பழைய ஓய்வூதியத் திட்டம் Vs புதிய ஓய்வூதியத் திட்டம்... சில முக்கிய விஷயங்கள்!

OPS Vs NPS: புதிய ஓய்வூதியத் திட்டம் கடந்த 2004ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது, இது தொடர்பாக மத்திய அரசுக்கும், பல மாநிலங்களுக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் இருந்து வருகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 3, 2023, 07:50 PM IST
  • புதிய மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கும், பாஜக அல்லாத ஆளும் மாநிலங்களுக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் இருந்து வருகிறது.
  • புதிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதிய தொட்டம் எந்த வகையில் மாறுபட்டது?
  • பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஓய்வுபெற்ற ஊழியர் கட்டாய ஓய்வூதியம் பெறுவதற்கான உரிமையைப் பெறுகிறார்.
பழைய ஓய்வூதியத் திட்டம் Vs புதிய ஓய்வூதியத் திட்டம்... சில முக்கிய விஷயங்கள்! title=

தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள ராம்லீலா மைதானத்தில், ஞாயிற்றுக்கிழமை, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுக்கக் கோரி அனைத்து மாநிலங்களிலிருந்தும் ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களின் பெரும் கூட்டம் திரண்டது. பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான தேசிய இயக்கத்தின் (NMOPS) பதாகையின் கீழ் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இத்தகைய சூழ்நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த ஊழியர்கள் ஏன் அதைச் செயல்படுத்த வலியுறுத்துகிறார்கள் என்பதும், புதிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து அதாவது New Pension Scheme (NPS) என்பது பழைய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து (Old Pension Scheme - OPS) எவ்வளவு வித்தியாசமானது என்பதை அறிந்து கொள்ளலாம். மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு செயல்படுத்தினால், அரசு கருவூலத்துக்கு எவ்வளவு சுமை அதிகரிக்கும் என்பது போன்ற பல  கேள்விகளுக்கான பதில்களை அறிந்து கொள்ளலாம்.

பழைய ஓய்வூதியத் திட்டம்

புதிய மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கும், பாஜக அல்லாத ஆளும் மாநிலங்களுக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் இருந்து வருகிறது. இந்த சலசலப்புக்கு மத்தியில் பழைஅய் ஓய்வூதிய கோரிக்கை தொடர்பாக மீண்டும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதில் அரசு அக்கறை காட்டவில்லை. முதலில், பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம். பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஓய்வுபெற்ற ஊழியர் கட்டாய ஓய்வூதியம் பெறுவதற்கான உரிமையைப் பெறுகிறார். இது ஓய்வு பெறும் போது பெறப்படும் அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதமாகும். அதாவது, ஒரு ஊழியர் தனது பணியை முடித்து ஓய்வு பெறும் அடிப்படை ஊதியத்தில் பாதி அவருக்கு ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.

அகவிலைப்படி உயர்வு

பழைய ஓய்வூதியத் திட்டத்தில், பணி ஓய்வுக்குப் பிறகும், பணிபுரியும் ஊழியர் போன்ற அகவிலைப்படி மற்றும் பிற கொடுப்பனவுகளின் பலனைப் பெறுபவர். அதாவது அரசாங்கம் ஏதேனும் கொடுப்பனவை (DA) உயர்த்தினால், அதற்கேற்ப ஓய்வூதியம் அதிகரிக்கும்.

மேலும் படிக்க | RBI Repo Rate:வட்டி விகிதங்களை மாற்றுமா ரிசர்வ் வங்கி? கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்?

புதிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதிய தொட்டம்  எந்த வகையில் மாறுபட்டது

புதிய ஓய்வூதியத் திட்டம் 2004 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.  2004 ஆம் ஆண்டுக்குப் பிறகு நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு இந்த திட்டம் பொருந்தும். பழைய மற்றும் புதிய ஓய்வூதியத் திட்டங்களுக்கு இடையே நிறைய வேறுபாடுகள் இருந்தாலும், இரண்டிலும் சில நன்மைகள் மற்றும் தீமைகள் உள்ளன. இவற்றில் மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால், பழைஅய் ஓய்வூதிய திட்டத்தின் கீழ், ஓய்வூதியத் தொகை அரசு கருவூலத்தில் இருந்து வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் ஓய்வூதியத்திற்காக ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து எந்தப் பணத்தையும் பிடித்தம் செய்ய ஏற்பாடு இல்லை. அதே நேரத்தில், புதிய ஓய்வூதிய திட்ட வரம்புக்குள் வரும் ஊழியர்களின் சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஜிபிஎஃப் வசதி இல்லை, அதேசமயம் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியர்களுக்கு இந்த வசதி உள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டம் பங்குச் சந்தையை அடிப்படையாகக் கொண்டது, எனவே நீண்ட காலத்திற்கு சிறந்த வருமானத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது, இருப்பினும், குறைந்த வருமானத்தில் நிதி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

அரசாங்க கருவூலத்தின் மீதான சுமை

பழைய ஓய்வூதியத் திட்டம்  அரசு கருவூலத்தின் சுமையை அதிகரிக்கிறது என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்து, இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கடந்த செப்டம்பரில் வெளியிட்ட அறிக்கையில், இந்த சுமை குறித்த தகவல்கள் புள்ளி விவரங்களுடன் தெரிவிக்கப்பட்டிருந்தது. அறிக்கையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதால், நிதி ஆதாரங்களில் அதிக அழுத்தம் ஏற்படுவதோடு, மாநிலங்களின் சேமிப்பும் பாதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் ஏற்றுக்கொள்வது குறுகிய காலத்தில் மாநிலங்களின் ஓய்வூதியச் செலவைக் கண்டிப்பாகக் குறைக்கும். ஆனால் எதிர்காலத்தில் நிதியில்லாத  நிலை ஏற்பட்டு ஓய்வூதிய ந்தி சுமை பெருமளவு அதிகரிக்கும் என்று அதன் ஆய்வில் தெரியவந்துள்ளது. 2030க்குள் புதிய ஓய்வூதிய திட்டத்தில் மாநிலங்கள் அளித்த பங்களிப்பை விட பழைஅய் ஓய்வூதிய திட்டம் காரணமாக ஓய்வூதியச் சுமை அதிகரிக்கும்.

மேலும் படிக்க | 40 சதவிகித ஏற்றுமதி வரி திரும்ப பெறப்படுமா? கண்ணீர் சிந்தும் வெங்காயம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News