17 வயதில் பெண் செய்த 'புரட்சி'... இப்போ ரூ. 8500 கோடி வருமானம்... அது என்ன நிறுவனம் தெரியுமா?

Business News: தனது குடும்ப தொழிலுக்குள் 17 வயதில் நுழைந்த இளம் பெண் ஒருவர் தற்போது அந்த நிறுவனத்தை சுமார் ரூ.8500 கோடி ஆண்டு வருமானம் தரும் அளவிற்கு மாற்றியுள்ளார். அந்த பெண் யார், அது என்ன நிறுவனம், அதை அவர் எப்படி செய்தார் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இதில் காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jun 24, 2024, 02:57 PM IST
  • 1985ஆம் ஆண்டு Parle Agro தொடங்கப்பட்டது.
  • இதனை பிரகாஷ் சவுகான் என்பவர் நிறுவினார்.
  • 2003இல் நதியா சவுகான் இந்த தொழிலுக்குள் வந்தார்.
17  வயதில் பெண் செய்த 'புரட்சி'... இப்போ ரூ. 8500 கோடி வருமானம்... அது என்ன நிறுவனம் தெரியுமா? title=

Business News In Tamil: 17 வயதில் நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள் என யோசித்தால் பெரும்பாலானோர் பள்ளி இறுதியாண்டு அல்லது கல்லூரி முதலாமாண்டில் படித்துக்கொண்டிருப்பார்கள். கல்வியை தாண்டி அவர்களின் வாழ்க்கை என்னவாக இருந்திருக்கும் என யோசித்தால் இப்போது பெரும்பாலும் நண்பர்களுடன் சுற்றுவதையும், சமூக வலைதளங்களில் அரட்டை அடிப்பதையுமே வாடிக்கையாக வைத்திருப்பார்கள்.

இதில் தவறு ஏதும் இல்லை. இயல்பாக இருப்பதில் தவறு என்ன இருக்கிறது. ஆனால், நதியா சவுகான் என்பவர் அவரின் 17 வயதில் அவரின் ஃபேமிலி பிசினஸில் இணைந்து வித்தியாசமாக வாழ்க்கை பாதையை தேர்வு செய்து தற்போது பெரிய தொழிலதிபராக மாறியுள்ளார். ஆம், இவரின் குடும்ப தொழிலை ஆண்டுக்கு 8500 கோடி ரூபாய் வருமானம் தரும் ஒரு பெரிய ராஜாங்கமாக மாற்றியுள்ளார். இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம். 

நதியா சௌகானின் யோசனை

1985ஆம் ஆண்டு பிரகாஷ் சவுகான் என்பவரால் Parle Agro என்ற இந்திய உணவு மற்றும் குடிபான நிறுவனம் தொடங்கப்பட்டது. பிரகாஷ் சௌகானின் மகள்தான் நதியா சௌகான். நதியா 2003ஆம் ஆண்டு அந்த நிறுவனத்தில் இணைந்தார். அப்போது அந்நிறுவனத்திற்கு 300 கோடி ரூபாய் வருமானம் வந்துகொண்டிருந்தது. அப்போது, நதியா அவர் நிறுவனத்தை உன்னிப்பாக கவனித்ததில் அந்நிறுவனம் ஒரே ஒரு தயாரிப்பை மட்டுமே நம்பியிருந்தது. அதே வேறு ஒன்றுமில்லை Frootie பானம்தான்.

மேலும் படிக்க | ஒருமுறை முதலீடு செய்தால் போதும்! மாதம் ரூ. 12000 ஓய்வூதியம் பெறலாம்!

நதியா இதில் மாற்றம் கொண்டு வர விரும்பினார். ஒரே ஒரு தயாரிப்பு என்றில்லாமல் பல தயாரிப்புகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும் என விரும்பினார். அப்போது அவர் 2005இல் சந்தைக்கு கொண்டு வந்ததுதான் Appy Fizz. இது மாபெரும் வெற்றியே பல்வேறு தயாரிப்புகளுக்கு பாதை அமைத்து கொடுத்து, அந்நிறுவனத்திற்கு பெரும் வருமானத்தை கொண்டு வந்தது.

புத்துணர்ச்சி கண்ட Frooti

புது புது விஷயங்களை செய்ய வேண்டும் என்ற நதியாவின் ஆர்வம்தான் இந்தியாவின் முதல் பேக்கிங் செய்யப்பட்ட எலுமிச்சை சாறை சந்தைக்கு கொண்டு வந்தது. தொடர்ந்து இவரின் சகோதரி உடன் இணைந்து பல முதலீடுகளை செய்து 2015இல் Frooti பானத்திற்கு என புதிய தயாரிப்பு ஆலையை தொடங்கி அதற்கு புத்துணர்ச்சி ஊட்டினார். அப்போது ஷாருக்கானை அதன் விளம்பரத் தூதராகவும் கொண்டார். 

இவரின் தலைமையின் கீழ் Parle Agro நிறுவனம் பேக்கிங் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில் தயாரிப்பை (Bailey) மேற்கொண்டது. இது வியாபாரம் 1000 கோடி ரூபாய்க்கு உயர்ந்து. மேலும், இவர் ஒரு நீண்ட கால திட்டத்தை நோக்கியும் செயல்பட்டு கொண்டிருக்கிறார். 2030ஆம் ஆண்டுக்குள் தனது பிராண்டின் மதிப்பை 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு உயர்த்த வேண்டும் எனவும் 40 லட்சம் கடைகளை தனது தயாரிப்பு சென்றடைய வேண்டும் எனவும் திட்டமிட்டுள்ளார். இவரின் தலைமையில் தற்போது அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களையும் கவரும் ரூ.5 Frooti சந்தையில் களமிறங்க உள்ளது. 

தலைகீழ் வளர்ச்சி

இவர் தற்போது Parle Agro நிறுவனத்தின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி மற்றும் இணை நிர்வாக இயக்குனராக உள்ளார். இந்நிறுவனம் தலைகீழ் வளர்ச்சியை பெற்றதற்கு இவரின் சிறந்த செயல்பாடுகளும் காரணம் எனலாம். குறிப்பாக 2017ஆம் ஆண்டில் 4200 கோடியாக இருந்த ஆண்டு வருமானத்தை, 2023ஆம் ஆண்டில் ரூ.8500 கோடியாக உயர்த்திக்காட்டியுள்ளார்.      

மேலும் படிக்க | SIP: மாதம் ரூ.2000 முதலீடு போதும்... அதனை ₹ 3 கோடியாக மாற்றும் மேஜிக் பார்முலா..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News