SBI, HDFC, ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய செய்தி! நிதியமைச்சர் தகவல்!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராம தனது புதிய அறிவிப்பின் மூலம் வங்கி அமைப்புகள் வாடிக்கையாளர்களுக்கு பல நெகிழ்வான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனர்.  

Written by - RK Spark | Last Updated : Jun 30, 2023, 03:49 PM IST
  • வங்கி சேவையை வாடிக்கையாளர்களுக்கு உகந்ததாக மாற்ற வேண்டும்.
  • கடன் வழங்குவதற்கான தரநிலைகள் சரியாக இருக்க வேண்டும்.
  • அனைத்து பெரிய வங்கிகளிலும் அமல்படுத்துமாறு சீதாராமன் வலியுறுத்தல்.
SBI, HDFC, ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய செய்தி! நிதியமைச்சர் தகவல்! title=

வங்கியில் கடன் பெற பல முறை பல ஆவணங்களை சரியாக கொடுக்க வேண்டியுள்ளது. இது மிக பெரிய செயல்முறையாக இருப்பதால் பலரும் வங்கிகளுக்கு கடன் கேட்டு செல்லவே தயங்குகின்றனர். மேலும் வங்கி கடனை விடுத்து தனியார் அமைப்புகளிடம் கடன் பெறுகின்றனர். இதனால் மக்கள் பாதிக்கப்படுவது மட்டும் இன்றி அரசாங்கமும் அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. கடுமையான மற்றும் நீண்ட செயல் முறை காரணமாக வங்கியின் வழியாக அரசு மக்களுக்கு வழங்கும் பல்வேறு வகையான மாணியம் உள்ளிட்ட பல நன்மைகள் மக்களை சரியாக சென்றடைவது இல்லை. இதன் காரணமாக நாட்டின் வளர்ச்சி பெரும் அளவில் பாதிக்கப்படுகிறது.  இன்னிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் வங்கிகள் தங்கள் செயமுறைகளை வாடிக்கையாளர்களுக்கு ஏற்றது போல் மாற்ற வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். 

மேலும் படிக்க | கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துபவரா? அக்டோபர் வரை கவலையில்லை

இதனை தொடர்ந்து வங்கி அமைப்பு வாடிக்கையாளர்களுக்கு நெகிழ்வானதாக மாற்றப்பட்டுள்ளது. வங்கி சேவையை வாடிக்கையாளர்களுக்கு உகந்ததாக மாற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இவ்வாறு கூறியிறுந்தார். வங்கி முறையை எளிமையாக்க வேண்டும் என்றார், வங்கி வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப வங்கி முறையை எளிமையாக்குவது குறித்து நிதியமைச்சர் பேசினார். இத்தகைய மாற்றங்களுக்குப் பிறகு, அதிகமான வாடிக்கையாளர்கள் வங்கிகளுடன் இணைக்க முடியும். அது மட்டும் இன்றி வாடிக்கையாளர்களின் வசதிகளில் வங்கிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர்  கூறியிருந்தார். இது கடன் வாங்கும் செயல்முறையை எளிதாக்கும். கடன் வழங்குவதற்கான தரநிலைகள் சரியாக இருக்க வேண்டும் என்றும் இதனால் சாமனிய மக்களும் பெரிதளவில் பயன் அடைவர் என்று நிதி அமைச்சர் வங்கிகளிடம் கூறினார்.

இதன்போது, ​​அனைத்து பெரிய வங்கிகளையும் அமல்படுத்துமாறு சீதாராமன் கேட்டுக் கொண்டார். நிதியமைச்சரின் இந்த ஆலோசனையைத் தொடர்ந்து ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட அனைத்து வங்கிகளின் வாடிக்கையாளர்களும் பயனடைவார்கள். மேலும், வங்கித் துறையை மேலும் மேலும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றதாக மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது என்றும் நிதி அமைச்சர் கூறினார். வாடிக்கையாளர்களின் வசதிகளை நீங்கள் கவனிக்க வேண்டும், மக்களுக்காக இயங்கும் வங்கிகள் அவர்களுக்கு ஏற்றதாக இல்லை என்றால் அதனால் மக்கள் எப்படி பயன் அடைவர் என்று கேள்வி எழுப்பிய அவர், அனைத்து வங்களும் இது வங்கி செயல் முறை குறித்து வாடிக்கையாளர்களிடம் கருத்து கேட்டு அதன் அடைப்படையில் அவர்களுக்கு சேவை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற அமிர்த கலசம் என்ற சிறப்பு டெபாசிட் திட்டத்தை மீண்டும் நீட்டித்துள்ளது.  முன்னதாக, இந்தத் திட்டத்தை ஏப்ரல் 2023 மீண்டும்  தொடங்கிய பிறகு, இதில் முதலீடு செய்வதற்கான கடைசித் தேதி ஜூன் 30, 2023 வரை நீட்டிக்கப்பட்டது. SBI இன் இந்தத் திட்டத்தை உங்களால் இன்னும் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை என்றால், இப்போது கிடைத்துள்ள வாய்ப்பை பயன்படுத்தி இதில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானம் பெறும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் ஆகஸ்ட் 15 வரை இப்போது முதல்லீடு செய்யலாம். அமிர்த கலசம் பிக்சட் டெபாசிட் திட்டத்தின் முதலீட்டு காலம் 400 நாட்கள்.  

மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலை முதல் ஊதியத்தில் பம்பர் ஏற்றம்... நாளை வரும் குட் நியூஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News