யூபிஐ மூலம் உங்கள் பணம் பறிபோகாமல் இருக்க உடனே இத பண்ணிடுங்க!

யூபிஐ கட்டண முறை எளிமையானதாக தெரிந்தாலும் இதில் நிறைய மோசடிகள் நடக்கிறது, இந்த மோசடிகளில் சிக்கி பணத்தை இழக்காமல் இருக்க நாம் சில வழிகளை பின்பற்ற வேண்டும்.  

Written by - RK Spark | Last Updated : Mar 28, 2023, 10:20 AM IST
  • யூபிஐ பின் நம்பரை மாதம் 1 முறை அல்லது 3 மாதங்களுக்கு 1 மாற்றிக்கொள்ள வேண்டும்.
  • தினசரி பரிவர்த்தனைக்கான வரம்புகளை நிர்ணயிக்க வேண்டும்.
  • பின் நம்பரை யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது.

Trending Photos

யூபிஐ மூலம் உங்கள் பணம் பறிபோகாமல் இருக்க உடனே இத பண்ணிடுங்க! title=

இணைய சேவையினை பயன்படுத்தி எந்த நேரத்திலும் பணமில்லா பரிவர்த்தனைகளை செய்வது நமக்கு எளிதான வேலையாக இருக்கலாம், ஆனால் மோசடிக்காரர்களுக்கும் இந்த இணைய வசதி உதவிகரமாக இருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.  தொழில்நுட்பம் நமது ஒருபுறம் உதவிகரமானதாக இருந்தாலும், மறுபுறம் நமக்கு சில பாதகமான விளைவுகளை தரும் என்பதால் இதனை கவனமுடன் கையாள வேண்டும்.  யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) மோசடிகள், யுபிஐ பேமெண்ட்களின் வளர்ச்சியின் விளைவாக ஒரு பொதுவான நிகழ்வாகி உள்ளது.   நீங்கள் ஆன்லைனில் யூபிஐ கட்டணம் செலுத்தும் போது எச்சரிக்கையுடன் செயல்பட்டால், மோசடிக்காரர்களிடம் நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழக்க வேண்டிய நிலை ஏற்படாது.

மேலும் படிக்க | CHATGPT: ஸ்மார்ட்போனில் சாட்ஜிபிடி பயன்படுத்துவது எப்படி?

1) உங்கள் பின் நம்பரை வங்கியிலோ, அரசாங்க நிறுவனத்திலோ அல்லது வேறு ஒரு பிரபலமான நிறுவனத்தைச் சேர்ந்த கால் சென்டர் ஏஜென்டுகள் என யாரிடமும் நீங்கள் பகிர வேண்டாம்.  இவர்கள் யாருமே உங்கள் பின் நம்பரை கேட்கமாட்டார்கள், எனவே நீங்கள் எப்போதும் உங்கள் பின்னை பிறருடன் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.

2) உங்கள் கணக்கைப் பாதுகாக்க, ஒவ்வொரு மாதமும் உங்கள் யூபிஐ பின்னை மாற்றிக்கொண்டே இருப்பது நல்லது.  அப்படி மாதந்தோறும் செய்ய முடியவில்லை என்றால் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பின்னை மாற்றிக்கொள்வது நல்லது.

3) யூபிஐ பேமெண்ட் செய்யும்போது நீங்கள் தினசரி பரிவர்த்தனைக்கான வரம்புகளை நிர்ணயித்து கொள்ளலாம்.

4) பல மோசடி அல்லது தீங்கு விளைவிக்கும் போலியான செயலிகள் உள்ளது, அந்த போலியான சாஃப்ட்வெர் வங்கி பயன்பாட்டைப் போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கும் மற்றும் பதிவிறக்கம் செய்ய எளிதாக இருக்கும் என்பதால் நீங்கள் இதனை கண்டு ஏமாந்துவிடாதீர்கள்.  நீங்கள் இதுபோன்ற செயலிகளை டவுன்லோடு செய்தால் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மோசடிக்காரர்களுக்கு சென்றுவிடும், இதனை வைத்து அவர்கள் உங்கள் பணத்தை திருடிவிடுவார்கள்.  உதாரணமாக மோடி பீம், பீம் பேமென்ட்-யுபிஐ கைடு, பீம் மோடி ஆப் மற்றும் பிஹெச்ஐஎம் பேங்கிங் கைடு போன்ற போலி செயலிகள் உள்ளது.

5) இன்சென்டிவ்ஸ், கேஷ்பேக் அல்லது பணத்தைப் பெறுவதற்காக சோதனைப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுமாறு கோரும் எந்தவொரு இணையதளத்திலும் பரிவர்த்தனைகளைச் செய்யக்கூடாது.  நீங்கள் அத்தகைய இணையதளங்களில் பரிவர்த்தனை மேற்கொண்டால், மோசடிக்காரர்கள் உங்கள் பின்னை திருடி வங்கி கணக்கிலுள்ள பணத்தை திருடி விடுவார்கள்.  எனவே எப்போது பரிவர்த்தனையை தொடங்குவதற்கு முன்னரும் பெயரைச் சரிபார்த்து, யூபிஐ சரியான நபருடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.

மேலும் படிக்க | Jio IPL Plans: ஐபிஎல் போட்டிகளை தடையின்றி பாருங்க... டேட்டாவை வாரிவழங்கும் ஜியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News