நாட்டின் பொது பட்ஜெட் (பட்ஜெட் 2024) தாக்கல் செய்ய இன்னும் சில நாட்களே உள்ளன. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 1 பிப்ரவரி 2024 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார். 2024-25 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது. இடைக்கால பட்ஜெட், 'ஓட் ஆன் அக்கவுண்ட்' (vote on account) என்றும் அழைக்கப்படுகிறது.பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் ஏதும் இருக்காது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்கனவே தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்திய பட்ஜெட் தொடர்பான சில மரபுகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம். இந்த வரிசையில் இன்று பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதற்கு முன் செய்யப்படும் ஹல்வா விழாவைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
இரண்டாவது பதவி காலத்தில் மோடி அரசின் கடைசி பட்ஜெட்
பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) தலைமையிலான அரசாங்கத்தின் இரண்டாவது ஆட்சி காலத்தின் கடைசி பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது, எனவே மக்கள் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு, நிதியமைச்சர் மற்றும் இப்பணியுடன் தொடர்புடைய பிற அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஹல்வா தயாரித்து, அல்வா விழாவைக் கொண்டாடுகிறார்கள்.
சுதந்திரம் அடைந்ததில் இருந்து தொடரும் பாரம்பரியம்
பட்ஜெட்டிற்கு முன் கடைபிடிக்கப்படும் இந்த ஹல்வா விழா சுதந்திரத்திற்குப் பிறகு தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் முடிந்த பிறகு அல்வா விழா ஏற்பாடு செய்யப்படுகிறது. இதில், நிதியமைச்சருடன், நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், ஊழியர்கள் என அனைவரும் கலந்து கொள்கின்றனர்.
மேலும் படிக்க | மத்திய அரசின் இலவச காப்பீடு... ஆயுஷ்மான் அட்டை பெற விண்ணப்பிக்கும் முறை!
நிதி அமைச்சக அதிகாரிகள், நிதி அமைச்சக வளாகத்தில் தங்கியிருப்பார்கள்
மிகவும் ரகசியமான பட்ஜெட் ஆவணம் குறித்த எந்தத் தகவலும் கசிந்து விடக்கூடாது என்பதற்காக, நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யும் வரை, அதனுடன் தொடர்புடைய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், நிதி அமைச்சக வளாகத்தில் தங்கியிருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்த பிறகுதான் இந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நார்த் பிளாக்கில் இருந்து வெளியே வருவார்கள்.
ஹல்வா சடங்கு ஏன் செய்யப்படுகிறது?
பட்ஜெட் தொடர்பான அனைத்து வேலைகளும் முடிந்ததும், 10 நார்த் பிளாக்கில் அமைந்துள்ள நிதி அமைச்சகத்தின் வளாகத்தில் ஹல்வா தயாரிக்கப்படுகிறது. இதற்குப் பிறகு, இந்த அல்வாவை நிதியமைச்சர் தானே அனைத்து ஊழியர்கள், அச்சுப் பணியில் தொடர்புடைய பணியாளர்கள் மற்றும் நிதி அதிகாரிகளுக்கு விநியோகிக்கிறார். ஹல்வா விழாவின் பின்னணியில் உள்ள நம்பிக்கை என்னவென்றால், எந்தவொரு சுப காரியத்தையும் செய்வதற்கு முன் இனிப்பு ஏதாவது சாப்பிட வேண்டும். எனவே இந்த விழா பட்ஜெட் போன்ற பெரிய நிகழ்வுகளுக்கு முன் ஏற்பாடு செய்யப்படுகிறது.
மேலும் படிக்க | உங்க சேலரி ஸ்லிப்பில் இருக்கு வருமான வரி விலக்கு பெறுவதன் ரகசியம்: இதோ விவரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ