என்.பி.எஸ் கணக்கு திறப்பதற்கு காகித ஆவணமாக ஆதார் அட்டை காட்டப்பட வேண்டியதில்லை. இந்த முறையில் கே.ஒய்.சி ஆவணங்களை PFRDA அனுமதித்துள்ளது!!
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை ஆணையம் PFRDA நேற்று தேசிய ஓய்வூதிய முறைமையின் (என்.பி.எஸ்) கீழ் புதிய சந்தாதாரர்கள் உள்நுழைவதற்கு, ஆதார் அடிப்படையிலான காகித ஆவண முறையல்லாத கே.ஒய்.சி வடிவ செயல்முறைக்கு அனுமதி அளித்துள்ளது.
ஓய்வூதிய நிதி ஒழுங்கு முறை ஆணையம் PFRDA, நேற்று தேசிய ஓய்வூதிய முறைமையின் (என்.பி.எஸ்) கீழ் புதிய சந்தாதாரர்களை உள்நுழைவதற்கு ஆதார் அடிப்படையிலான காகித ஆவண முறையல்லாத கே.ஒய்.சி செயல்முறைக்கு அனுமதி அளித்துள்ளது. முன்னதாக, என்.பி.எஸ் கணக்குகளைத் திறப்பதற்கு, ஒப்புதலுடன் புதிய சந்தாதாரர்களின் ஆஃப்லைன் ஆதாரம் பயன்படுத்தப் பட்டு வந்ததது. ஆனால்
இப்போது e-NPS / பாயிண்ட்ஸ் ஆஃப் பிரசன்ஸ் வசதிகளை அனுமதித்துள்ளதாக PFDRA கூறியுள்ளது. ஆதார் அடிப்படையிலான ஆஃப்லைன் காகிதமில்லாத KYC சரிபார்ப்பு 12 இலக்கம் கொண்ட காகித நகலை சமர்ப்பிக்கும் நடைமுறை அகற்றப்பட்டுள்ளது. புதிய நடைமுறையின் கீழ், ஒரு விண்ணப்பதாரர் கடவுச்சொல் பாதுகாப்புடன் கூடிய ஆதார் XML கோப்பு மூலம் UIDAI தளத்தில் eNPS ல் நுழைந்து பதிவிறக்கம் செய்து, அதை தனது கேஒய்சியாக பயன் படுத்தலாம்.
"இந்த நடைமுறையில் KYC சரிபார்ப்பு உடனடியாக சரிபார்க்கப்படுகிறது. NPS கணக்கிற்கு உடனடி செயல்வடிவம் கொடுக்க முடிகிறது. மேலும் சந்தாதாரர் NPS-க்கான தனது பங்களிப்பை உடனடியாக செலுத்த உதவுகிறது" என்று PFRDA கூறியுள்ளது.
பாயிண்ட்ஸ் ஆஃப் பிரசென்ஸ் (பிஓபி) மூலமும் என்.பி.எஸ் கணக்குகளைத் திறக்கும் வசதியைப் பெற முடியும். இந்த நடைமுறையில் சமர்ப்பிக்கப்படும் KYC தரவுகள், இயந்திரம் படிக்கக்கூடிய XML வடிவத்தில் உள்ளன. இதில் UIDAI டிஜிட்டல் முறையில் கையொப்பமிடப்படுகிறது. மேலும், கோப்புகளின் புள்ளிவிவர உள்ளடக்கங்களை சரிபார்த்து அவை உண்மையானது என்று சான்றளிக்கவும் ஈஎன்பிஎஸ் / பிஓபிக்கள்
அனுமதிக்கப்பட்டுள்ளன.
காகித ஆவண முறையல்லாத ஆதார் சார்ந்த KYC ஐ அனுமதிக்க PFRDA இன் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ள, என்.எஸ்.டி.எல் மின்- தலைமை நிர்வாக அதிகாரி ககன் ராய் கூறுகையில், 'காகித ஆவண முறை அல்லாத ஆதார் அடிப்படையிலான கே.ஒய்.சி செயல்முறை மூலம் , என்.பி.எஸ் கணக்கைத் திறக்க அனுமதிக்கும் பி.எஃப்.ஆர்.டி.ஏ முயற்சியானது, மிக பொருத்தமான மற்றும் சரியான சமயத்தில் உள்ள தேவையாகும். ஆதார் மூலம் அங்கீகரிக்கப்படும் நடைமுறை மிகவும் பாதுகாப்பானது. இந்த நடவடிக்கை இந்தியாவில் என்.பி.எஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், ஊடுருவலை தவிர்க்க உதவும். உலகெங்கிலும், தொழில்நுட்ப ரீதியிலான, காகித ஆவண முறை அல்லாத ஒரு நடைமுறையை நோக்கி ஒரு நகர்வு ஏற்படுவதை நாம் பார்க்கிறோம். இது வாடிக்கையாளரின் நுழைவு செயல்முறையை துரிதப்படுத்துவதோடு, வாடிக்கையாளரின் பயன்பாட்டு அனுபவத்தை மேம்பட்ட தரம் உள்ளதாக்குகிறது. ஒரு எளிய, பாதுகாப்பான மற்றும் தடையற்ற நடைமுறை வடிவம் கொண்ட e-NPS அனைவரின் பயன்பாட்டுக்கு ஏற்றதாக மாறும். குறிப்பாக , தொழில்நுட்ப துறையில் உள்ள இளைஞர்களின் விருப்ப தேர்வாக இது இருக்கும். "
-(மொழியாக்கம்) சரிதா சேகர்.