நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான HDFC வங்கியின் ஆன்லைன் சேவைகளில் இன்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் சேவைகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக வாடிக்கையாளர் புகார் அளித்துள்ளனர். ஹோலி பண்டிகை, நிதி ஆண்டு முடிவு, வங்கி கணக்கு முடிவு, என மார்ச் 27-ம் தேதியில் இருந்து ஏப்ரல் 4-ம் தேதி வரை பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளுக்கு விடுமுறையில் உள்ள நிலையில், பொதுமக்களுக்கு இதனால், பெரும் பிரச்சனை ஏற்பட்டது. இதன் காரணமாக, ஆன்லைன் பேங்கிங் சேவைகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் ஹெச்டிஎஃப்சி வங்கி வாடிக்கையாளர்களை அதிருப்தியடைய செய்துள்ளது.
‘HDFC Not Banking’ என ட்ரோல் செய்ய தொடங்கிவிட்டனர் நெட்டிசன்கள். ஹெச்டிஎஃப்சி வங்கியை ட்விட்டரில் டேக் செய்து தாங்கள் சந்திக்கும் பிரச்னை குறித்து பதிவிட்டுள்ளனர்.
இதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள HDFC வங்கி, ’ எங்கள் வாடிக்கையாளர்கள் சிலருக்கு ஆன்லைன் நெட் பேங்கிங் அல்லது மொபைல் பேங்கிங் சேவையை பயன்படுத்தும் போது சில சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இந்த பிரச்சனையை தீர்க்க முயற்சி செய்து வருகிறோம். வாடிக்கையாளர் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு நாங்கள் மன்னிப்பு கோருகிறோம். வாடிக்கையாளர்கள் சிறிது நேரம் கழித்து மீண்டும் முயற்சி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்” எனப் பதிவிட்டது.
Some customers are facing intermittent issues accessing our NetBanking/MobileBanking App. We are looking into it on priority for resolution. We apologize for the inconvenience and request you to try again after sometime. Thank you.
— HDFC Bank Cares (@HDFCBank_Cares) March 30, 2021
பின்னர் சற்று நேரத்திற்கு முன் பிரச்சனை தீர்க்கபட்டதாகவும் பதிவிட்டுள்ளது.
The issue faced by some of our customers in accessing NetBanking/MobileBanking App stands resolved. We apologize for the inconvenience caused and thank you for your patience.
— HDFC Bank Cares (@HDFCBank_Cares) March 30, 2021
ALSO READ | Gold Rates Today: இன்றும் குறைந்தது தங்கத்தின் விலை: இன்றைய விலை நிலவரம் இதோ
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR