EPFO Update: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO தனியார் துறை ஊழியர்களின் நலனுக்காக அவ்வப்போது பல வித புதிய திட்டங்களை அறிமுகம் செய்கிறது. பல பழைய திட்டங்களில் மாற்றங்களும் செய்யப்படுகின்றன. அந்த வகையில், 2025 ஆம் ஆண்டில் மத்திய அரசுடன் இணைந்து இபிஎஃப்ஓ ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ELI Scheme: வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டம்
இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட படி, வரும் 2025 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்தை (ELI திட்டம்) அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், அரசு, ஊழியர்களுக்கும் முதலாளி / நிறுவனங்களுக்கும் ஊக்கத்தொகைகளை வழங்கும். இது வேலை வாய்ப்புகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
EPF Subscribers: இபிஎஃப் சந்தாதாரர்கள் இதை செய்ய வேண்டியது அவசியம்
எனினும், இத்திட்டத்தின் மூலம் பயன் பெறும் இபிஎஃப் சந்தாதாரர்கள் தங்கள் யுனிவர்சல் கணக்கு எண் (UAN), ஆதார் மற்றும் வங்கிக் கணக்கை உடனடியாக இணைப்பது அவசியம். முன்னதாக, யுனிவர்சல் கணக்கு எண், ஆதார் மற்றும் வங்கிக் கணக்கை இணைப்பதற்கான காலக்கெடு 15 டிசம்பர் 2024 என நிர்ணயிக்கப்பட்டது. எனினும், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) இப்போது இந்த காலக்கெடுவை 15 ஜனவரி 2025க்கு ஒத்திவைத்துள்ளது.
EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு வந்த அறிவிப்பு
உலகளாவிய கணக்கு எண், ஆதார் மற்றும் வங்கிக் கணக்கை இணைப்பதற்கான காலக்கெடு ஜனவரி 15, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு சமீபத்தில் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு அறிவித்தது. இந்த அறிவிப்பு, இன்னும் இதை செய்து முடிக்காத ஊழியர்களுக்கு நிவாரணம் அளித்தது. சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் பயனடைய, இந்த இணைக்கும் செயல்முறையை தாமதமின்றி விரைவாக முடிக்க வேண்டும்.
Universal Account Number: இது செயல்படுத்தப்பட்டுள்ளதா?
வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்தின் மூலம் பயனடைய, நடப்பு 2024-25 நிதியாண்டில் சமீபத்தில் சேர்ந்த அல்லது வேலையைத் தொடங்கிய நபர்கள் தங்கள் வங்கிக் கணக்கின் ஆதார் சீடிங் செய்து முடிக்கப்பட்டுள்ளதா என்பதையும் அவர்களின் யூனிவர்சல் கணக்கு எண் செயல்படுத்தப்பட்டுள்ளதா, அதாவது ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும் என்று EPFO கூறியுள்ளது.
காலக்கெடு நீட்டிக்கப்பட்டதை பற்றி இபிஎஃப்ஓ தனது X பக்கத்தில் சமீபத்தில் ஒரு பதிவை வெளிடிட்டது. உறுப்பினர்கள் தங்கள் UAN, ஆதார் மற்றும் வங்கிக் கணக்கை இணைப்பதற்கான காலக்கெடு ஜனவரி 15, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், உங்கள் சமூகப் பாதுகாப்புப் பலன்களை பெறுவதை உறுதிசெய்ய தாமதிக்காமல் இந்த பணியை உடனடியாக செய்து முடிக்க வேண்டும் என்றும் இபிஎஃப்ஓ இதன் மூலம் தெரிவித்துள்ளது.
Employment Linked Incentive Scheme: வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்தின் நோக்கம் என்ன?
- இரண்டு ஆண்டுகளில் 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
- இந்தத் திட்டத்தில், 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், அவர்களின் திறன்களை மேம்படுத்தவும் 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு பயன்படுத்தப்படும்.
- இந்தத் திட்டத்தில், பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடிப் பயன் பரிமாற்றம் மூலம் பலன்கள் வழங்கப்படும்.
- வங்கிக் கணக்கு ஆதாருடன் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே இது நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ