வங்கி வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு! இது முக்கியம்.. இல்லையெனில் கடும் அபராதம்

Minimum Balance in Bank Account: வங்கி வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு! உங்கள் வங்கிக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் முக்கியம் இல்லையெனில் கடும் அபராதம் செலுத்த வேண்டி வரும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 14, 2023, 03:21 PM IST
  • உங்கள் வங்கிக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் முக்கியம்.
  • ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்கு வைத்திருந்தால், அதிக அபரதாம்.
  • ஐசிஐசிஐ வங்கியின் குறைந்தபட்ச இருப்புத் தொகை எவ்வளவு
  • பாரத ஸ்டேட் வங்கியின் குறைந்தபட்ச இருப்புத் தொகை எவ்வளவு
  • ஹெச்டிஎஃப்சி வங்கியின் குறைந்தபட்ச இருப்புத் தொகை எவ்வளவு
வங்கி வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு! இது முக்கியம்.. இல்லையெனில் கடும் அபராதம் title=

வங்கி விதிமுறைகள்: இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அன்றாட வாழ்க்கைக்கு பணப் பரிவர்த்தனை முக்கியமாக இருப்பதால், பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்துள்ளனர். அத்தகைய சூழ்நிலையில், உங்களுக்கு சிரமம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஏனெனில் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து பல வகையான கட்டணங்களை வசூலிக்கின்றன. இதன் காரணமாக ஒன்றுக்கு மேற்ப்பட்ட வங்கிக் கணக்கு வைத்திருந்தால், ஒவ்வொரு வங்கிக் கணக்கிலும் இருந்து பணம் கழிக்கப்படுகிறது. அதாவது மாதாந்திர ஸ்டேட்மென்ட் கட்டணம், வருடாந்திர பராமரிப்பு கட்டணம், ஏடிஎம் கட்டணம் என பல கட்டணங்களுக்கு தங்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் வசூலிக்கின்றன. இந்த வங்கிகளில் உங்களுக்கும் கணக்கு இருந்தால், அதன் கட்டணங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள், இல்லையெனில் உங்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படலாம்.

தற்போது எஸ்பிஐ (SBI) ஹெச்டிஎஃப்சி (HDFC) மற்றும் ஐசிஐசிஐ (ICIC) வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் குறிப்பிட்டத் தொகையை வைத்திருக்க வேண்டும் அதாவது, தங்கள் வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பை வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் இந்த வங்கிகளின் கணக்கு வைத்திருப்பவர்கள் அதிக அபராதம் செலுத்த வேண்டியிருக்கும், ஒரு மாதத்திற்கு இந்த வங்கிகளில் எவ்வளவு பணம் இருக்க வேண்டும் என்பது பற்றி நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்.

மேலும் படிக்க: வருமான வரி செலுத்துவோருக்கு முக்கிய செய்தி: இந்த படிவங்கள் முக்கியம்!!

ஐசிஐசிஐ வங்கியின் குறைந்தபட்ச இருப்புத் தொகை எவ்வளவு?
நாட்டின் தனியார் வங்கியான ஐசிஐசிஐ தனது கணக்குகளில் பிராந்தியத்தின் அடிப்படையில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை நிர்ணயித்துள்ளது. இந்த குறைந்தபட்ச இருப்புத் தொகை பெரிய நகர்ப்புறங்களுக்கு ரூ.10,000 எனவும், அதற்கு அடுத்த கட்டத்தில் உள்ள பகுதிகளுக்கு  ரூ.5,000 எனவும், கிராமப்புறங்களுக்கு ரூ.2,500 எனவும் நிர்ணயித்துள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியின் குறைந்தபட்ச இருப்புத் தொகை எவ்வளவு?
நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகையை விதித்துள்ளது. கிராமப்புறங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வரம்பு 1,000 ரூபாய். நகராட்சி / பேரூராட்சிகளில் உள்ள வங்கிகளில் கணக்கு திறக்கும் வாடிக்கையாளர்கள் ரூ.2,000 இருப்பு வைத்திருக்க வேண்டும். மெட்ரோ நகரங்களில் இந்த வரம்பு ரூ.3,000 ஆக உள்ளது.

மேலும் படிக்க: எல்ஐசி வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி செய்தி! கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

ஹெச்டிஎஃப்சி வங்கியின் குறைந்தபட்ச இருப்புத் தொகை எவ்வளவு?
அதே நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி சராசரி குறைந்தபட்ச இருப்பு வரம்பை நிர்ணயித்துள்ளது, இதில் இந்த மெட்ரோ நகரங்களில் ரூ 10,000, நகராட்சி / பேரூராட்சி நகர்ப்புறங்களில் ரூ 5,000 எனவும், கிராமப்புறங்களில் ரூ. 2,500 எனவும் இருப்பு வரம்பை நிர்ணயித்துள்ளது.

வங்கி அபராதம் எச்சரிக்கை
கை உங்கள் வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை நீங்கள் பராமரிக்கவில்லை என்றால், நீங்கள் அபராதம் செலுத்த வேண்டும். ஆனால் இனி வரும் காலங்களில் வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: வங்கிகளில் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைக்க வேண்டும்... அபராதம் எவ்வளவு? - முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News