தொலைத் தொடர்புத் துறைக்குப் பிறகு Retail Sector-ரையும் ஆளப் போகிறார் Mukesh Ambani!!

Reliance Industries, Future Group-ன் சில்லறை வியாபார நிறுவன சொத்துக்களை 24,000-27,000 கோடி ரூபாய்க்கு வாங்க தயாராக உள்ளது என ஆங்கில நிதி நாளேடான Mint-ன் அறிக்கை கூறுகிறது.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Jul 29, 2020, 12:05 PM IST
தொலைத் தொடர்புத் துறைக்குப் பிறகு Retail Sector-ரையும் ஆளப் போகிறார் Mukesh Ambani!!
Zee Media

Reliance Industries, Future Group-ன் சில்லறை வியாபார நிறுவன சொத்துக்களை 24,000-27,000 கோடி ரூபாய்க்கு வாங்க தயாராக உள்ளது என ஆங்கில நிதி நாளேடான Mint-ன் அறிக்கை கூறுகிறது. ஃபியூச்சர் குழுமத்தை, பிரபல ரீடெயில் செயின் Big Bazaar-ன் உரிமையாளரான கிஷோர் பியானி வழிநடத்துகிறார். முகேஷ் அம்பானி ஈ-காமர்ஸ் மற்றும் சில்லறை வணிகத்தில் நுழைய திட்டமிட்டதிலிருந்து அந்தக் குழுமத்தில் கவனம் செலுத்தி வந்தார். இருப்பினும், விலை சிக்கல்கள் காரணமாக இந்த ஒப்பந்தத்தை முடிக்க முடியவில்லை.

இப்போது, ​​ஃப்யூச்சர் குழுமம் (Future Group), ஃப்யூச்சர் ரீடெயில் லிமிடெட், ஃப்யூச்சர் கன்ஸ்யூமர், ஃப்யூச்சர் லைஃப்ஸ்டைல் ஃபேஷன்ஸ், ஃப்யூச்சர் சப்ளை செயின், ஃப்யூச்சர் மார்கெட் நெட்வர்க் ஆகிய பட்டியலிடப்பட்ட தன் ஐந்து நிறுவனங்களை ஒரு நிறுவனமாக இணைக்க முடிவு செய்துள்ளது, - இது      'ஃப்யூச்சர் என்டர்ப்ரைஸ் லிமிடெட்’ என்று அழைக்கப்படும். இந்த நிறுவனம்தான் RIL க்கு சுமார் 27,000 கோடி ரூபாய்க்கு விற்கப்படும்.

RIL-ன் ரீடெயில் பிரிவான ரிலயன்ஸ் ரீடெயில் ஏற்கனவே இந்தியா முழுவதும் சுமார் 12,000 கோடி கடைகளை வைத்திருக்கிறது. மேலும் 20 நிதியாண்டில் 1.63 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. ரிலயன்சின் இந்தப் புதிய கொள்முதல் இந்தியாவில் ரிலயன்சை மிகப்பெரிய சில்லறை வியாபார நிறுவனமாகும். ரிலையன்ஸ் சில்லறை விற்பனை ஆக்கிரமிப்பு விரிவாக்கத்தை எதிர்பார்க்கிறது என்று முகேஷ் அம்பானி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார். சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் வணிகத்திலிருந்து நுகர்வோர் வணிகத்திற்கு ரிலையன்ஸ் செய்த மாற்றம் கடந்த சில காலாண்டுகளின் காலாண்டு வருவாய் முடிவுகளில் தெளிவாகக் காணப்படுகிறது. நிறுவனத்தின் நுகர்வோர் மற்றும் சில்லறை வணிகங்கள் கடந்த சில ஆண்டுகளில் லாபத்தை பதிவு செய்து அதிவேகமாக வளர்ந்துள்ளன. முன்னதாக, தற்போது ரிலையன்ஸ் ஃப்ரெஷ், ரிலையன்ஸ் ஸ்மார்ட் மற்றும் ரிலையன்ஸ் மார்க்கெட் கடைகளில் மட்டுமே கிடைக்கும் பெஸ்ட் ஃபார்ம்ஸ், குட் லைஃப், மாஸ்டி ஓய், காஃப், என்ஸோ, மோப்ஸ், எக்ஸ்பெல்ஸ் மற்றும் ஹோம் ஒன் போன்ற பிரத்யேக பிராண்டுகள் உள்ளூர் கடைகளில் கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்தது. விற்பனை மற்றும் வருவாயை அதிகரிக்கும் பொருட்டு, நிறுவனம் விநியோகஸ்தர்களின் உதவியுடன் தயாரிப்புகளை விநியோகிக்கும்.

ஜியோவின் கிராமப்புற ஊடுருவல் மற்றும் ரிலையன்ஸ் சில்லறை விற்பனையின் உள்கட்டமைப்பைப் பயன்படுத்துவதை ரிலையன்ஸ் நோக்கமாகக் கொண்டுள்ளது - இது தற்போதுள்ள உள்கட்டமைப்பைக் கொண்டிருக்கும்- சிறிய சில்லறை விற்பனையாளர்களின் உதவியுடன் கிராமப்புறங்களுக்கு மின்வணிகம் எடுத்துச் செல்லப்படும்.

முன்னதாக, பெரிய ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் அதிக அளவு தள்ளுபடிகளை வழங்கி நுகர்வோரை ஈர்த்தனர். இந்த நெறிமுறையற்ற நடைமுறையின் மூலம் சிறு சில்லறை விற்பனையாளர்கள் வணிகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த சிறிய சில்லறை விற்பனையாளர்களுக்கு ரிலையன்ஸ் அதிக முக்கியத்துவம் கொடுக்க வாய்ப்புள்ளது.

ALSO READ: உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் வாரன் பபெட்டை பின்னுக்கு தள்ளிய முகேஷ் அம்பானி

தனது தந்தையைப் போலவே, முகேஷ் அம்பானியும் சந்தைகளில் ஏகபோகத்திற்காக பணியாற்றுவதாக அறியப்படுகிறது. வியாபாரத்தின் ஆரம்ப நாட்களில், அவரது தந்தை நூல் தயாரிக்கும் தொழிலை ஏகபோகப்படுத்தினார். முகேஷ் அம்பானி (Mukesh Ambani) சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் வியாபாரத்திலும் அவ்வாறே செய்துள்ளார். இப்போது, ​​நிறுவனம் தொலைத்தொடர்பு மற்றும் சில்லறை வணிகத்தையும் ஏகபோகப்படுத்த முயற்சிக்கிறது.

ALSO READ: Amazon, Walmart நிறுவனக்களுக்கு சவாலாக உருவெடுக்கும் Reliance …!!!