ஜிஎஸ்டி வசூல் கடந்த எட்டு மாதங்களில் முதல் முறையாக, 2020 அக்டோபரில் ₹1 லட்சம் கோடியைக் கடந்துள்ளது.
அக்டோபரில் ஜிஎஸ்டி (GST)வசூல் ₹1.05 லட்சம் கோடிக்கு மேல் இருந்தது. இந்த ஆண்டு பிப்ரவரி முதல் முதல் முறையாக ₹1 லட்சம் கோடியைக் கடந்தது என்று நிதி அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
2020 அக்டோபர் மாதத்தில் வசூலிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டி வருவாய் ₹1,05,155 கோடி. அதில் சிஜிஎஸ்டி ₹19,193 கோடி, எஸ்ஜிஎஸ்டி ₹5,411 கோடி, ஐஜிஎஸ்டி ₹52,540 கோடி, செஸ் வரி ₹8,011 கோடியாகும் என்று நிதி அமைச்சகம் (Finance Ministry) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் வருவாயுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு இதே மாதத்தில் வசூலிக்கப்பட்ட, ஜிஎஸ்டி வசூல் ₹95,379 கோடி. இந்த மாதம் வசூலிக்கப்பட்ட ஜி எஸ் டி வரி அதை விட 10 சதவீதம் அதிகம்.
நாட்டில் கொரோனா வைரஸ் (Corona Virus) பரவலைத் தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட லாக்டவுன் நடவடிக்கை காரணமாக பொருளாதார நடவடிக்கை முடங்கியது. தொழில்கள் அனைத்து பாதிக்கப்பட்டதன் காரணமாக ஜிஎஸ்டி வரி வருவாய் ₹ஒரு லட்சம் கோடி என்ற வசூலை கடந்த நிலையில், வசூல் பெருமளவு குறைந்தது. இப்போது மீண்டும் ஜிஎஸ்டி வரி வருவாய் மீண்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய் என்ற அளவை கடந்துள்ளது, பொருளாதாரம் (Economy) வளர்ச்சிப் பாதைக்கு மீண்டும் திரும்பி விட்டது என்பதையே காட்டுகிறது.
ALSO READ | சீன ட்ரோன்களை பயன்படுத்தி காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடத்த பாக். சதி ..!!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR