பழைய ஓய்வூதிய திட்டம்: நாடு முழுவதும் உள்ள ஊழியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (ஓபிஎஸ்) கொண்டு வர வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். மத்திய அரசு ஊழியர்களும் பல மாநில அரசு ஊழியர்களும் இதற்கான போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பல மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளன. இதில் ஜார்கண்ட் மாநிலமும் அடங்கும்.
ஜார்கண்ட் மாநிலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் 2023:
ஜார்க்கண்ட் அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசத்தை தொடர்ந்து தற்போது ஜார்கண்ட் மாநிலத்திலும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. செவ்வாய்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், பல முக்கிய முடிவுகளுடன் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவும் முதல்வர் ஹேமந்த் சோரன் ஒப்புதல் அளித்துள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்தில், பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் பெறுவதற்கான செயல்முறை தொடர்பான வழிகாட்டுதல்கள் தொடர்பான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த முடிவிற்குப் பிறகு, ஜார்க்கண்ட் அதிகாரிகள் ஆசிரியர் பணியாளர்கள் கூட்டமைப்பு (JHAROTEF) முதல்வருக்கு தங்கள் அன்பு கலந்த நன்றியை தெரிவித்தது. ‘அரசு ஊழியர்கள் முழு மரியாதையுடன் சிறந்த சூழலில் பணியாற்றுவதற்கான வாய்ப்பைப் பெறுவதை உறுதி செய்வதில் அரசாங்கம் முழு அர்ப்பணிப்புடன் உள்ளது. இந்த திசையில், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதை நோக்கி நாங்கள் தொடர்ந்து நகர்ந்து வருகிறோம். இதனால் அவர்கள் தங்கள் பொறுப்புகளை முழு ஆற்றலுடன் நிறைவேற்றி மாநிலத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்த முடியும்.’ என ஜார்கண்ட் முதல்வர் கூறினார்.
மேலும் படிக்க | தொழில் செய்ய கடன் வேணுமா... இந்த 7 கண்டீஷன தெரிஞ்சிக்கோங்க!
இந்த மாநிலங்களிலும் ஓபிஎஸ் அமல்படுத்தப்பட்டுள்ளது
ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநில அரசுகள் OPS-ஐ திரும்பப் பெறுவதற்கான முடிவைப் பற்றி மத்திய அரசிடம் தெரிவித்துள்ளன. மேலும் தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் திரட்டப்பட்ட நிதியைத் திரும்ப அளிக்குமாறும் கோரியுள்ளன.
இது தவிர, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் மருத்துவ உதவித்தொகை குறைக்கப்பட்டு, மாதம் ரூ. 1000 க்கு பதிலாக ரூ. 500 வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மீதி ஆண்டின் 6000 காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்கப்படும், மேலும் 5 லட்சம் வரை சிகிச்சையும் செய்யலாம்.
தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம்
தமிழ்நாட்டில் ஆளும் திமுக கட்சி தனது தேர்தல் பிரச்சாரத்தில், தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பலன்கள் வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால், தற்போது ஆட்சிக்கு வந்து சுமார் மூன்று ஆண்டுகள் ஆகியும் பழைய ஓய்வூதிய திட்டம் இன்னும் அமல்படுத்தப்படவில்லை.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள ஓய்வூதியத் திட்டத்தில் பல குறைகள் இருப்பதாகவும், இது ஊழியர்களுக்கு ஏற்றதாக இல்லை என்றும் கூறப்படுகின்றது.
மத்திய அரசு ஊழியர்கள்
இதற்கிடையில் சில மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தேர்ந்தெடுக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதியத்தை தேர்வு செய்ய யாருக்கு வாய்ப்பு உள்ளது
பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன் சில ஊழியர்களுக்கு மட்டுமே கிடைக்கும். 2003, 2004 -இல் சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது 2003 -இல் இந்திய வனப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இதில் சேர்க்கப்படுவார்கள் என டிஓபிடி தெரிவித்துள்ளது.
இது தவிர, AIS இல் சேருவதற்கு முன் மத்திய அரசின் சேவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது பணியமர்த்தப்பட்ட பணியாளர்கள், CCA விதிகள், 1972 அல்லது ஏதேனும் ஒரு பொது விதியின் கீழ் உள்ளடக்கப்பட்ட அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்க வசதி உள்ளது.
மேலும் படிக்க | அதிக ஓய்வூதியம் வேண்டுமா? விண்ணப்பிப்பதற்கான செயல்முறை மிக எளிது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ