Gold price outlook: தங்கம் தொடர்ந்து விலை குறைந்துகொண்டிருக்கிறது. தங்கத்தின் பிரகாசம் சற்று குறைந்துள்ளதாக பொதுவாக சந்தையில் ஒரு கண்ணோட்டம் உள்ளது. தங்கத்தைப் பொறுத்தவரை மார்ச் மாதம் எப்படி இருக்கும் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் உள்ளது. அடுத்த மாதம் மீண்டும் தங்கத்தின் விலை உயருமா?
ஜீ பிசினஸ் இது குறித்து ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. வெவ்வேறு சந்தை தரகர்கள் மற்றும் நிபுணர்கள் இது குறித்து தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர். வரவிருக்கும் காலத்தில் தங்கத்தின் விலை நிச்சயமாக மீண்டும் உயரும் என்றே அனைத்து தரகர்களும் நிபுணர்களும் கூறியுள்ளனர்.
வெள்ளியன்றும் தங்கம் விலை சரிந்தது
வெள்ளிக்கிழமையும் புல்லியன் சந்தையில் தங்கத்தின் (Gold) வீழ்ச்சி காணப்பட்டது. தங்கத்தின் விலை 200 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது. MCX-ல் தங்கம் 46,000 க்கு கீழே சரிந்தது. MCX-ல் வெள்ளி ரூ .1200 குறைந்து 68,000 ஆக இருந்தது. பங்குச் சந்தை மற்றும் பொருட்களின் சந்தையிலும் (Commodity Market) சரிவு காணப்பட்டது. ஆனால் வெள்ளிக்கிழமை, சந்தை கணிப்புகளை ஒத்தாற்போலவே இருந்தது.
மார்ச் மாதத்தில் தங்கத்தின் விலை என்னவாக இருக்கும்?
பல்வேறு தங்க தரகர்கள் மார்ச் மாதத்திற்கான தங்க விலையை கணித்துள்ளனர். அவற்றின் விவரங்களை இங்கே காணலாம்:
தரகர்களின் கணிப்பு இலக்கு (₹ / 10 கிராம்)
மோதிலால் ஓஸ்வால் - ₹ 50,000 /
பேராடைம் கமாடிட்டி - ₹ 49,000
ஆக்சிஸ் செக்யூரிடிஸ் - ₹ 49,000
ஆனந்த் ரதி - ₹ 49,000
எஸ்.எம்.சி காம்ட்ரேட் - ₹ 49,000
ஏஞ்சல் கமாடிட்டி - ₹ 48,000
சாய்ஸ் புரோக்கிங் - ₹ 48,000
கோட்டக் செக்யூரிடிஸ் - ₹ 47,000
டிரஸ்ட்லைன் - ₹ 47,000
பிருத்வி பின்மார்ட் - ₹ 47,000
தங்கம் 50000 ரூபாய் வரை செல்லும்
தங்கத்தின் விலை (Gold Price) குறித்து சியல் நிபுணர்களுடன் சிறப்பு ஆலோசனைகள் நடத்தப்பட்டன. அடுத்த மாதம் தங்கத்தின் விலை 50000 ரூபாயை எட்டும் என்று ஜேம்ஸ் அண்ட் ஜூவல்லரி கவுன்சிலின் முன்னாள் தலைவர் நிதின் கண்டேல்வால் தெரிவித்தார். அமெரிக்காவின் சீர்திருத்தக் கொள்கையின் காரணமாக, தங்கத்தின் மீது சில அழுத்தங்கள் உள்ளன. ஆனால் வரும் நாட்களில் இது தளர்ந்து தங்கத்தின் விலை மீண்டும் உயரும் என கூறப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாம, மக்கள் இப்போது தங்கத்தை வாங்கலாம் என்றும், தற்போது தங்கம் வாங்குவதால் மக்கள் லாபம் பெறக்கூடும் என்றும் அவர் கூறினார்.
எதிர்வரும் காலங்களில் தங்கம் விலை உயரும்
தங்கத்தின் விலை மீண்டும் உயரும் என மோதிலால் ஓஸ்வாலின் நவ்னீத் தமானி கூறினார். ரூபாயும் வலுப்பெற்று வருவதால் தங்கத்தின் பிரகாசம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அவர். ஷார்ட் டர்மில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்தாலும், லாங் டர்மில் தங்கத்தின் விலை 50000 ரூபாய் முதல் 51000 ஆயிரம் ரூபாய் வரை செல்லக்கூடும் என அவர் கூறியுள்ளார்.
நகைகள் வாங்குவது அதிகரிக்கும்
தங்கத்தின் மீது தற்போது அழுத்தம் காணப்படுவதாக ஆனந்த் ரதியின் ஜிகர் திரிவேதி தெரிவித்தார். MCX தங்கம் வாங்குபவர்கள் ஸ்டாப் லாசை 46250 ஆகவும் டார்கெட்டை 45800 ஆகவும் வைத்திருக்க அவர் அறிவுறுத்தினார். இந்தியாவில் மட்டுமல்லாமல் சீனாவிலும் நகைகள் வாங்குவது அதிகரிக்கும் என்று அவர் கூறினார். மார்ச் மாதத்தில் தங்கத்தின் விலை அதிகரிக்கும் என்று கிட்டத்தட்ட அனைத்து நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.
ALSO READ: Gold, Silver வாங்கும்போது KYC அவசியமா? அரசாங்கம் என்ன சொல்கிறது?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR