Frozen Green Peas Business: குறைந்த முதலீட்டில் தொழில் செய்ய விரும்புபவர்களுக்கு உதவிடும் வகையில், தொழில் குறித்து பேசுகையில், பட்டாணியை பதப்படுத்தும் தொழில் சிறந்த தேர்வாக இருக்கும். இதில் செலவு மிகவும் குறைவு மற்றும் வருமானம் பம்பர் அளவில் இருக்கும். பட்டாணிக்கு ஆண்டு முழுவதும் தேவை இருக்கும். ஆனால் பச்சை பட்டாணி குளிர்காலத்தில் மட்டுமே அதிகம் கிடைக்கும். திருமணங்கள் மற்றும் பிற நிகழ்வுகளில், காய்கறிகள் மற்றும் பிற உணவு பொருட்கள் உறைந்த பட்டாணியிலிருந்து (Frozen Green Peas) தயாரிக்கப்படுகின்றன. விவசாயிகள் பட்டாணி பயிர் மூலம் 3 - 4 மாதங்களில் பெரும் வருவாய் ஈட்டுகின்றனர்.ஆனால் இன்னும் கொஞ்சம் புத்திசாலித்தனம் காட்டினால், பெரிய அளவில் லாபம் சம்பாதிக்கலாம்.
உங்கள் வீட்டின் ஒரு சிறிய அறையில் இருந்து பதப்படுத்தப்பட்ட பட்டாணி வியாபாரத்தை (Business Idea) நீங்கள் தொடங்கலாம். இருப்பினும், பெரிய அளவில் வியாபாரம் செய்ய வேண்டுமானால் 4000 முதல் 5000 சதுர அடி இடம் தேவைப்படும். அதே சமயம் சிறுதொழில் தொடங்கினால் பச்சை பட்டாணியை உரிக்க சில வேலையாட்கள் தேவைப்படுவார்கள். பெரிய அளவில், உங்களுக்கு பட்டாணி உரித்தல் இயந்திரங்கள் தேவைப்படும். மேலும், தொழிலை செய்வதற்கான சில உரிமங்களும் தேவைப்படும்.
பட்டாணி வணிகத்தை எவ்வாறு தொடங்குவது?
பதப்படுத்தப்பட்ட பட்டாணி தொழிலைத் தொடங்க வேண்டுமானால், குளிர்காலத்தில் விவசாயிகளிடம் பச்சைப் பட்டாணி வாங்க வேண்டும். பொதுவாக, புதிய பச்சை பட்டாணி பிப்ரவரி மாதம் வரை எளிதாகக் கிடைக்கும். உங்கள் வீட்டின் ஒரு சிறிய அறையில் இருந்து உறைந்த பட்டாணி வியாபாரத்தை நீங்கள் தொடங்கலாம். விவசாயிகளிடம் இருந்து பட்டாணியை வாங்கிய பிறகு, அதனை உரிக்கவும், சுத்தம் செய்யவும், வேக வைக்கவும், பக்குவப்படுத்தவும் பணியாளர்கள் தேவை. பட்டாணியை ஒரேயடியாக வாங்க வேண்டும் என்பதல்ல. பச்சை பட்டாணியை வேண்டிய அளவிற்கு வாங்கி பதப்படுத்தலாம்.
வணிகத்தில் கிடைக்கும் வருமானத்தின் அளவு
உறைந்த பட்டாணி தொழிலை தொடங்கினால் குறைந்தது 50 - 80 சதவீதம் லாபம் கிடைக்கும். விவசாயிகளிடம் இருந்து பச்சை பட்டாணியை மொத்தமாக வாங்கும் போது, கிலோ ரூ.10 என்ற அளவில் வாங்கலாம். இதில், இரண்டு கிலோ பச்சை பட்டாணியில் இருந்து சுமார் 1 கிலோ பட்டாணி தானியங்கள் கிடைக்கும். சந்தையில் பட்டாணியின் விலை கிலோ ரூ.20 என வைத்துக் கொண்டால், இந்த பட்டாணியை பதப்படுத்தி மொத்தமாக கிலோ ரூ.120 என்ற அளவிற்கு விற்கலாம். அதே சமயம், உறைந்த பட்டாணி பாக்கெட்டுகளை, சில்லரை கடைக்காரர்களுக்கு நேரடியாக விற்பனை செய்தாலும், அதிக லாபம் கிடைக்கும்.
உறைந்த பட்டாணி எவ்வாறு தயாரிக்கப்படுகிறது
உறைந்த பட்டாணி செய்ய, பட்டாணி முதலில் உரிக்கப்படுகிறது. இதற்குப் பிறகு, பட்டாணி சுமார் 2 நிமிடங்கள் 90 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையில் வேக வைக்கப்படுகிறது. பின்னர் பட்டாணி 3 - 5 டிகிரி சென்டிகிரேட் குளிர்ந்த நீரில் போடப்படுகிறது. அதனால் அதில் காணப்படும் பாக்டீரியாக்கள் முற்றிலுமாக இறந்துவிடும். இதற்குப் பிறகு, சுத்தமான பருத்தித் துணியில் பட்டாணிகளைப் போட்டு நிழலில் உலர்த்த வேண்டும். முழுவதுமாக உலர்ந்தவுடன் பட்டாணியை குளிர்சாதனப் பெட்டியின் பிரீசர் பகுதியில் சேமித்து வைக்க வேண்டும். பல்வேறு எடை கொண்ட பாக்கெட்டுகளில் பட்டாணி அடைக்கப்பட்டு சந்தைக்கு அனுப்பப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ