புதிய நிதியாண்டில் DA உயர்வைத் தவிர HRA எவ்வளவு அதிகரிக்கும்? எல்லாம் நல்ல செய்தி தான்!

7th pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய நிதியாண்டில் DA உயர்வைத் தவிர, HRAவும் அதிகரிக்கலாம்? அது எப்படி? தெரிந்துக் கொள்ளுங்கள்  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 19, 2024, 12:28 PM IST
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு!
  • புதிய நிதியாண்டில் DA உயர்வு
  • HRA அதிகரிக்குமா? மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பு
புதிய நிதியாண்டில் DA உயர்வைத் தவிர HRA எவ்வளவு அதிகரிக்கும்? எல்லாம் நல்ல செய்தி தான்! title=

மார்ச் மாதத்தில் அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு DA உயர்வு அறிவிக்கப்படும்? மத்திய அரசு ஊழியர்களின் மனதில் எழும் இந்தக் கேள்வி தொடர்பான இரண்டு லேட்டஸ்ட் தகவல்கள் உங்களுக்காக. சமீபத்திய சம்பள உயர்வுக்குப் பிறகு, மீண்டும் மார்ச் மாதத்தில் அகவிலைப்படி மீண்டும் உயரும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். ஆனால் இந்த முறை எவ்வளவு டிஏ உயர்வு கிடைக்கும்? என்ற கேள்விக்கு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த முறை 4% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும் என யூகிக்கப்படுகிறது. இந்த விஷயத்தில் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இதுவரை இல்லை.

சமீபத்திய DA உயர்வு ஜனவரி 1, 2024 முதல் அமலுக்கு வரும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் மாதத்தில் வெளியிடப்படும். சமீபத்திய அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 50 சதவீதமாக உயர்த்தும்.  4% டிஏ உயர்வு மூலம், அகவிலைப்படியின் மொத்த உயர்வு ஜூலை 1, 2023 முதல் 46 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு அகவிலைப்படி, 4 முதல் 5 சதவீதம் வரை மத்திய அரசு உயர்த்த வாய்ப்புள்ளது என்று சொல்லப்பட்டாலும், வீட்டு வாடகை கொடுப்பனவையும் மத்திய அரசு உயர்த்தினால் டிஏ அதிகரிப்பு 4 சதவீதமாக இருக்கும் வாய்ப்புகளே அதிகமாக உள்ளது. இந்த ஆண்டு, மத்திய அரசு அகவிலைப்படி மற்றும் வீட்டு வாடகை கொடுப்பனவை உயர்த்தினால் அவர்களின் சம்பளத்தில் அதிக உயர்வு கிடைக்கும்.

மேலும் படிக்க | Budget: 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் இருப்பவர்களுக்கு பட்ஜெட்டில் ஸ்வீட் நியூஸ்?

அகவிலைப்படி 

அகவிலைப்படி என்பது பணவீக்கத்தின் தாக்கத்தை, ஊழியர்கள் ஈடுகட்டும்விதமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு பொதுவாக வழங்கப்படும் சம்பளத்தின் ஒரு அங்கமாகும், இது ஊழியர்களின் ஒட்டுமொத்த ஊதியத்தை அதிகரிக்கிறது. DA வழக்கமாக ஆண்டுக்கு இரண்டு முறை திருத்தப்படும், மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இதுதொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 முதல் திருத்தங்கள் அமல்படுத்தப்படும்.

வாடகை வீட்டில் வசிக்கும் அரசுப் பணியாளர்களுக்கு HRA எனப்படும் வீட்டு வாடகை அலவன்ஸ் கொடுக்கபப்டுகிறது. இந்த தொகையின் அளவு நகரத்திற்கு நகரம் வேறுபடுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

எடுத்துக்காட்டாக, அடுக்கு-2 அல்லது அடுக்கு-III நகரங்களில் வசிக்கும் பணியாளரை விட அடுக்கு-1 நகரங்களில் வசிக்கும் பணியாளர்களுக்கு கொடுக்கப்படும் HRA அதிகமாக கிடைக்கும். 

மேலும் படிக்க | மாநில அரசு ஊழியர்களுக்கு ஷாக்: பழைய ஓய்வூதியம் பாரத்தை அதிகரிக்கும்... எச்சரித்த RBI

2006 இல் DA கணக்கீடும் முறை திருத்தப்பட்டது, இது ஜூன் 2022 வரையிலான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI) 12-மாத சராசரியின் சதவீத உயர்வின் அடிப்படையில் இப்போது தீர்மானிக்கப்படுகிறது. 2023 ஆம் ஆண்டில் 8% அகவிலைப்படி உயர்ந்த நிலையில், பணவீக்கத்திற்கு ஏற்ப டிஏ உயர்வு நிர்ணயிக்கும் அரசின் வழக்கமான செயல்பாடு அடுத்த நிதியாண்டு முதல் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.

எச்.ஆர்.ஏவைப் பொறுத்த வரையில், மத்திய அரசு ஊழியர்கள் அவர்கள் வசிக்கும் நகரத்திற்கு ஏற்ப வீட்டு வாடகை அலவன்ஸ் பெறுகிறார்கள். அவர்கள் தங்கும் நகர வகையின் அடிப்படையில், HRA 3 வகைகளாக X, Y மற்றும் Z என்று பிரிக்கப்பட்டுள்ளது.

'X' பிரிவில் உள்ள நகரம் 50 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட பகுதிகளை உள்ளடக்கியது. இந்த நகரப் பிரிவில் உள்ள பணியாளர்கள் 7வது ஊதியக் குழுவின் கீழ் மத்திய ஊதியக் குழுவின் (CPC) பரிந்துரையின்படி 24% HRA பெறுகின்றனர்.

5 லட்சம் முதல் 50 லட்சம் மக்கள்தொகை கொண்ட நகரம் 'Y' பிரிவின் கீழ் வருகிறது, இந்த நகரப் பிரிவில் வசிக்கும் பணியாளர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 16 சதவீதம் HRA கிடைக்கும், அதேபோல, 'Z' நகரப் பிரிவில் வரும் 5 லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் வசிக்கும் மத்திய அரசுப் பணியாளர்களுக்கு 8 சதவீத HRA உயர்வு கிடைக்கும்.

மேலும் படிக்க | Budget 2024: வரிசெலுத்துவோருக்கு நல்ல செய்தி.... காத்திருக்கும் வரிச் சலுகைகள், விலக்குகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News