தபால் நிலைய உரிமைக்கு ரூ. 5 ஆயிரம் போதும்! கமிஷனிலேயே கல்லா கட்டலாம்!

Post Office Franchise: தபால் நிலைய திட்டங்களில் மட்டுமின்றி, தபால் நிலைய உரிமையை வாங்கியும் பல பேர் வருமானம் ஈட்டுகின்றனர். அதன் உரிமையை எடுப்பதில் அதிக பணம் முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை.

Written by - Sudharsan G | Last Updated : May 31, 2023, 03:11 PM IST
  • இதில், நீங்கள் ரூ. 5 ஆயிரம் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும்.
  • உரிமையைப் பெற்ற பிறகு, நீங்கள் கமிஷன் மூலம் சம்பாதிக்கலாம்.
  • உரிமையை பெற அதிகாரப்பூர்வ இணையதளத்தை மட்டும் அணுகவும்.
தபால் நிலைய உரிமைக்கு ரூ. 5 ஆயிரம் போதும்! கமிஷனிலேயே கல்லா கட்டலாம்! title=

Post Office Franchise: தபால் நிலையத்தின் மூலம் மக்கள் தற்போது பல வசதிகளைப் பெறுகின்றனர். கிராமப்புறங்களில் தபால் அலுவலகங்கள் என்பது மக்களுக்கு ஒரு வங்கி சேவைகளை வழங்கும் பெரிய ஊடகமாக செயல்பட்டு வருகிறது. 

பலர் தங்கள் பணத்தை பல்வேறு தபால் அலுவலக திட்டங்களில் முதலீடு செய்து அதன் மூலமும் வருமானத்தை பெருக்கின்றனர். அதே தபால் நிலைய உரிமை (Post Office Franchise) எடுத்தும் பல பேர் சம்பாதிக்கிறார்கள்.

தபால் நிலைய உரிமையை எடுப்பதில் அதிக பணம் முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை. மிகக் குறைந்த பணத்தில் இதைத் நீங்கள் தொடங்கலாம். அதாவது, நீங்கள் ரூ. 5 ஆயிரம் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். அதில் இருந்து நீங்கள் அதிக பணத்தை வருமானமாக ஈட்டலாம். எல்லா இடங்களிலும் தபால் நிலையத்தை அணுக முடியாது. இதைக் கருத்தில் கொண்டு, தனிநபர்களுக்கோ அல்லது ஒரு குழுவுக்கோ உரிமை வழங்கப்படுகிறது. நீங்கள் எப்படி தபால் நிலைய உரிமையை எடுக்கலாம் என்பதை இங்கு தெரிந்துகொள்ளலாம். 

மேலும் படிக்க | தபால் துறை சிறு சேமிப்பில் முதலீடு செய்ய விதி மாற்றம்... என்ன தெரியுமா?

எப்படி உரிமைமை எடுப்பது?

தபால் நிலைய உரிமையைப் பெறுபவரின் வயது 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். எந்தவொரு இந்திய குடிமகனும் தபால் நிலைய உரிமையைப் பெறலாம். உரிமையைப் பெறுபவர் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் இருந்து 8ஆம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும். உரிமைக்கு விண்ணப்பிக்க, முதலில் நீங்கள் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 

தேர்வு செய்யும் போது, இந்திய அஞ்சல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். தபால் நிலைய உரிமையில் இருந்து வருமானம் ஈட்டுவது என்பது அதன் மூலம் கிடைக்கும் கமிஷனில் தான் உள்ளது. இதற்காக, தபால் நிலையத்தில் இருந்து கிடைக்கும் பொருட்கள் மற்றும் சேவைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அனைத்து சேவைகளுக்கும் கமிஷன் வழங்கப்படுகிறது. கமிஷன் ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும்.

கமிஷன் மூலம் சம்பாதிக்கலாம்

உரிமையைப் பெற்ற பிறகு, நீங்கள் கமிஷன் மூலம் சம்பாதிக்கலாம். நீங்கள் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்பது உங்கள் வேலையைப் பொறுத்தது. பதிவு செய்யப்பட்ட போஸ்டை முன்பதிவு செய்தால் 3 ரூபாய், ஸ்பீட் போஸ்ட்டை முன்பதிவு செய்தால் 5 ரூபாய், 100 முதல் 200 ரூபாய் வரையிலான மணி ஆர்டர்களுக்கு 3.50 ரூபாய், 200 ரூபாய்க்கு மேல் மணி ஆர்டர்களுக்கு 5 ரூபாய், பதிவு மற்றும் ஸ்பீட் போஸ்ட்டிற்கு மாதம் 1000 ரூபாய், 20% அதிக முன்பதிவுகளில் கூடுதல் கமிஷன் கிடைக்கும்.

அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்

தபால் நிலைய உரிமைக்காக, தபால் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படித்து அதிகாரப்பூர்வ தளத்தில் மட்டுமே விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க, இந்த அதிகாரப்பூர்வ இணைப்பை (https://www.indiapost.gov.in/VAS/DOP_PDFFiles/Franchise.pdf) கிளிக் செய்யலாம். இங்கிருந்து நீங்கள் படிவத்தைப் பதிவிறக்குவதன் மூலம் உரிமைக்கு விண்ணப்பிக்கலாம். யார் தேர்ந்தெடுக்கப்படுவார்களோ, அவர்கள் அஞ்சல் துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். இதன் பின்னரே வாடிக்கையாளர்களுக்கு வசதிகளை வழங்க முடியும்.

மேலும் படிக்க | ரூ. 5 லட்சம் டெபாசிட் செய்தால் ரூ. 2.5 லட்சத்தை வட்டியாகவே பெறலாம்... அசத்தல் திட்டம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News