். அதுவெ ஸ்டாக் மார்கெட்டில் பத்திரங்கள், மியூச்சுவல் ஃபண்டுகள், டெரிவேடிவ்ஸ் போன்றவற்றில் முதலீடு அல்லது வர்த்தகம் செய்து கொள்ளலாம்.

இப்படி, நன்கு படித்தவர்குளக்கே புரிவதற்கு சிரமமாக இருக்கும் பங்குச்சந்தையில், ஒரு தூய்மை பணியாளர் முதலீடு செய்து இப்போது கோடீஸ்வரர் ஆக இருக்கிறார். அவர் யார்? கோடீஸ்வரர் ஆனது எப்படி? இங்கு பார்ப்போம்.

ஜெனிடர் ரொனால்ட் ரீட்:

அமெரிக்காவில் உள்ள வெர்மோண்ட் என்ற நகரில் பிறந்தவர், ரொனால்ட் ரீட். (Janitor Ronald Read).ஆங்கிலத்தில் ஜேனிடர் என்றால் உதவியாளர்/சுத்தம் செய்பவர் என்று அர்த்தம். இவர் கோடீஸ்வரர் ஆனவுடன் அந்த ஜேனிடர் என்ற பட்டம் இவருக்கு அடையாளமாக அமைந்து விட்டது. இவர், பணக்காரர் ஆவதற்கு முன்னர் தூய்மை பணியாளராகவும் பெட்ரோல் நிலையத்தில் வேலை செய்பவராகவும் இருந்தார். இவரது வருமானம், தினசரி செலவுகளுக்கே போதாமல் இருந்து வந்துள்ளது. ஆனால் இப்போது, பங்குச்சந்தையில் முதலீடு செய்ததன் மூலம் 8 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆவனங்களுக்கு (Portfolio) அதிபதியாகி இருக்கிறார். இது எப்படி? 

எளிமையான வாழ்வு..

ரொனால்ட் ரீட், குறைவான வருமானத்தை பெற்றாலும் தனக்கு ஏற்ற சிக்கனமான வருமானத்தை வாழ்ந்து வந்ததாக கூறுகிறார். மேலும், தனக்கான முதலீட்டு வழிகளையும் அவர் தெளிவாக, எளிதாகவே தேர்ந்தெடுத்திருக்கிறார். புளூசிப் எனப்படும் நம்பகத்தன்மை வாய்ந்த பங்குகளில் மட்டுமே இவர் முதலீடு செய்திருக்கிறார். அதிலும் நிறைய பங்குகளை வாங்காமல் சில தரமான பங்குகளை மட்டுமே நம்பிக்கை வைத்து முதலீடு செய்திருக்கிறார். 

மேலும் படிக்க | வீட்டில் பழைய புத்தகம் இருக்கா? ‘இந்த’ ஐடியாவை வைத்து லட்ச லட்சமாக சம்பாதிக்கலாம்..

நீண்ட கால சொத்து..

ரொனால்ட் ரீட், தனது நீண்ட கால்கத்திற்காகத்தான் சொத்தை சேர்க்க விரும்பியிருக்கிறார். இதனால் அவ்வப்போது வரும் சிறிய லாபத்தை தேடாத இவர், சில நம்பகத்தன்மை வாய்ந்த பங்குகளில் மட்டுமே முதலீடு செய்திருக்கிறார். அது மட்டுமன்றி, தனக்கு அதிக டிவிடண்ட் தரும் பங்குகள் குறித்தும் நன்கு ஆராய்ச்சி செய்த பிறகு அவற்றில் முதலீடு செய்திருக்கிறார். டெக் துறை பங்குகளில் முதலீடு செய்யாத அவர், மருத்துவம், டெலிகாம் உள்ளிட்ட துறைகளை மட்டும் தேர்ந்தெடுத்து முதலீடு செய்திருக்கிறார். 

பங்குச்சந்தை குறித்து ஆராய்ச்சி..

ரொனால்ட், தான் பங்குச்சந்தையில் முதலீடு செய்ததை யாரிடமும் தெரிவிக்கவில்லையாம். குடும்பத்தினருக்கோ, நண்பர்களுக்கோ எதையும் தெரிவிக்காமல் இவர் இந்த வேலையை பார்த்திருக்கிறார். பங்கு சந்தை நிலவரம் குறித்து தெரிந்து கொள்ள, இவர் தினமும் The Wall Street Journal-ஐ படிப்பாராம். தான் முதலீடு செய்த பங்குகளின் ஆவனங்களை இவர் பத்திரமாக சேகரித்து வைத்திருக்கின்றார்.

இத்தனையும் செய்த ரொனால்ட் ரீட், 2014ஆம் ஆண்டு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்து விட்டார். இவர் இறந்த பிறகு இவரது போர்ட்ஃபோலியோவை சோதனை போட்டதில் அதன் மதிப்பு சுமார் 8 மில்லியன் டாலர் என்பது தெரிய வந்திருக்கிறது. இதன் விலைவாக, அவரது குடும்பத்தினருக்கு சுமார் 2 மில்லியன் டாலர்கள் கிடைத்திருக்கிறது. 4.8 டாலர்கள் மருத்துவமனைகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டிருக்கிறது. 

மேலும் படிக்க | SBI Vs HDFC வங்கி... சீனியர் சிட்டிஸன்களுக்கு வட்டியை அள்ளித்தரும் வங்கி எது...!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - @ZEETamilNews ட்விட்டர் - @ZeeTamilNews டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: https://bit.ly/3AIMb22 Apple Link: https://apple.co/3yEataJ

Trending News