மோடி அரசின் Mudra Loan: உங்கள் வணிகத்திற்கு ரூ .10 லட்சம் வரை கடன் பெறுங்கள்

இப்போது நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க விரும்பினால் அல்லது சிறு நிறுவனங்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் அதிகபட்சமாக பத்து லட்சம் வரை கடன் பெறலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 13, 2020, 09:05 PM IST
  • முத்ரா கடன் பல்வேறு நோக்கங்களுக்காக வழங்கப்படுகிறது.
  • இந்த கடன்கள் வருமானம் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குகின்றன.
  • முத்ரா கடனின் கீழ் மூன்று வகையான கடன்கள் வழங்கப்படுகிறது
மோடி அரசின் Mudra Loan: உங்கள் வணிகத்திற்கு ரூ .10 லட்சம் வரை கடன் பெறுங்கள் title=

புதுடெல்லி: தற்போது COVID-19 நெருக்கடி மற்றும் அதனை கட்டுப்படுத்த அமல் செய்யப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக மைக்ரோ மற்றும் சிறு நிறுவனங்களுக்கான வணிகத்தை கடுமையாக சீர்குலைந்துள்ளது. அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்ந்த மோடி அரசு முத்ரா கடன்  (Pradhan Mantri Mudra Loan) திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இப்போது நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க விரும்பினால் அல்லது சிறு நிறுவனங்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் அதிகபட்சமாக பத்து லட்சம் வரை கடன் பெறலாம்.

முத்ரா கடன் என்றால் என்ன?
பிரதான் மந்திரி முத்ரா யோஜனாவின் (PMMY) கீழ், முத்ரா கடன் பல்வேறு நோக்கங்களுக்காக வழங்கப்பட்டு வருகிறது. சொந்தமாக தொழில் தொடங்க விரும்பும் எந்தவொரு இந்திய குடிமகனும் PMMY இன் கீழ் கடன் பெறலாம். உங்கள் தற்போதைய வணிகத்தை விரிவுபடுத்த விரும்பினால், அதற்கு பணம் தேவைப்பட்டால், நீங்கள் பிரதான் மந்திரி முத்ரா திட்டத்தின் கீழ் ரூ .10 லட்சம் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த திட்டம் ஏப்ரல் 2015 இல் தொடங்கப்பட்டது.

முத்ரா கடனை எங்கிருந்து பெறலாம்?
முத்ரா திட்டத்தின் (PMMY) கீழ் உள்ள கடன்களுக்கு, நீங்கள் அரசு அல்லது வங்கி கிளைக்கு விண்ணப்பிக்க வேண்டும். முத்ரா லிமிடெட் நிறுவனத்தில் பதிவுசெய்யப்பட்ட திட்டமிடப்பட்ட வணிக வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் மைக்ரோ நிதி நிறுவனங்கள் போன்றவற்றில் கடன் வாங்கலாம். 

ALSO READ |  மிகவும் பயனுள்ளதாக இருக்கக்கூடிய அரசாங்கத்தின் இந்த 5 திட்டங்கள்....என்ன அவை?

முத்ரா கடனின் கீழ் மூன்று வகையான கடன்கள் வழங்கப்படுகிறது: 
சிசு யோஜனா (Shishu Yojana), கிஷோர் யோஜனா (Tarun Yojana) மற்றும் தருண் யோஜனா (Kishor Yojana) என வகைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த 3 யோஜனா அடிப்படையில் கடன்கள் வழங்கப்படுகிறது. 

சிசு கடன் (Shishu Yojana): இந்த திட்டத்திற்கு ரூ.50,000 கடன்கள் வழங்கப்படுகின்றன.
கிஷோர் கடன் (Kishor Yojana): ரூ. 50,0001 முதல் 5 லட்சம் அடி வரை கடன் கிடைக்கும்.
தருண் கடன்  (Tarun Yojana): தருண் கடன் திட்டத்தின் கீழ் ரூ .5 லட்சம் முதல் ரூ .10 லட்சம் வரை கடன்

ALSO READ |  தொழில் தொடங்க ரூ .10 லட்சம் கடன் தரும் மோடி அரசு; Mudra Loan எவ்வாறு பெறுவது?

"அவசர கடன் உத்தரவாதத் திட்டம்"
இந்த ஆண்டு மே மாதம், "அவசர கடன் உத்தரவாதத் திட்டம்" (Emergency Credit Line Guarantee Scheme) மூலம் எம்.எஸ்.எம்.இ (MSMEs) மற்றும் முத்ரா (MUDRA) கடன் வாங்குபவர்களுக்கு ரூ .3 லட்சம் கோடி வரை கூடுதல் நிதி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News