வீட்டுக் கடன் வாங்க போறீங்களா... விரைவில் வருகிறது மத்திய அரசின் கடன் மானிய திட்டம்!

இந்திய அரசின் வீட்டுக் கடன் மானியத் திட்டம்: அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒரு சிறிய வீடு வாங்குபவர்களுக்கு மானியம் வழங்க சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 25, 2023, 08:46 PM IST
  • பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தினத்தன்று அறிவித்த திட்டம்.
  • வட்டி நிவாரணம் பெற தகுதியான நபர்கள்.
  • திட்ட நடைமுறைகள் குறித்த பணிகள் நடைபெற்று வருகின்றன.
வீட்டுக் கடன் வாங்க போறீங்களா... விரைவில் வருகிறது மத்திய அரசின் கடன் மானிய திட்டம்! title=

இந்திய அரசின் வீட்டுக் கடன் மானியத் திட்டம்: வீடு வாங்கத் திட்டமிடுபவர்கள் பண்டிகைக் காலத்தில் சிறப்பான செய்திகளைப் பெறலாம். வீட்டுக்கடன்களுக்கு மானியம் வழங்க அரசு தயாராகி வருகிறது. இதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒரு சிறிய வீடு வாங்குவதற்கு சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் மானியம் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் இன்னும் சில மாதங்களில் நடைமுறைக்கு வரலாம். மோடி அரசு 2024 தேர்தலுக்கு முன் அதைத் தொடங்க விரும்புகிறது. நகரங்களில் வீடு வாங்கும் கனவில் இருப்பவர்களுக்கு கடனுக்கான வட்டியில் நிவாரணம் வழங்கும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். திட்ட நடைமுறைகள் குறித்த பணிகள் நடைபெற்று வருகின்றன

வீட்டுக் கடன் வட்டியில் 3 முதல் 6.5 சதவீதம் மானியம் 

ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி இந்த திட்டத்தை மக்களுக்கு வழங்குவதாக அறிவித்தார். இந்தத் திட்டம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும், 9 லட்சம் வரையிலான கடனுக்கு ஆண்டு வட்டியில் 3 முதல் 6.5 சதவீதம் வரை அரசு மானியம் வழங்கும். 20 ஆண்டுகளுக்கு ரூ.50 லட்சம் வரை வீட்டுக் கடன் வாங்குபவர்கள் இந்தத் திட்டத்தின் பலனைப் பெற முடியும். இதன் மூலம் மக்கள் பெரிதும் பயனடைவார்கள்.

இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள திட்டம்

கடனில் பெறப்பட்ட மானியம் நேரடியாக கணக்கில் செலுத்தப்படும். இத்திட்டம் இறுதி கட்டத்தில் உள்ளது. விரைவில் இந்த வரைவு இறுதி செய்யப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதலுக்கு கொண்டு வரப்படும். உழைக்கும் வருமானம் உள்ளவர்களுக்கும், ரூ.25 லட்சம் வரை கடன் வாங்குபவர்களுக்கும் இந்தத் திட்டம் பயனுள்ளதாக இருக்கும். மக்களுக்கு நிதி ரீதியாக பலனளிக்கும் இதுபோன்ற வீட்டுக்கடன் திட்டத்தை அரசு கொண்டு வர உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் மக்களுக்கு உறுதியளித்திருந்தார்.

நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

முன்னதாக, இது குறித்து மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், நகரங்களில் சொந்த வீடு வாங்கும் கனவில் இருக்கும் மக்களுக்கு வீட்டுக் கடனுக்கான வட்டியில் நிவாரணம் அளிக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. என்றும் செப்டம்பர் மாதம் புதிய திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.

நடுத்தர குடும்பங்களுக்கான அறிவிப்பு

பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், நகரங்களில் வசிக்கும், சொந்த வீடு இல்லாத நடுத்தரக் குடும்பங்களுக்கு, இனி எளிதாக சொந்த வீடு வாங்கும் திட்டத்தை அறிவித்தார். இந்தத் திட்டத்தின் மூலம் நீங்கள் கடனுக்கான வட்டியிலிருந்து நிவாரணம் கிடைக்கும். இதனுடன், நீங்கள் கடன் தொகையை மட்டுமே செலுத்த வேண்டும் மற்றும் வட்டித் தொகையை செலுத்த வேண்டியதில்லை.

மேலும் படிக்க | உங்கள் வங்கி கணக்கில் இருந்த 295 ரூபாய் காணவில்லையா... இது உங்களுக்கான எச்சரிக்கை!

பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை

செங்கோட்டையில் உரையாற்றிய மோடி, நடுத்தரக் குடும்பங்கள் நகரங்களில் தங்களுடைய சொந்த வீடுகளைக் கனவு காண்கின்றன என்று கூறியிருந்தார். வீடுகளுக்கு வெளியே வசிக்கும் நடுத்தர குடும்பங்கள் பெரிதும் பயன்பெறும் வகையில் இதற்கான திட்டத்தை விரைவில் கொண்டு வருவோம்.

வட்டி நிவாரணம் பெற தகுதியான நபர்கள்

வாடகை வீடுகள், அங்கீகாரமற்ற குடியிருப்புகள், குடிசைப் பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு சொந்த வீடு கட்ட வங்கிக் கடனுக்கான வட்டியில் நிவாரணம் வழங்க முடிவு செய்துள்ளோம் என்று கூறியிருந்தார்.

மேலும் படிக்க | PPF: பிபிஎஃப்பில் இருந்து சுலபமாக கடன் பெற டிப்ஸ்! வட்டியும் குறைவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News