பிரதமர் அறிவித்துள்ள வருமான வரி தொடர்பான புதிய சட்ட விதிகள் கூறுவது என்ன..!!!

வரி செலுத்துவோரின், உரிமைகள் மற்றும் பொறுப்புகளை வரையறுக்கும்  வரிசெலுத்தோருக்கான சட்ட விதிகள் தான் Taxpayers’ Charter ஆகும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 16, 2020, 06:21 PM IST
  • நம்பகத்தன்மையை உருவாக்குவதற்கு, வரி செலுத்துவோருக்கு சில உரிமைகள் இருப்பதை உறுதிசெய்வதும், இந்த உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதும் வரி நிர்வாகத்தின் பொறுப்பு.
  • வரி செலுத்துவோரை அணுகுவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் ஒரு எளிய வருமான வரிச் சட்டம் தேவை
  • வரி வசூலிப்பதில், வரி செலுத்துவோரிடம், ஒரு நட்பான அணுகுமுறையை உருவாக்கும் நோக்கில், இந்த வருமான வரி செலுத்துவோருக்கான இந்த புதிய சட்ட விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது.
பிரதமர் அறிவித்துள்ள வருமான வரி தொடர்பான புதிய சட்ட விதிகள் கூறுவது என்ன..!!! title=

கடந்த சில ஆண்டுகளாக, நேரடி வரி விதிப்பு முறைகளில் மத்திய குறிப்பிடத்தக்க வகையில் சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. வரி செலுத்தும் முறை வெளிப்படைத் தனமை கொண்டதாக ஆக்க, அரசு முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. இதனால் நம்பகத்தன்மை அதிகரிக்கும் என்பதில் மாற்று கருத்து எதுவும் இல்லை.

அதில் ஒரு மிக முக்கிய நடவடிக்கையாக, பிரதமர் நரேந்திர மோடி, ஆகஸ்ட் 13ம் தேதி, நாட்டில் நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவித்து ஊக்கம் அளிக்கும் வகையில், Honoring the Honest என்னும் திட்டத்தை வீடியோ கான்ஃபரென்ஸிங் மூலம் தொடக்கி வைத்தார். வரி சீர்திருத்தங்கள் மூலம் நாட்டில் வரி செலுத்தும் முறையில் பெரிய மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றார். அப்போது அவர், Taxpayers’ Charter  என்ற வரிச்லுத்துவோருக்கான சட்டங்கள்  குறித்தும் அறிவிப்பு வெளியிட்டார். 

வரி செலுத்துவோரின், உரிமைகள் மற்றும் பொறுப்புகளை வரையறுக்கும்  வரிசெலுத்தோருக்கான சட்ட விதிகள் தான் சார்டர் ஆகும்.

நம்பகத்தன்மையை உருவாக்குவதற்கு, வரி செலுத்துவோருக்கு சில உரிமைகள் இருப்பதை உறுதிசெய்வதும், இந்த உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதும் வரி நிர்வாகத்தின் பொறுப்பு. வரி செலுத்துவோரின் உரிமைகளை வரையறுக்கவும் பாதுகாக்கவும் வரி செலுத்துவோருக்கான சட்ட உருவாக்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்தது. 

மேலும் படிக்க | நேர்மையாக வரி செலுத்துவோர் வாழ்க்கை மாறும் போது நாடு முன்னேறும்: பிரதமர் மோடி

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட வரி செலுத்துவோருக்கான சட்ட விதிகள், வரி செலுத்துவோரின் உரிமைகள் மற்றும் கடமைகளை உள்ளடக்கியது ஆகும். அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் வரி செலுத்துவோருக்கான சட்ட விதிகள் உள்ளன.

அரசு அறிவித்துள்ள இந்த விதியின் கீழ், வருமான வரிசெலுத்துவாரை நியாயமாக் நடத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. வரி செலுத்துவோர், கோரும் தகவல்களை, முழுமையாக வழங்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. வரி செலுத்துவோர் சந்திக்கும் பிரச்சனைகளை களைவதே இத நோக்கம்.

மேலும், வரி செலுத்துவோர், மற்ற எல்லா துறைகளையும் போல,      வருமான வரித்துறையின் நுகர்வோராக கருதப்பட்டு, முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என பிரதமர் மோடி அறிவித்த வரிசெலுத்துவோரொன் உரிமைகளை பாதுகாப்பதற்கான சட்ட விதிகளில் கூறப்பட்டுள்ளது.

மேலும், வரி செலுத்துவோர் தொடர்பான தகவல்களின் ரகசியத் தன்மை பாதுகாக்கப்பட வேண்டும். இதில் தவறு ஏதும் ஏற்பட்டால், அதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 

மேலும் படிக்க | வீட்டில் இருந்தே ஆபீஸ் வேலை பார்ப்பவரா நீங்க.. வரி விதிப்பு அதிகமாகலாம் கவனமா இருங்க..!!!

இது தவிர பொறுப்புகள் என வரும் போது, வரிசெலுத்துவோர், உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு வருமான வரித் துறையிடம் இருந்து நோட்டீஸ் ஏதேனும் வந்தால், அதற்கு உடனடியாக தகுந்த நேரத்தில் பதிலளிக்க வேண்டும்.

வரி செலுத்துவோரை அணுகுவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் ஒரு எளிய வருமான வரிச் சட்டம் தேவை, என்பதால் அறிவிப்புகள் மற்றும் சுற்றறிக்கைகள் ஆகியவை தெளிவாகவும்  எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் எளிமையான மொழியில்  இருக்க வேண்டும் என புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த சட்ட விதிகள் கூறுகிறது. நோடீஸ்கள் எளிமையாக புரிந்து கொள்ள முடியாமல் இருந்தால், அது சம்பந்தப்பட்ட நபருக்கு சிக்கலை ஏற்படுத்தும்.

வரிசெலுத்துவோருக்கு நம்பக தன்மையை ஏற்படுத்தும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும், வரி வசூலிக்கும் ஒரே நோக்கத்தை கொண்டு செயல்பட்டால், நேர்மையாக வரிசெலுத்துவோர் மத்தியில் அது நன்பகத் தன்மையை உருவாக்கும் என புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள வருமான வரிக்கான சார்டர் என்னும் சட்ட விதிகளில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | வருமான வரி: விமான டிக்கெட், நகை வாங்குதல், கல்வி தொடர்பான புதிய விதிகள்..!!!

வருமான வரித்துறை வர்த்தக வாய்ப்புகளை குறைக்கும் வகையில் இருக்கக் கூடாது.தேவையற்ற வழக்குகள்  மூலம் வரிசெலுத்துவோருக்கு பிரச்சனை இருக்கக் கூடாது என இந்த புதிய சட்ட விதிகளில் கூறப்பட்டுள்ளது.

வரி வசூலிப்பதில், வரி செலுத்துவோரிடம்,  ஒரு நட்பான அணுகுமுறையை உருவாக்கும் நோக்கில், இந்த வருமான வரி செலுத்துவோருக்கான இந்த புதிய சட்ட விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதை முறையாக செயல்படுத்தும் போது, பெரிய அளவில் மாற்றங்கள் உணடாகும் என்பது உறுதி.

Trending News