அடுத்த மூன்று மாதத்திற்கு உங்கள் PF பிடிப்பை அரசாங்கமே கட்டும்...?

தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்களுக்கான முழு வருங்கால வைப்பு நிதி பங்களிப்பையும் அடுத்த மூன்று மாதங்களுக்கு இந்திய அரசு செலுத்தும் அன அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Last Updated : Mar 26, 2020, 04:54 PM IST
அடுத்த மூன்று மாதத்திற்கு உங்கள் PF பிடிப்பை அரசாங்கமே கட்டும்...? title=

தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்களுக்கான முழு வருங்கால வைப்பு நிதி பங்களிப்பையும் அடுத்த மூன்று மாதங்களுக்கு இந்திய அரசு செலுத்தும் அன அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை பிற்பகல் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற்று பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அடுத்த மூன்று மாதங்களுக்கு EPFO பணத்தில் 24 சதவீதத்தை (12 சதவீத பணியாளர் பங்களிப்பு + 12 சதவீத முதலாளி பங்களிப்பு) இந்திய அரசு செலுத்தும் என்று கூறினார். 100 ஊழியர்கள் மற்றும் நிறுவனத்தில் 90% ஊழியர்கள் மாதத்திற்கு ரூ.15,000 க்கும் குறைவாக ஊதியம் பெறுபவர்களாக இருக்கும் பட்சத்தில் இந்த விதி பொறுந்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான அறிவிப்பில் அவர் "முதலாளி மற்றும் பணியாளர் ஆகிய இரு நிறுவனங்களின் பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPFO) பங்களிப்பை இந்திய அரசு செலுத்தும், இது 24% ஆக இருக்கும், இது அடுத்த 3 மாதங்களுக்கு இருக்கும். இது 100 ஊழியர்கள் மற்றும் நிறுவனத்தில் 90% ஊழியர்கள் மாதத்திற்கு ரூ.15,000 க்கும் குறைவாக ஊதியம் பெறுபவர்களாக இருக்கும் பட்சத்தில் இந்த விதி பொறுந்தும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

வருங்கால வைப்பு நிதி விதிமுறைகளை திருத்துவதற்கும் அரசாங்கம் தயாராக உள்ளது, தொழிலாளர்கள் PF கணக்கில் கடன் அல்லது 3 மாத சம்பளம், எது குறைவாக இருந்தாலும் 75% திரும்பப்பெறாத முன்கூட்டியே வரையும் வசதியை கொண்டு வர முற்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

"கொரோனா தொற்றுநோயால் EPFO ஒழுங்குமுறைக்கு திருத்தம் செய்ய அரசாங்கம் தயாராக உள்ளது, இதனால் தொழிலாளர்கள் PF கணக்கில் கடன் அல்லது 3 மாத சம்பளத்திலிருந்து 75% திருப்பிச் செலுத்த முடியாத முன்கூட்டியே வரை பெறலாம்" என்று அவர் இதுதொடர்பான அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் வெடிப்பின் மத்தியில் நாடு முழுஅடைப்பினை சந்தித்து வரும் நிலையில்., பொருளாதார தாக்கத்தை சமாளிக்க நாடு முழுவதும் 80 கோடி ஏழைகளுக்கு அடுத்த மூன்று மாதங்களில் ஒவ்வொரு மாதமும் 5 கிலோ கோதுமை அல்லது அரிசி மற்றும் ஒரு கிலோ விருப்பமான பருப்பு வகைகளை இலவசமாக விநியோகிப்பதாகவும் நிதியமைச்சர் அறிவித்தார். . 20.5 கோடி பெண்கள் ஜன தன் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் வீட்டு செலவுகளை வழிநடத்துவதற்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு மாதத்திற்கு ரூ.500 பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏழை மூத்த குடிமக்களுக்கு, விதவை மற்றும் ஊனமுற்றோருக்கு ரூ. 5 கோடி, மேலும் தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் MNREGA-ன் கீழ் தினசரி ஊதியம் ரூ.182 லிருந்து ஒரு நாளைக்கு ரூ.202-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

8.69 கோடி விவசாயிகளுக்கு பயனளிப்பதற்காக தற்போதுள்ள பிரதமர் கிஷன் யோஜனாவின் கீழ் ஏப்ரல் முதல் வாரத்தில் விவசாயிகளுக்கு ரூ.2,000 செலுத்துதலை அரசாங்கம் ஏற்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Trending News