Mi 80W Wireless Charging: வெறும் 19 நிமிடங்களில் முழு பேட்டரியை சார்ஜ் செய்யலாம்!

சியோமி தனது சமீபத்திய 80W Mi வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 4,000 எம்ஏஎச் பேட்டரியை 1 நிமிடத்தில் 10 சதவீதத்திற்கும் 8 நிமிடங்களில் 50 சதவீதத்திற்கும் சார்ஜ் செய்யலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 19, 2020, 02:25 PM IST
  • 4,000 எம்ஏஎச் பேட்டரியை 1 நிமிடத்தில் 10 சதவீதத்திற்கும் 8 நிமிடங்களில் 50 சதவீதத்திற்கும் சார்ஜ் செய்யலாம்.
  • 19 நிமிடங்களில் 4,000 mAh பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும் திறன் கொண்டது.
  • வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை பொறுத்த வரை சியோமி நிறுவனத்துக்கு போட்டியாக ஒப்போ உள்ளது.
Mi 80W Wireless Charging: வெறும் 19 நிமிடங்களில் முழு பேட்டரியை சார்ஜ் செய்யலாம்! title=

80W Mi Wireless Charging Technology News: சியோமி தனது சமீபத்திய 80W Mi வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பம் குறித்து இன்று தகவல் வெளியிட்டது. அதாவது இது 4,000 எம்ஏஎச் (4,000 mAh Battery) பேட்டரியை 1 நிமிடத்தில் 10 சதவீதமும், 8 நிமிடங்களில் 50 சதவீத அளவிற்கு பேட்டரியை சார்ஜ் செய்யும்.

"கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சியோமியின் 30W வயர்லெஸ் சார்ஜிங் (Wireless Charging) தொழில்நுட்பம் என்பது மிகப்பெரிய அம்சம்" என்று கூறிய நிறுவனம், இந்த தொழில்நுட்பம் மூலம் 19 நிமிடங்களில் 4,000 mAh பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும் திறன் கொண்டது என்று கூறியுள்ளது.

புதிய 80W வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பம் குறித்து சியோமி நிறுவனம் தனது சமூக வலைப்பதிவில், "சியோமி 4,000 எம்ஏஎச் பேட்டரியை 1 நிமிடத்தில் 10 சதவீதத்திற்கும் 8 நிமிடங்களில் 50 சதவீதத்திற்கும் சார்ஜ் செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளது.

ALSO READ |  5G ஸ்மார்ட்போ ஸ்மார்ட்போனின் விலை வெறும் 3000 மட்டுமே.. தூள் கிளப்பும் Jio!!

"2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 30W Mi வயர்லெஸ் சார்ஜிங் (30W Mi Wireless Charging) தொழில்நுட்பம் இதேபோன்ற பேட்டரியை சுமார் 25 நிமிடங்களில் 50 சதவீதத்திற்கும், 69 நிமிடங்களில் 100 சதவீதத்திற்கும் சார்ஜ் செய்யும் திறன் கொண்டது" என்று தனது வலைப்பதிவில் அறிவித்துள்ளது.

சியோமி சமீபத்தில் 120W கம்பி ஃபிளாஷ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அதன் Mi 10 அல்ட்ராவுடன் (Mi 10 Ultra) 50W வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் அறிமுகப்படுத்தியது.

இந்த தொழில்நுட்பத்தை பொறுத்த வரை சியோமி நிறுவனத்துக்கு போட்டியாக ஒப்போ (Oppo) நிறுவனம் உள்ளது. ஜூலை மாதம் இந்த நிறுவனம் தனது 65W ஏர்வூக் வயர்லெஸ் ஃபிளாஷ் சார்ஜிங் 125W ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்தையும் ஜூலை மாதம் அறிவித்தது.

ALSO READ |  சாம்சங் புதிய அம்சம்!! வைரஸிலிருந்து ஸ்மார்ட்போன்களைப் பாதுகாக்கும்; வயர்லெஸ் சார்ஜிங்

65W AirVOOC வயர்லெஸ் ஃபிளாஷ் சார்ஜிங் 30 நிமிடங்களில் 4000mAh பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும் திறன் கொண்டது என்று ஒப்போ தெரிவித்துள்ளது. 

சியோமியின் 80W வயர்லெஸ் சார்ஜர் சீனாவில் (Made in China) தயாரிக்கப்பட்டது என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது என்று இந்துஸ்தான் டைம்ஸ் அறிக்கை கூறுகிறது. இந்த புதிய சார்ஜிங் தொழில்நுட்பம் சந்தைகளில் எப்பொழுது விற்பனைக்கு வரும் என்று நிறுவனம் இன்னும் குறிப்பிடவில்லை.

ALSO READ |  தனது அட்டகாசமான ECG வாட்ச்-யை அறிமுகம் செய்த Oppo.. சிறப்பம்சம் என்ன?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News