பணமில்லா சிகிச்சை அளிக்கும் காப்பீடு... நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!

அவசரகால சூழ்நிலைகளில் மருத்துவ சிகிச்சைக்கு சுகாதார காப்பீடு மிகவும் கை கொடுக்கும் ஒரு நண்பன் என்றால் மிகையில்லை. இப்பொழுதெலாம் சிறிய அளவிலான அறுவை சிகிச்சைக்கு கூட ஏராளமான பணம் செலவழிக்க வேண்டியுள்ளது. உடல்நலக் காப்பீடு இருந்தால், இந்தச் செலவுகள் அனைத்தும் உங்கள் காப்பீட்டு நிறுவனத்தால்  ஏற்றுக் கொள்ளப்படும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 10, 2024, 04:08 PM IST
  • உடல்நலக் காப்பீட்டில், காப்பீட்டு நிறுவனங்கள் சிகிச்சைக்கான செலவை இரண்டு வழிகளில் ஏற்கின்றன.
  • காப்பீட்டு நிறுவனத்தின் பட்டியலிடப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்.
  • காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து பெற்ற கார்டு மூலம் மருத்துவமனையில் பெரும் சிகிச்சைக்கான கட்டணத்தை செலுத்துவதாகும்.
பணமில்லா சிகிச்சை அளிக்கும் காப்பீடு... நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்! title=

அவசரகால சூழ்நிலைகளில் மருத்துவ சிகிச்சைக்கு சுகாதார காப்பீடு மிகவும் கை கொடுக்கும் ஒரு நண்பன் என்றால் மிகையில்லை. உங்களிடம் உடல்நலக் காப்பீடு இல்லாத நிலையில், நீங்கள் நோய்வாய்ப்பட்டு, அதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருந்தால், அதற்காக நீங்கள் நிறையப் பணத்தைச் செலவழிக்க வேண்டியிருக்கும். இப்பொழுதெலாம் சிறிய அளவிலான அறுவை சிகிச்சைக்கு கூட ஏராளமான பணம் செலவழிக்க வேண்டியுள்ளது. உங்களிடம் உடல்நலக் காப்பீடு இருந்தால், இந்தச் செலவுகள் அனைத்தும் உங்கள் காப்பீட்டு நிறுவனத்தால்  ஏற்றுக் கொள்ளப்படும், மேலும் உங்கள் பாக்கெட்டில் எந்தச் சுமையும் இருக்காது.

உடல் நலக் காப்பீடு என்பது மருத்துவ அவசரநிலையின் போது பணமில்லாமல் சிகிச்சை பெற வசதிகளை வழங்குவதாகும், இதனால் நீங்கள் கடன் வலையில் அல்லது எந்த நிதி நெருக்கடியிலும் சிக்கிக் கொள்ளாமல் தப்பித்துக் கொள்ளலாம். எனவே, பணமில்லா சிகிச்சை அம்சம் இந்த நாட்களில் அனைத்து மருத்துவ பாலிஸிகளிலும் சேர்க்கப்படும் பொதுவான விஷயமாகிவிட்டது. இந்த ரொக்கமில்லா சிகிச்சை வசதி என்பது என்ன, அதை நீங்கள் எவ்வாறு க்ளைம் செய்யலாம் என்பதை இன்று பார்ப்போம்.

உடல்நலக் காப்பீட்டில், காப்பீட்டு நிறுவனங்கள் சிகிச்சைக்கான செலவை இரண்டு வழிகளில் ஏற்கின்றன - பணமில்லா சிகிச்சை மற்றும் முதலில் சிகிச்சைக்கு நாம் பணம் செலுத்தி, பின்னர் அதற்கான பில்கள் அடிப்படையில் காப்பீட்டு நிறுவனம் சிகிச்சை பணத்தை நமக்கும் திருப்ப அளிக்கும் முறை. சில மருத்துவமனைகளில் பணமில்லா வசதியைப் பெறலாம். சில கட்டணங்களைத் தவிர, நீங்கள் எந்த விதமான பணத்தையும் செலவிட வேண்டியதில்லை. அதேசமயம், காப்பீடு நிறுவனம் பணத்தை உங்களுக்கு வழங்கும் முறையில் முதலில் நீங்கள் அனைத்து செலவுகளையும் உங்கள் பாக்கெட்டில் இருந்து ஏற்க வேண்டும், பின்னர் காப்பீட்டு நிறுவனம் உங்களுக்கு திருப்பிச் செலுத்துகிறது.

மேலும் படிக்க | ITR Refund இன்னும் கிடைக்கவில்லையா? காரணங்கள், சரி செய்வதற்கான வழிமுறைகள் இதோ

பணமில்லா சிகிச்சை வசதி என்றால் என்ன?

எளிமையான வார்த்தைகளில் சொல்வதென்றால், ரொக்கமில்லா வசதி என்பது, உடல்நலக் காப்பீட்டு பாலிசிதாரர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது, ​​காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து பெற்ற கார்டு மூலம் மருத்துவமனையில் பெரும் சிகிச்சைக்கான கட்டணத்தை செலுத்துவதாகும். அவர் தனது பாக்கெட்டில் இருந்து எதையும் செலுத்த வேண்டியதில்லை. இந்த வசதி காப்பீட்டு நிறுவனங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அதன் செலவுகளை ஏற்றுக் கொண்டு நேரடியாக பணம் கொடுக்கிறது. இதற்கு நீங்கள் பணம் ஏற்பாடு செய்ய வேண்டியதில்லை.

பணமில்லா சிகிச்சை வசதியை எவ்வாறு பெறுவது?

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் ரொக்கமில்லா க்ளெய்ம் வசதியைப் பெற, காப்பீடு செய்யப்பட்ட நபர் காப்பீட்டு நிறுவனத்தின் பட்டியலிடப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். இவை உங்கள் காப்பீட்டாளருடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்ட மருத்துவமனைகள். இந்த நெட்வொர்க் மருத்துவமனைகளில் பணமில்லா சேவை உங்களுக்கு எளிதாக கிடைக்கும். இதற்கான நடைமுறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. முதலில் காப்பீடு செய்தவர் வழங்கிய விவரங்களை மருத்துவமனை சரிபார்த்து, அவர்களின் காப்பீட்டு நிறுவனத்திற்கு, இதற்கான முன்-அங்கீகாரப் படிவத்தை அனுப்பும்.

2. காப்பீட்டு நிறுவனம் முன்-அங்கீகார கோரிக்கையை ஆய்வு செய்து, பாலிசியின் கவரேஜ் மற்றும் பிற விவரங்களை மருத்துவமனைக்கு தெரிவிக்கும்.

3. முன் அங்கீகார கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டால், சிகிச்சை தொடங்கும்  போதும் மற்றும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகும் நிலையிலும் இறுதி பில் மற்றும் டிஸ்சார்ஜ் ஆவணங்கள் காப்பீட்டு நிறுவனத்திற்கு அனுப்பப்படும். கட்டணங்கள் (பொருந்தினால்) மற்றும் செலவுகளைக் கழித்த பிறகு இறுதித் தொகை செட்டில் செய்யப்படும்.

4. சில சூழ்நிலைகளில், உங்கள் முன்-அங்கீகார கோரிக்கை நிராகரிக்கப்பட்டால், சிகிச்சைக்கான செலவை நீங்கள் ஏற்க வேண்டும். பின்னர், நிபந்தனைக்கு உட்பட்டு காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் படிக்க | Income Tax Saving: வரி விலக்கு பெற... ‘இந்த’ FD முதலீடுகள் உதவும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News