தேசிய ஓய்வூதிய திட்டம் (என்.பி.எஸ்) கணக்கு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல பொதுத்துறை நிறுவனங்களும் தங்கள் ஓய்வூதிய நிதியை இதில் முதலீடு செய்துள்ளன என PFRDA அதாவது ஓய்வூதிய நிதி ஒழுங்கு முறை மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. பாண்டியோபாத்யா கூறுகிறார்.
இதில் வட்டி அதிக அளவில் கிடைப்பதால், பல மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் ஓய்வூதிய நிதியை இதில் முதலீடு செய்கின்றன. அரசாங்க நிதிகளுக்கான கூட்டு வட்டி விகிதம் ஆண்டுக்கு 9.95 சதவிகிதம்.
10 லட்சம் பங்களிப்பாளர்களுடன் ரூ .50,000 கோடி நிதியைக் கொண்ட, சுமார் 7,900 கார்ப்பரேட்டுகள் தேசிய பென்ஷன் திட்டத்தின் முறைமையை ஏற்றுக்கொண்டன. இந்த திட்டத்தில் சேர்ந்தால், 60 வயதிற்குப் பிறகு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் நீங்கள் முதலீடு செய்யும் தொகையைப் பொறுத்து ஓய்வூதியம் பெறலாம்.
2020 மார்ச் 31 நிலவரப்படி, புதிய ஓய்வூதிய திட்டம் மற்றும் அடல் பென்ஷன் யோஜனா ஆகியவற்றின் மொத்த சொத்து 4.17 லட்சம் கோடியை எட்டியுள்ளது. மார்ச் வரை ஓய்வூதிய-திட்ட பயனாளிகளின் எண்ணிக்கை சுமார் 3.45 கோடியாக இருந்தது.
Wealth Management at Transcend Consultants 2020 மார்ச் 31 நிலவரப்படி, புதிய ஓய்வூதிய திட்டம் மற்றும் அடல் பென்ஷன் யோஜனா ஆகியவற்றின் மொத்த சொத்து 4.17 லட்சம் கோடியை எட்டியுள்ளது. மார்ச் வரை ஓய்வூதிய-திட்ட பயனாளிகளின் எண்ணிக்கை சுமார் 3.45 கோடியாக இருந்தது.
மேலும் படிக்க | சிறிய மூலதனத்தில், அதிக வருமானம் தரும் “ஸ்மார்ட் தொழில்” பற்றி அறியலாம்..!!!
வெல்த் மேனேஜ்மெண்ட் டிரான்ஸெண்ட் கன்சல்டன்ட் மேலாளர் கார்த்திக் ஜாவேரி கூறுகையில், தேசிய பெண்ஷன் திட்டத்தில் முதலீடு செய்ய இரண்டு வழிகள் உள்ளன என்றார்.
இதில் முதல் வகை ஆக்டிவ் மோட் . இதன் கீழ் முதலீட்டாளர் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் வருமானத்தை பொறுத்து ஈக்விட்டி பங்கு மற்றும் கடன் அளவை மாற்ற முடியும்.
அதே நேரத்தில், நீங்கள் ஆக்டிவ் மோட் என்ற வகையை தேர்வு செய்தால், 8 நிதி மேலாளர்கள், முதலீட்டாளரின் பணத்தைக் கையாளுகின்றனர். சந்தைக்கு ஏற்ப ஈக்விட்டி பங்கு மற்றும் கடனை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.
வருமான வரியின் 80CCD பிரிவின் முதலீடு செய்யப்பட்ட ட்தொகைக்கு வருமான வரி விலக்கு உண்டு. புதிய நபர்கள் கணக்கைத் திறக்க KYC (உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்) தொடர்பாக எந்த ஆவணங்களையும் வழங்க வேண்டியதில்லை. ஆஃப்லைனில் திறந்தால் மட்டுமே ஆதார் எண் கொடுக்க வேண்டும். அதன் புகைப்பட நகல் எதுவும் தேவையில்லை.
PFRDA அதாவது ஓய்வூதிய நிதி ஒழுங்கு முறை மேம்பாட்டு ஆணையம் முன்னதாகவே, தேசிய பென்ஷன் திட்டத்தில் சேர விரும்புவர்களுக்காக, ஏற்கனவே ஈ-என்.பி.எஸ் / பாயிண்ட் ஆஃப் பிரசென்ஸ் மையங்கள் மூலம் ஆஃப்லைன் ஆதார் மூலம் என்.பி.எஸ் கணக்கைத் திறக்க அனுமதித்துள்ளது.
மேலும் படிக்க | Aadhaar Card பெற தேவையான ஆவணங்கள் இல்லையா.. கவலை வேண்டாம்..!!!