எந்த வங்கிகள் FDக்கான வட்டி 7.75% விகிதம் வரை வழங்குகின்றன தெரியுமா?

இன்றைய சூழ்நிலையில் பணம் சம்பாதிப்பதைப் போல, அதை சரியாக முதலீடு செய்வதும் முக்கியத்துவம் வாய்ந்தது. வைப்புத்தொகைக்கு அதிக வட்டி தரும் சில வங்கிகள்...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 10, 2021, 06:02 PM IST
  • வைப்புத்தொகைக்கு அதிக வட்டி தரும் சில வங்கிகள்...
  • 7.75% அதிகபட்ச வட்டி
  • மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி
எந்த வங்கிகள் FDக்கான வட்டி 7.75% விகிதம் வரை வழங்குகின்றன தெரியுமா? title=

புதுடெல்லி: இன்றைய காலகட்டத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி முக்கியமோ, அதை சரியான வழிகளில் முதலீடு செய்வதும் அதிலிருந்து கிடைக்கும் லாபமும்  முக்கியமானது. கொரோனா காலத்தில் பல தொழில்கள் நொடிந்து போன நிலையில் இருக்கும் பணத்தை இன்னும் கவனமாக கையாள வேண்டியது அவசியமாகிறது.

பாதுகாப்பான முதலீடு (Investment) என்றால் யாருக்கும் சந்தேகம் என்பதே இல்லாமல் வங்கிகளில் வைக்கும் நிலையான வைப்பு தான். தற்போது வங்கிகள் FDக்கள் (Fixed Deposit) மீதான வட்டி விகிதங்களில் மாற்றம் கொண்டுவந்துள்ளன. இதில், மிகப்பெரிய வங்கிகளை விட சிறிய அளவிலான வங்கிகள் அதிக வட்டி விகிதங்களை வழங்க்கின்றன என்பது ஆச்சரியம் அளிக்கும் தகவல். 

சிறு-குறு நிதிகள் (Microfinance) என்று சொல்லப்படும் சிறிய அல்லது பிரபலமாகாத வங்கிகள் (Banks) மூத்த குடிமக்களுக்கான (Senior Citizen) எஃப்.டி விகிதங்களை அதிகமாக கொடுக்கின்றன. அதில், ஜன ஸ்மால் ஃபைனான்ஸ் (Jana Small Finance Bank), உத்கர்ஷ் சிறு நிதி வங்கி (Utkarsh Small Finance Bank), சூர்யோதயா சிறு நிதி வங்கி (Suryoday Small Finance Bank),நார்த் ஈஸ்ட் சிறு நிதி வங்கி (North East Small Finance Bank) ஆகிய வங்கிகளின் வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கின்றன.

Also Read | Fixed Deposit: FDக்கு அதிக வருமானத்தை அளிக்கும் இந்த 5 வங்கிகள்!

சூர்யோதயா சிறு நிதி வங்கி (Suryoday Small Finance Bank)
சூர்யோதயா வங்கி, மூத்த குடிமக்களின் நிலை வைப்புத் தொகைக்கு 4.5% முதல் 8% வரை வழங்கி வருகிறது. 5 ஆண்டு எஃப்.டிக்கு அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது சூர்யோதயா சிறுநிதி வங்கி.

உத்கர்ஷ் சிறு நிதி வங்கி (Utkarsh Small Finance Bank)
உத்கர்ஷ் சிறு நிதி வங்கி 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான எஃப்.டிகளுக்கு (Fixed Deposit) 3.50% முதல் 7.50% வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது.  மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் இது.  

ஜன ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Jana Small Finance Bank)
ஜன ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான நிலையான வைப்புக்கு 3% முதல் 7.75% வரை கொடுக்கப்படுகிறது. முதிர்வு காலம் 3 ஆண்டுகள் முதல் 5 வருடங்களுக்கும் குறைவான வைப்புத்தொகைக்கு அதிக வட்டி விகிதத்தை வங்கி வழங்குகிறது. இந்த வைப்புத்தொகைக்கு 7.75% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

Also Read | Axis வங்கி FD கால்குலேட்டர்: ஆன்லைன் கால்குலேட் செய்வது எப்படி?

நார்த் ஈஸ்ட் சிறு நிதி வங்கி (North East Small Finance Bank)
நார்த் ஈஸ்ட் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான எஃப்.டி.க்களுக்கு 3.5% முதல் 8% வரை வட்டி வழங்குகிறது.  

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR   

Trending News