அனில் அம்பானியின் மற்றொரு நிறுவனமும் திவாலாக வாய்ப்பு!

கடன் சுமையில் சிக்கியுள்ள அனில் அம்பானியின் மற்றொரு நிறுவனம் விரைவில் திவாலானதாக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது!

Last Updated : Sep 20, 2019, 08:33 AM IST
அனில் அம்பானியின் மற்றொரு நிறுவனமும் திவாலாக வாய்ப்பு! title=

கடன் சுமையில் சிக்கியுள்ள அனில் அம்பானியின் மற்றொரு நிறுவனம் விரைவில் திவாலானதாக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது!

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸின் துணை சார்வு நிறுவனமான குளோபல் கிளவுட் எக்ஸ்சேஞ்ச் (GCX) லிமிடெட், திவால் பாதுகாப்புக்காக அமெரிக்க நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. இதன் பொருள் அனில் அம்பானிக்கு சொந்தமான மற்றொரு நிறுவனம் விரைவில் திவாலானதாக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடும் நெருக்கடியில் சிக்கி தவித்துவரும் அம்பானிக்கு இது மேலும் ஒரு பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. அனில் அம்பானியின் இந்நிறுவனர் 350 மில்லியன் டாலர் செலுத்த வேண்டும் என்ற நிலையில், இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்த காரணத்திற்காக, கடன் மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீஸும் அம்பானியின் நிறுவனத்தின் மதிப்பீட்டைக் குறைத்துள்ளது.

இதுகுறித்து ப்ளூம்பெர்க் ஒரு அறிக்கையில் குறிப்பிடுகையில்., உலகின் மிகப்பெரிய தனியார் கேபிள் அமைப்பான GCX நிலைமை உண்மையில் அதி பாதாளதுக்கு சென்றுள்ளது என குறிப்பிட்டுள்ளது. 

கடந்த ஜூலை மாதத்தில், GCX தனது ஒப்பந்ததாரர்களிடம் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகக் கூறியது, இது அதன் பத்திரங்களின் முதிர்வு தொடர்பான விருப்பங்களைப் பற்றி விவாதிக்க கூடுதல் நேரத்தை வழங்கும் எனவும் கூறப்படுகிறது. 

முன்னதாக, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸும் திவால்நிலைக்கு உட்பட்டது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் (SBI) ரூ .4,800 கோடி கடன் எடுத்தது. பாங்க் ஆப் பரோடாவிடம் இருந்து ரூ .2,500 கோடி கடன் வாங்கியிருந்தது.

சிண்டிகேட் வங்கியிடமிருந்து 1,225 கோடி ரூபாயும், பஞ்சாப் நேஷனல் வங்கியிலிருந்து 1,127 கோடியும், சீனா மேம்பாட்டு வங்கியிடமிருந்து 9,900 கோடியும், எக்சிம் வங்கியிலிருந்து 3356 கோடியும், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில் (மும்பை-லண்டன்) ரூ .2100 கோடியும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் கடன் பெற்றிருந்தது. மார்ச் 2018-ன் தகவல்படி ரிலையன்ஸ் குழுமத்தின் மொத்த கடன் ரூ .1.7 லட்சம் கோடி ஆகும். 

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தவிர, நான்கு குழு நிறுவனங்களுக்கும் அதிக கடன்கள் உள்ளன. அதாவது., ரிலையன்ஸ் கேப்பிடல்ஸ்க்கு 38,900 கோடி, ரிலையன்ஸ் பவர் மீது ரூ .3,000,000 கோடி, ரிலையன்ஸ் இன்ஃப்ராவுக்கு 17,800 கோடி, ரிலையன்ஸ் இன்ஜினியரிங் 7000 கோடி என கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்த கடனை அடைப்பதற்காக அம்பானியின் சொத்துக்கள் அவ்வப்போது விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Trending News