பொங்கல் பரிசுக்கு நிதி எங்கே? தமிழ்நாடு அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்திய மழையும் வெள்ளமும்

Pongal gift package: திடீர் வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் உதவித்தொகை தேவைப்படும் நிலையில் பொங்கல் பரிசுக்கு தமிழ்நாடு அரசு என்ன செய்யும்? 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 21, 2023, 04:12 PM IST
  • மகளிர் உரிமைத்தொகை 1000 ரூபாய்
  • வெள்ள நிவாரணத்துக்கு நிதி ஒதுக்கீடு
  • பொங்கல் பரிசுக்கு நிதி எங்கே?
பொங்கல் பரிசுக்கு நிதி எங்கே? தமிழ்நாடு அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்திய மழையும் வெள்ளமும் title=

சென்னை: டிசம்பர் மாதம் முடியும் நிலையில், இன்னும் பொங்கல் வருவதற்கு மூன்று வாரங்களே உள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாடும் தமிழக மக்களுக்கு இந்த ஆண்டு பொங்கல் விழா கொஞ்சமாவது நிம்மதியைத் தருமா என்று தெரியவில்லை. மிக்ஜாம் புயல், தென் தமிழகத்தில் கனமழை என 2023 முடியும் நிலையில், தமிழ்நாடே பரிதவித்துக் கொண்டிருக்கும் நிலையில், பொங்கல் வருகிறது. பொங்கல் பண்டிகை என்றாலே, அரசு வழங்கும் பரிசுத் தொகுப்பு தொடர்பான செய்திகளை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

சாதாரணமான சமயத்திலேயே மக்களின் எதிர்பார்ப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பின் மீது அதிகமாக இருக்கும் நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கும் இந்த சமயத்தில் அரசின் பரிசு, சாதாரண மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

ஆனால், மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் சுற்றுவட்டார நான்கு மாவட்டங்களில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டதால், ஏறக்குறைய 30 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் நிவாரணத்தை அரசு வழங்கி வருகிறது. இதற்கு1,486 கோடியே 93 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மேலும் படிக்க | Minister Ponmudi: அமைச்சர் பொன்முடி மேல்முறையீடு செய்ய முடியுமா?

இந்த ஆண்டு கனமழை தமிழ்நாட்டை புரட்டி எடுத்து வரும் நிலையில், திருநெல்வேலி, தூத்துக்குடி உட்பட 4 தென் மாவட்டங்களில் பெய்த அடைமழை ஏற்படுத்திச் சென்றுள்ள சேதங்கள் மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்த சேதங்களைச் சீா்செய்யவே நிதி தேவைப்படும் நிலையில், மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய சூழ்நிலையில் தமிழ்நாடு அரசு உள்ளது.  

இந்த சமயத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு செலவும் அரசுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், இந்த பரிசைக் கொடுக்காமல் இருக்கவும் முடியாது. மாநிலத்தில் இருக்கும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். அதில், கரும்பு, சர்க்கரை, பச்சரிசி அடங்கிய தொகுப்பு இருக்கும். அதனுடன் ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணமும் பொங்கல் பரிசு தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது தொடா்பான ஆலோசனைகள் நடைபெற்று வந்த நிலையில், தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய முதல்வா் மு.க.ஸ்டாலின் செல்கிறார். அவர் அங்கிருந்து சென்னை திரும்பிய பிறகு பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பாரக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு அரிசி குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்பத்தினருக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கம், தலா ஒரு கிலோ பச்சரிசி, சா்க்கரை, முழுக் கரும்பு அடங்கிய பரிசுத் தொகுப்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், வரும் பொங்கல் பண்டிகைக்கும் பரிசுத் தொகுப்பை வழங்குவது குறித்த ஆலோசனையில் தமிழக அரசு ஈடுபட்டு

2024ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு (TN Government) எடுக்கும் முடிவு பொதுத்தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | OPS: பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படுமா? நாட்டின் நிதி நிலை என்ன?

தமிழக அரசு தற்போது பெண்களுக்கு மாத மாதம் வழங்கி வரும் மகளிர் உரிமைத் தொகை அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், தமிழக அரசின் இந்த பரிசீலனை முக்கியத்துவம் பெறுகிறது. 

பொங்கல் பரிசுத்தொகை இரண்டாயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படலாம் என்றும் பலரும் கூறிவந்த நிலையில், தற்போதைய நிதி நிலையை கருத்தில் கொண்டு, பரிசுத்தொகை உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருக்கிறது.

எனவே, பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த அதிகாரபூா்வ அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளைப்பாா்வையிட தூத்துக்குடி சென்றுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பிய பிறகு, பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து அதிகாரபூா்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேலும் தளர்வுகள்? சூப்பர் ஐடியா செய்யும் தமிழ்நாடு அரசு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News