பச்சை வண்ணத்தில் பங்குச் சந்தை குறியீடுகள்: துவக்க நிலை வர்த்தகத்தில் ஏற்றம்!!

கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்து வரும் நம்பிக்கையூட்டும் செய்திகளால், வால் ஸ்ட்ரீட்டில் ஏற்பட்ட சாதகமான போக்கைத் தொடர்ந்து, இந்திய பங்குச் சந்தையும் வியாழனன்று பச்சை வண்ண குறியீடுகளோடு துவங்கியது.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Jul 16, 2020, 12:27 PM IST
பச்சை வண்ணத்தில் பங்குச் சந்தை குறியீடுகள்: துவக்க நிலை வர்த்தகத்தில் ஏற்றம்!!
Zee Media

கொரோனா வைரஸ் தடுப்பூசி (Corona Vaccine) குறித்து வரும் நம்பிக்கையூட்டும் செய்திகளால், வால் ஸ்ட்ரீட்டில் (Wall Street) ஏற்பட்ட சாதகமான போக்கைத் தொடர்ந்து, இந்திய பங்குச் சந்தையும் (Indian Sock Market) வியாழனன்று பச்சை வண்ண குறியீடுகளோடு துவங்கியது. BSE Sensex 112 புள்ளிகள் உயர்ந்து 36,164 என்ற நிலையை எட்டியது, NSE Nifty 13 புள்ளிகள் அதிகரித்து 10,631 என்ற நிலையை எட்டியது. எனினும் பேங்க் நிஃப்டி (Bank Nifty) குறியீடு 234 புள்ளிகள் குறைந்து 21,106 என்ற அளவைத் தொட்டது. வர்த்தகத்தின் துவக்கத்தில், ஐடி, தொழில்நுட்பம், மின்னாற்றல்,  உள்கட்டமைப்பு ஆகிய துறைகளின் பங்குகள் பெரும் லாபத்தைப் பெற்றன.

தற்போதைய பங்குச் சந்தைகளைப் பற்றி பேசுகையில், SEBI-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள தொழில்நுட்ப பங்கு ஆய்வாளர் சிமி பௌமிக், " NSE Nifty-ல், 10,500 முதல் 10,850 வரை என்ற பரந்த அளவில் வர்த்தகம் செய்யப்படுகிறது. சந்தையில் எந்தவொரு சரிவும் வாங்கும் வாய்ப்பாக பார்க்கப்பட வேண்டும்." என்று கூறினார்.  Nifty 10,500 க்கு மேல் இருக்கும் வரை, சந்தை அதிகபட்ச உச்சத்தை அடைந்து விட்டது என கூற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

வர்த்தகத்தின் துவக்கத்தில் இன்போசிஸ், ஜென்சார் டெக்னாலஜிஸ், எம்பாசிஸ், எச்.சி.எல் டெக்னாலஜிஸ், ஃபெடரல் வங்கி, டாடா எல்க்சி, டி.சி.எஸ், மைண்ட் ட்ரீ மற்றும் சியண்ட் ஆகியவற்றின் பங்குகள் முன்னணியில் இருந்தன. ரிலையன்ஸ் கேபிடல், ரிலையன்ஸ் பவர், மேக்மா ஃபின்கார்ப் மற்றும் சுஸ்லான் எனர்ஜி ஆகியவை காலை வர்த்தக அமர்வில் பின்தங்கிய நிலையில் இருந்த பங்குகளில் முக்கியமானவை.

ALSO READ: தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.901.75 கோடி நிதி ஒதுக்கீடு: நிர்மலா

வர்த்தகத்தின் துவக்கத்தில் BSE –யின் ஐடி குறியீட்டு எண் 6.5 சதவீதத்திற்கு மேல் உயர்ந்ததால் ஐடி பங்குகள் பங்குச் சந்தையின் மொத்த அதிகரிப்பில் முக்கிய பங்கு வகித்தன.  ஐ.டி ஜாம்பவான் இன்ஃபோசிஸ் பங்குகள் 9.99% அதிகரித்தன. எம்ஃபசிஸ் பங்குகள் 4.81 சதவிகிதமும் TCS பங்குகள் 3.19 சதவிக்கிதமும் அதிகரித்தன.

முக்கிய ஆசிய சந்தைகளில், ஜப்பானிய நிக்கி 225 குறியீடு 0.76 சதவீதம் குறைந்தது. தென் கொரிய பங்குச்சந்தையான கோஸ்பி 0.59 சதவீதமும், ஹாங்காங்கின் ஹேங் செங் 1.23 சதவீதமும், ஷாங்காய் சந்தை 1.41 சதவீதமும் சரிந்தன.

நேற்று வால் ஸ்ட்ரீட்டில், Dow Jones Index 0.85 சதவீதமும், Nasdaq 0.59 சதவீதமும், S&P 500 0.91 சதவீதமும், ஸ்மால் கேப் 2000 3.95 சதவீதமும் உயர்ந்தன.

ALSO READ: கொரோனா காலத்திலும் லாபமீட்டி பிரமிக்க வைக்கும் இன்ஃபோசிஸ்!!