ரயில் டிக்கெட் தள்ளுபடி: ரயிலில் அடிக்கடி பயணம் செய்யும் நபரா நீங்கள்? அப்படியென்றால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. வரும் நாட்களில் ரயிலில் பயணம் செய்யும் திட்டம் இருந்தால், ஒரு முக்கிய தகவலை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ரயிலில் எந்தெந்த நபர்களுக்கு இன்னும் தள்ளுபடியின் பலன் கிடைக்கிறது என்பதை அனைவரும் தெரிந்துகொள்வது அவசியமாகும். உலகின் நான்காவது பெரிய நெட்வொர்க் ஆக இருக்கும் இந்தியன் ரயில்வே ரயில்களில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் இலக்குகளை நோக்கி பயணிக்கிறார்கள். இன்றும் பலருக்கு டிக்கெட் சலுகையின் பலனை ரயில்வே வழங்கி வருகிறது.
இவர்களுக்கு சலுகைகள் கிடைக்கின்றன
மாற்றுத்திறனாளிகள், பார்வையற்றோர் மற்றும் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு ரயில் டிக்கெட்டுகளில் தள்ளுபடி சலுகையை ரயில்வே வழங்குகிறது. இவர்களுக்கு பொது வகுப்பு முதல் ஸ்லீப்பர் மற்றும் மூன்றாம் ஏசி வரையிலான டிக்கெட்டுகளில் தள்ளுபடி கிடைக்கும். இவர்கள் டிக்கெட்டுகளில் 75 சதவீதம் வரை தள்ளுபடியின் பலனைப் பெறுகிறார்கள்.
ராஜ்தானி, சதாப்தி ரயில்களிலும் தள்ளுபடி கிடைக்கும்
இது தவிர, இந்த பயணிகள் ஏசி முதல் வகுப்பு அல்லது இரண்டாம் வகுப்பில் டிக்கெட் முன்பதிவு செய்தால், அந்த நபர்களுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும். அதே நேரத்தில், ராஜ்தானி, சதாப்தி போன்ற ரயில்களுக்கு 25 சதவீதம் வரை தள்ளுபடி சலுகை கிடைக்கும்.
உடன் பயணிப்பவர்களுக்கும் தள்ளுபடி கிடைக்கும்
வாய் பேச முடியாத, காது கேளாத நபர்களுக்கு ரயிலில் 50 சதவீத சலுகை கிடைக்கும் என ரயில்வேயில் இருந்து கிடைத்த தகவல் தெரிவிக்கின்றது. இது தவிர, அத்தகைய பயணிகளுடன் பயணிக்கும் நபர்களுக்கும் (எஸ்கார்ட்) ரயில் டிக்கெட்டுகளில் அதே தள்ளுபடியின் பலன் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல வகையான நோய்கள் உள்ளவர்களுக்கும் தள்ளுபடி உண்டு
இது தவிர, பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் டிக்கெட்டுகளில் தள்ளுபடி சலுகையை ரயில்வே வழங்குகிறது. புற்றுநோய், தலசீமியா, இதய நோயாளிகள், சிறுநீரக நோயாளிகள், ஹீமோபிலியா நோயாளிகள், காசநோயாளிகள், எய்ட்ஸ் நோயாளிகள், ஆஸ்டோமி நோயாளிகள், இரத்த சோகை, அப்லாஸ்டிக் அனீமியா போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சலுகைகல் வழங்கப்படுகின்றன.
இந்தியன் ரயில்வே
இந்தியன் ரயில்வே நம் நாட்டு மக்களின் போக்குவரத்தின் உயிர் நாடியாக இருந்து வருகிறது. மக்கள் தொகை அதிகம் உள்ள நமது நாட்டில், மக்களின் போக்குவரத்தை பொறுத்தவரையில், ரயில்களுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. ரயிலில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக இந்தியன் ரயில்வே பல வித வசதிகளை செய்கிறது. அவ்வப்போது பல புதிய விதிகள் இயற்றப்படுகின்றன. சில விதிகள் மாற்றப்படுகின்றன. கோடிக்கணக்கான பயணிகளுக்கு சிறப்பு நிபந்தனைகளின் கீழ் சிறப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன.
அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவர்கள் ரயில்வே வாரியம் அவ்வப்போது மாற்றியமைக்கும் விதிகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். கடந்த காலங்களில், பயணிகளுக்கு பொருந்தும் சில விதிகளை ரயில்வே மாற்றியது.
இந்த விதிகளில் ஒன்று ரயிலின் ஸ்லீப்பர் மற்றும் ஏசி கோச்சில் இரவு நேர பயணம், குறிப்பாக தூங்குவது தொடர்பானது. அதாவது, தற்போது ரயில்களில் தூங்கும் நேரத்தை ரயில்வே மாற்றியுள்ளது. முன்னதாக, ரயில்வே வாரியம் சார்பில், பயணிகள் அதிகபட்சமாக ஒன்பது மணி நேரம் தூங்க அனுமதிக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த கால அவகாசம் 8 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | இனி சென்னை - பெங்களூரு சீக்கிரமே போகலாம்... செம வேகத்தில் இனி ரயில்கள் பறக்கும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ