EPFO புத்தாண்டு பரிசு: ATM மூலம் பிஎஃப் பணம், எப்போது? அமைச்சகம் அளித்த அட்டகாசமான அப்டேட்

EPFO Update: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO அவ்வப்போது சில புதிய விதிகளை அறிமுகம் செய்கின்றது. பழைய விதிகளில் மாற்றங்களையும் செய்கின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 12, 2024, 12:25 PM IST
  • க்ளெய்ம்கள் விரைவாக செட்டில் செய்யப்படும்.
  • வங்கி அமைப்பு போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும்.
  • மனித குறுக்கீடு அதிகம் இருக்காது.
EPFO புத்தாண்டு பரிசு: ATM மூலம் பிஎஃப் பணம், எப்போது? அமைச்சகம் அளித்த அட்டகாசமான அப்டேட் title=

EPFO Update: பிஎஃப் உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO அவ்வப்போது சில புதிய விதிகளை அறிமுகம் செய்கின்றது. பழைய விதிகளில் மாற்றங்களையும் செய்கின்றது. இபிஎஃப் உறுப்பினர்களின் வசதிகளை அதிகரிக்கவும், செயல்முறைகளை எளிதாக்கவும் இந்த மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு நல்ல செய்தி

சமீபத்திலும் இபிஎஃப் கணக்குகளுக்கான (EPF Account) புதிய சில செயல்முறைகள் பற்றிய செய்திகள் வந்துள்ளன. பிஎஃப் கணக்குகளை வைத்திருக்கும் சுமார் 7 கோடி இபிஎஃப் உறுப்பினர்ளுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. விரைவில், பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) மூலம் நிர்வகிக்கப்படும் பிஎஃப் க்ளெய்ம் தொகையை நேரடியாக ஏடிஎம் மூலம் திரும்பப் பெறலாம். இதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன.

EPF Subscribers: ஏடிஎம் மூலம் பிஎஃப் க்ளெய்ம் பணம் கிடைக்கும்

EPFO 3.0 -இன் ஒரு அங்கமாக இந்த மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இனி வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுப்பது போல இபிஎஃப் கணக்கில் உள்ள தொகையையும் இபிஎஃப் சந்தாதாரர்கள் ஏடிஎம் -இல் இருந்து எடுக்க முடியும். இது குறித்து பேசிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளர் சுமித்ரா தாவ்ரா (Sumitra Dawra), இபிஎஃப்ஓ தனது தகவல் தொழில்நுட்ப அமைப்பை நவீனமயமாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் இபிஎஃப் கணக்கு செயல்முறையை எளிதாகவும் வேகமாகவும் மாற்ற முடியும்.’ என்று கூறினார்.

'எங்கள் பிஎஃப் அமைப்பின் ஐடி உள்கட்டமைப்பை நாங்கள் மேம்படுத்துகிறோம். ஏற்கனவே பல மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கிளெய்ம்களின் தீர்வுக்கான வேகம் அதிகரித்துள்ளது. மேலும் ஆட்டோ க்ளெய்ம் காரணமாக தேவையற்ற செயல்முறைகள் அகற்றப்பட்டுள்ளன.’ என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

IT 2.1 பதிப்பு ஜனவரி 2025 இல் வரும்

EPFO ​​இன் IT உள்கட்டமைப்பை வங்கி அமைப்பின் நிலைக்கு கொண்டு வருவதே இதன் நோக்கம் என சுமித்ரா தாவ்ரா கூறுகிறார். EPFO இன் புதிய பதிப்பு IT 2.1 ஜனவரி 2025 -க்குள் தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். 'இந்த புதிய முறையின் கீழ், பிஎஃப் க்ளெய்ம் செய்பவர்கள், பயனாளிகள் அல்லது காப்பீடு செய்த நபர்கள் நேரடியாக ஏடிஎம் மூலம் பணத்தை எடுக்க முடியும். இந்த செயல்பாட்டில் குறைந்தபட்ச மனித தலையீடு இருக்கும். இது நேரத்தை மிச்சப்படுத்தும். மேலும் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும்.’ என சுமித்ரா தாவ்ரா மேலும் தெரிவித்தார்.

மேலும் படிக்க | ஜனவரியில் அகவிலைப்படி எவ்வளவு உயரும்? மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்

EPF Subscribers: இந்த மாற்றங்கள் செய்யப்படுவதற்கான காரணம் என்ன?

Claim Settlement: க்ளெய்ம்கள் விரைவாக செட்டில் செய்யப்படும்

தற்போது, பிஎஃப் க்ளெய்ம் (PF Claim) தீர்க்கும் செயல்முறைக்கு அதிக நேரம் எடுக்கிறது. ஆனால் இந்த புதிய அமைப்பு அதை தானியங்கு அமைப்பாக, அதாவது ஆட்டோ மோடாக மாற்றும். இதன் காரணமாக செயல்முறைகள் விரைவாக இருக்கும். 

Banking Facility: வங்கி அமைப்பு போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும்

வங்கி அமைப்பு பரிவர்த்தனைகள் எளிதாக்கப்பட்டுள்ளது போல, பிஎஃப் க்ளெய்ம் செய்யும் செயல்முறையும் எளிமையாகவும் அணுகக்கூடியதாகவும் மேம்படுத்தப்படும்.

Less Human Interference: மனித குறுக்கீடு அதிகம் இருக்காது

அனைத்தும் தானியங்கு முறையில் நடப்பதால் மனித குறுக்கீடுகள் குறைக்கப்படும். இதன் காரணமாக முறைகேடுகளும் மோசடி வழக்குகளும் குறையும்.

இது ஆரம்பம்தான் என்றும் கூறிய செயலாளர், எதிர்காலத்தில், EPFO ​​இன் IT அமைப்பு மேலும் மேம்படுத்தப்படும் என்று தெரிவித்தார். இதனால் PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு தங்கள் மொபைல் அல்லது அருகிலுள்ள ஏடிஎம் மூலமாகவே அனைத்து வசதிகளும் கிடைக்கும்.

மேலும் படிக்க | Gratuity Rules: 4 ஆண்டுகள் 11 மாதங்கள் பணிபுரிந்தால் பணிக்கொடை கிடைக்குமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News