எந்த கார் வாங்கினால் 3 லட்ச ரூபாய் Discount கிடைக்கும்? தெரியுமா?

கார் வாங்க விரும்புபவர்களுக்கு நல்ல செய்தி இது. சில ரக கார்களை வாங்கும்போது, ரூபாய் 3 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கிறது என்றால், உற்சாகம் அதிகமாகும் தானே? 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 7, 2021, 06:43 PM IST
  • அதிகபட்ச தள்ளுபடி விலையில் கார்
  • சுற்றுச்சூழலுக்கு உகந்த கார்
  • பேட்டரி முழுவதுமாக சார்ஜ் செய்தால், சராசரியாக 452 கி.மீ. வரை பயணிக்கலாம்
எந்த கார் வாங்கினால் 3 லட்ச ரூபாய் Discount கிடைக்கும்? தெரியுமா? title=

புதுடெல்லி: டாடா (Tata) மற்றும் ஹூண்டாய் (Hyundai) கார்களுக்கு 3 லட்சம் ரூபாய் வரை மாபெரும் தள்ளுபடி கிடைக்கிறது என்பது தெரியுமா? டெல்லியில் டாடா மோட்டார்சன் டாடா நெக்ஸன் இ.வி எஸ்யூவியை வாங்கினால், அதிகபட்ச தள்ளுபடி விலையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த காரை வாங்கலாம்.  

டெல்லியில் மின்சார வாகனங்களுக்கு மானியம் கிடைக்கிறது. நீங்கள் கார் வாங்க திட்டமிட்டால், மின்சாரத்தில் இயங்கும் கார் வாங்குவது சிறந்த தெரிவாக இருக்கும். எலக்ட்ரிக் கார் வாங்குவதில் பல நன்மைகள் உள்ளன,

அதில் முக்கியமானவை மூன்று. மின்சார வாகனங்களின் பயன்படுத்துவது மலிவானது, சுற்றுச்சூழலுக்கு உகந்தது. இரண்டாவது தொடர்ந்து உயர்ந்துவரும் பெட்ரோல் விலை காரை வெளியில் எடுக்கவே யோசிக்க வைக்கிறது. நாட்டின் பல பகுதிகளில், பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ .100 என்ற அளவை தொட்டுவிட்டது. உயர்கிறது. மூன்றாவது பெரிய நன்மை எலக்ட்ரிக் காரில் 3 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கிறது.

Also Read | Earth Energy-யின் அட்டகாசமான எலக்ட்ரிக் பைக்குகள்.. செலவு 30 சதவீதம் மிச்சமாகும்..!!

 டெல்லியில் எலக்ட்ரிக் காரை வாங்கினால், உங்களுக்கு ரூ .3 லட்சம் வரை நன்மை கிடைக்கும். டெல்லி அரசின் மின்சார வாகனக் கொள்கையின் கீழ், மின்சார கார் வாங்குவதற்கு ரூ .1.5 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. மானியத்தைத் தவிர, மின்சார கார்களுக்கும் பதிவு கட்டணம் மற்றும் சாலை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் மின்சார கார் தள்ளுபடிகள்

டாடா மோட்டார்ஸின் மின்சார கார்கள் மிகவும் பிரபலமானவை. டாடா மோட்டார்ஸின் எலக்ட்ரிக் கார்கள் டைகோர் இ.வி (Tigor EV) மற்றும் நெக்ஸன் இ.வி (Tata Nexon EV ஆகியவை மிகவும் விரும்பப்படுகின்றன.

டாடா நெக்ஸன் EV தள்ளுபடி 

டெல்லியில் டாடா மோட்டார்சன் டாடா நெக்ஸன் இ.வி எஸ்யூவியை வாங்கினால், நல்ல தள்ளுபடி பெறலாம். டாடா நெக்ஸன் இ.வி விலை 13.99 லட்சம் முதல் 16.40 லட்சம் வரை இருக்கும். Tata Nexon EV, எக்ஸ்எம் (எலக்ட்ரிக்) இன் அடிப்படை மாடலை நீங்கள் வாங்கினால், அதன் இறுதி விலை சுமார் 14,69,542 ரூபாய் ஆகும்.
டாடா நெக்ஸன் EV இன் பிற மாதிரிகளான XZ + மற்றும் XZ + Lux டிரிம்கள் ஆகும். டாடா நெக்ஸன் XZ+ விலை ரூ .15,40,000 (எக்ஸ்-ஷோரூம்). அதேசமயம், டாடா நெக்ஸன் XZ+ Lux விலை 17.18 லட்சம் ரூபாய் ஆகும்.

Also Read | Make in India-வின் கீழ் இந்தியாவில் விரைவில் வருகின்றன Ola Cars, Ola Scooters!!

 டெல்லி அரசு ரூ .1.5 லட்சம் மானியம் அளிக்கிறது. மானியத்துடன், நீங்கள் காரின் பதிவு கட்டணம் மற்றும் சாலை வரியையும் செலுத்த வேண்டியதில்லை. இந்த வழியில், மூன்று நிலையிலும் கிடைக்கும் தள்ளுபடிகளுக்கு பிறகு ஒட்டுமொத்தமாக 3 லட்சம் ரூபாய்க்கு மேல் தள்ளுபடி கிடைக்கிறது.  

டாடா டைகோர் இ.வி. (Tata Tigor EV) காரை வாங்கினால், இதற்கும் 3 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும். டாடா டைகர் இ.வி. (Tata Tigor EV) ரக காரின் அடிப்படை மாடலான XE Plus விலை ரூ .9.58 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). அதேசமயம், Tata Tigor XM Plus விலை 10.16 ரூபாயாகவும், XT Plus விலை 10.32 லட்சம் ரூபாயாகவும் உள்ளது.

Car

ஹூண்டாயின் மின்சார கார்

ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் (Hyundai Kona) முழுமையான மின்சார கார் (ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக்) ஆகும். இதன் பேட்டரி முழுவதுமாக சார்ஜ் செய்தால், சராசரியாக 452 கி.மீ. வரை பயணிக்கலாம். இதன் விலை சுமார் ரூ. 23.75 லட்சம். டெல்லியில் இந்த கார் வாங்கினால் 3 லட்சத்து ரூபாய்க்கு மேல் குறைந்த விலையில் வாங்கலாம்.

Also Read | உலகின் 'மலிவான' மின்சார பைக்.... விலையை கேட்டு அப்படியே ஷாக் ஆகிடுவீங்க!!

டெல்லியின் மின்சார வாகன கொள்கை

டெல்லி அரசு கடந்த ஆண்டு ஆகஸ்டில் மின்சார வாகனக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. இந்தக் கொள்கையின் கீழ், மின்சார வாகனங்களை வாங்க மக்களை ஊக்குவிக்கும் வகையில் பெரிய அளவில் மானியம் வழங்க ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், நீங்கள் மின்சார இரு சக்கர வாகனம் அல்லது மூன்று சக்கர வண்டி வாங்கினால், ரூ .30,000 வரை ஈ.வி. பைக் மானியம் கிடைக்கும். மின்சார கார்களில் இந்த அளவு மானியம் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை இருக்கலாம்.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News