RBI Repo Rate: இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்த வாரத்தில் நடக்கவுள்ள தன் நிதிக் கொள்கைக் குழு மதிப்பாய்வு கூட்டத்தில் சில முக்கிய முடிவுகளுக்கான அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் ரெப்போ விகிதங்களை ரிசர்வ் வங்கி மாற்றாமல் ஏற்கனவே உள்ள விகிதங்களிலேயே தொடரும் என பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். இதன் பொருள் தனிநபர் மற்றும் பெருநிறுவன கடன் வாங்குபவர்களுக்கான வட்டி விகிதங்கள் மாறாமல் முன்னர் இருந்த நிலையிலேயே இருக்கும்.
ரெப்போ விகிதத்தை 6.5% இல் இருந்து 6.75% ஆக ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) உயர்த்தக்கூடும் என்ற ஒரு சிறு எதிர்பார்ப்பும் உள்ளது. ஆனால், அப்படி நடக்க வாய்ப்பில்லை என்றே பரவலாக கருதப்படுகின்றது. ரிசர்வ் வங்கி இந்த நிதிக் கொள்கை குழு கூட்டத்தில் எடுக்கப்போகும் முடிவைப் பாதிக்கும் இரண்டு முக்கிய காரணிகள் உள்ளன. அவற்றை பற்றி இங்கே காணலாம்.
பணவீக்கம் அதிகரிப்பு (Inflation spike):
ஜூலை மாதத்தில் நுகர்வோர் விலை பணவீக்கம் (CPI) அதிகபட்சமாக 7.44% ஐ எட்டியது. இது ரிசர்வ் வங்கியின் சகிப்பு வரம்பான (டாலரன்ஸ் பேண்ட்) 6 % ஐ விட அதிகமாகவும், சந்தை எதிர்பார்த்ததை விட அதிகமாகவும், ஜூன் மாதத்தின் 4.87% இலிருந்து ஒரு பெரிய பாய்ச்சலாகவும் இருந்தது. இது வழங்கல் சார்ந்த சிக்கல்களுடன் அதிகம் தொடர்புடையதாக இருந்தது. இந்த அளவு பெரும்பாலும் காய்கறி விலைகள் காரணமாக எட்டப்பட்டது. காய்கறி விலைகள் ஒழுங்கற்ற பருவமழை மற்றும் பிற காரணங்களால் உயர்ந்தன.
செப்டம்பர் 28 வரை, நீண்ட கால சராசரியை விட 6% குறைவாக மழை பெய்தது. தக்காளி விலை 100 -க்கு மேல் சென்று புதிய உச்சம் தொட்டது. தற்போது அது மீண்டும் குறைந்துள்ளது. தானியங்கள் மற்றும் காய்கறிகள் விநியோகம், ஏற்றுமதி கட்டுப்பாடுகள், கட்டுப்படுத்தப்பட்ட விலையில் வழங்கல் போன்றவற்றில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆகஸ்ட் மாத பணவீக்கம் 6.83% ஆக குறைந்துள்ளது.
ஆகஸ்ட் 10 அன்று நடந்த கொள்கை மறுஆய்வு கூட்டத்தில் (RBI Monetary Policy), ரிசர்வ் வங்கி பணவீக்க கணிப்புகளை மேல்நோக்கி திருத்தியது. 2023-24 நிதியாண்டில், CPI கணிப்பு ஜூன் மாதத்தின் 5.1% இலிருந்து 5.4% ஆக மாற்றப்பட்டது. ஜூலை-செப்டம்பர் காலாண்டில் திருத்தம் செங்குத்தாக இருந்தது. முந்தைய 5.2% இல் இருந்து, காலாண்டிற்கான கணிப்பு ஒரு சதவீதம் அதிகரித்து 6.2% ஆக உயர்த்தப்பட்டது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான பணவீக்கம் முறையே 7.44% மற்றும் 6.83% ஆக உள்ளது. ஜூலை-செப்டம்பர் காலாண்டிற்கான CPI, ரிசர்வ் வங்கியின் (RBI) கணிப்பான 6.2% ஐ மீறும் வாய்ப்பு உள்ளது. கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 94 டாலர் வரை உயர்ந்துள்ளது. இருப்பினும், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் சில காலமாக உயர்த்தப்படவில்லை. இது பணவீக்க சூழலில் ஒரு சேமிப்பாக உள்ளது.
அமெரிக்க கருவூல வருவாயில் அதிகரிப்பு:
அமெரிக்க அரசாங்க பத்திர வருவாய் அதிகரித்துள்ளது. 10 ஆண்டு கருவூல அளவு 4.65% ஆக உள்ளது. டாலர் வலுப்பெற்றுள்ளது. உலகளாவிய அளவீடான டாலர் குறியீட்டு எண் (DXY) 100ல் இருந்து 106க்கு மேல் நகர்ந்துள்ளது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இது நேர்மறையான GDP வளர்ச்சி, மிதமான தொழிலாளர் சந்தை தரவு மற்றும் செப்டம்பர் 20 நடந்த ஃபெடரல் வங்கி கூட்டம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டுள்ளது. அமெரிக்க மத்திய வங்கி கூட்டங்களில் விகித உயர்வின் சாத்தியம் அமெரிக்க மத்திய நிதியத்தின் எதிர்கால நிலைகளில் இருந்து கணக்கிடப்படுகிறது. நவம்பர் 1ம் தேதி நடக்கவிருக்கும் மத்திய வங்கிக் கூட்டத்தில், விகிதங்கள் உயர்த்தப்பட 22% சாத்தியக்கூறு உள்ளதாக சந்தை கணித்துள்ளது. டிசம்பர் 13 அன்று நடக்கும் அடுத்த கூட்டத்திற்கு இது 42% ஆக உள்ளது.
சந்தையின் சில பிரிவுகளில் அமெரிக்காவின் வட்டி விகித உயர்வை ஆர்பிஐ (RBI) பின்பற்ற வேண்டும் என்ற கருத்து உள்ளது. அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வட்டி விகித வேறுபாடு மற்றும் சோவரின் பத்திர வருவாய் வேறுபாடு குறைவாக இருந்தால், வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறலாம் என்பது இதற்கான தர்க்கமாக உள்ளது. டாலர் வலுவாக இருந்தால், ரூபாயை ஆதரிக்க வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டும். இருப்பினும், இந்த தர்க்கம் சரியல்ல. இந்திய சோவரின் பத்திரங்களில் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீடுகள் நிலுவையில் உள்ள பங்குகளில் 1% க்கும் குறைவாக உள்ளது. அகையால் வெளிப்புற பொருத்தத்திற்கு ஏற்ப நமது வட்டி விகிதக் கொள்கையை மாற்றியமைக்க வேண்டிய அவசியமில்லை.
பொது மக்களுக்கு எது நல்லது?
பொது மக்களை, குறிப்பாக கடன்களை பெற்றுள்ள வங்கி வாடிக்கையாளர்களை பொறுத்தவரை, வரவிருக்கும் ரிசர்வ் வங்கியின் கொள்கை மறுஆய்வுக் கூட்டத்தில் வட்டி விகிதங்கள் மாற்றப்படாமல் அப்படியே இருப்பது நல்லது. அப்படி இருந்தால், உங்கள் மாத இஎம்ஐ -இல் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கும். ஆர்பிஐ ரெப்போ விகிதத்தை (Repo Rate) உயர்த்தினால், அதைத் தொடர்ந்து வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்து. இது கடன் வாங்கியவர்கள் மீதான சுமையை அதிகரிக்கும். எனினும், முதலீட்டின் கண்ணோட்டத்தில் பார்த்தால், ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டால், சந்தையில் சில உடனடி எதிர்வினை இருக்கும்.
மேலும் படிக்க | EPFO Update: பணிஓய்வுக்கு முன்னரே பிஎஃப் தொகையை எடுக்க முடியுமா? எவ்வளவு எடுக்கலாம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ